27 பிப்ரவரி 2016

சங்கமம் தொலைக்காட்சியில் "தமிழ்" குறித்த நிகழ்வரங்கம்

நேற்றய தினம் கலையன்பன் அவர்களின் சங்கமம் தொலைக்காட்சி சார்பாக நடந்த நிகழ்வில் முதன் முதலாக கலந்து கொண்டதிலேயே நெஞ்சம் மகிழ்ந்துபோனது, எத்தனை திறமையாளர்கள்.. அத்தனை நிகழ்வுகளும் அருமை. நிறைய அழைப்புகளுக்கு மத்தியிலும் இத்தனை நாள் ஏன் வராமல் இருந்தோம் என இதயம் கேட்டது, தமிழார்வலர்கள், பல்துறை வல்லுனர்களோடான சங்கமத்தில் இணைத்ததற்கு கலையன்பன் அவர்களுக்கும், சங்கமம் தொலைக்காட்சி குழுவினருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்.
நிகழ்வில் பல சிறப்பான கவிஞர்கள் பங்குபெற்ற தலைப்பு கொடுத்து உடன் கவிதை எழுதும் போட்டியில் என் கவிதை சிறப்பானது என தேர்வு செய்து பரிசளித்தமைக்கும் மகிழ்ச்சிகள்.
இனிதே இதயம் இணைந்து பயணம் தொடர்வோம்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

04 பிப்ரவரி 2016

தி இந்து நாளிதழில் வஹ்ஹாபிசம் குறித்த இன்றைய சமஸ் கட்டூரை

இன்றைய இந்து-வில் தோழர் சமஸ் அவர்களின் வஹ்ஹாபிசம் குறித்த மிக சிறப்பான கட்டூரையை ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி ஓகோ.. ஆஹா என்போர் படித்துப்பாருங்கள்.. மிக எதார்த்தமான இந்த கட்டூரையை நீங்கள் நடுநிலையோடு படித்தால் பயனடைவீர்கள்.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பி, மாமன் மச்சானாக வாழ்ந்து வரும் நாட்டில் பரவும் ஆபத்தின் இன்றைய மிக மோசமான சூழலை கட்டூரை அப்படியே அப்பட்டமாக மிக எதார்த்தமாக எடுத்துரைக்கிறது, இது படித்துவிட்டு கடந்து போகக்கூடிய கட்டூரை அல்ல, இதனை படித்து சிந்தித்துப்பார்த்து வஹாபிஸம் என்ற நஞ்சை புறந்த தள்ளவேண்டியது இஸ்லாமியர்களுடைய வசம் இருக்கும் மிகப்பெரிய கடமையும், பொறுப்பும் ஆகும். ஆனால் எத்தனை பேர் இதனை நடுநிலை கட்டூரையாக அணுகுவார்கள் என்பதில் தான் பிரச்சனை அந்த அளவுக்கு மூளைச் சளவை செய்திருக்கிறார்கள்.
நமது பன்முக மண்ணுக்கு எந்த விதத்திலும் ஒத்துவராத மேலும் இஸ்லாத்தின் மூல அடிப்படைகருத்துக்கும், நபிகள் நாயகம் போதித்த மூல கருவுக்குமே வஹ்ஹாபியிசம் எதிரானது. தமிழகத்தின் பெரும்பான்மை முஸ்லிம்கள் சமஸ் சொல்வது போல் வஹ்ஹாபிசத்தினை ஏற்காதவற்கள் ஆனால் இன்றைக்கு வஹ்ஹாபிச கருவிகள் இளைஞர்களை, பெண்களை, குழந்தைகளை குறிவைத்து செய்ல்பட்டு கெடுப்பதே துர்ரஷ்டம். இவ்வாறு பெருகும் வஹ்ஹாபிசத்தால் நாட்டுக்கும், வீட்டுக்கும், தனிமனிதனுக்கும் கேடு என்பதே எதார்த்தம்.
அறம்சார்ந்த மண்ணுக்கு நல்வழிகாட்டும் அற்புதமான கட்டுரையை எழுதிய சமஸ் Samas மற்றும் பதித்த இந்து நாளிதழுக்கும் நெஞ்சாந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

01 பிப்ரவரி 2016

இறுதிச்சுற்று



படத்தை ஹிந்தியில் தான் பார்த்தேன், ஒரே மாதிரியாக காதலை மையப்படுத்தியே எடுக்கப்படும் தமிழ் படங்களிலிருந்து மாறுபட்டு தடைகளை தாண்டி சாதிக்கும் பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

குத்துச்சண்டை பயிற்சியாளராக வரும் மாதவன், குத்துச்சண்டை போட்டிக்காக தயாராகும் அறிமுக நாயகி ரித்திகா சிங், காமெடி மற்றும் குணச்சித்திரம் என இரண்டையும் தன்னகம் வைத்து கலக்கி இருக்கும் நாசர், மிகப்பொருத்தமான இசையை அளித்திருக்கும் சந்தோஷ் நாராயண், குத்துச்சண்டை வீரர் ஜாகிர் உசேன், ஒளிப்பதிவாளர் சதீஷ் சூர்யா இவர்களையெல்லாம் இயக்கி மிக நேர்த்தியாக படத்தை கொடுத்த இயக்குனர் சுதா எல்லோரும் அசத்தி இருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய படம்.

இறுதிச்சுற்றின் இறுதிக்காட்சி உண்மையிலேயே உணர்ச்சி வசப்படுத்தி கண்கலங்க வைத்துவிட்டார்கள் எனலாம். தன்னம்பிக்கையை பேசும் படம். விரக்தியை விரட்டியடி என சொல்லி இருக்கும் படம். தமிழில் இது போன்ற படங்கள் வந்தால் நலம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா