படத்தை ஹிந்தியில் தான் பார்த்தேன், ஒரே மாதிரியாக காதலை மையப்படுத்தியே எடுக்கப்படும் தமிழ் படங்களிலிருந்து மாறுபட்டு தடைகளை தாண்டி சாதிக்கும் பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
குத்துச்சண்டை பயிற்சியாளராக வரும் மாதவன், குத்துச்சண்டை போட்டிக்காக தயாராகும் அறிமுக நாயகி ரித்திகா சிங், காமெடி மற்றும் குணச்சித்திரம் என இரண்டையும் தன்னகம் வைத்து கலக்கி இருக்கும் நாசர், மிகப்பொருத்தமான இசையை அளித்திருக்கும் சந்தோஷ் நாராயண், குத்துச்சண்டை வீரர் ஜாகிர் உசேன், ஒளிப்பதிவாளர் சதீஷ் சூர்யா இவர்களையெல்லாம் இயக்கி மிக நேர்த்தியாக படத்தை கொடுத்த இயக்குனர் சுதா எல்லோரும் அசத்தி இருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய படம்.
இறுதிச்சுற்றின் இறுதிக்காட்சி உண்மையிலேயே உணர்ச்சி வசப்படுத்தி கண்கலங்க வைத்துவிட்டார்கள் எனலாம். தன்னம்பிக்கையை பேசும் படம். விரக்தியை விரட்டியடி என சொல்லி இருக்கும் படம். தமிழில் இது போன்ற படங்கள் வந்தால் நலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக