வழுத்தூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழுத்தூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 மார்ச் 2016

வழுத்தூர் ஷாஹ் முஹம்மது வலியுல்லாஹ் 2016 -ம் ஆண்டு உரூஸ்



தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மெஞ்ஞானப்பெருமகான், சோழ மன்னனின் தனிமரியாதைக்குரிய ஞானியாகத்திகழ்ந்த பெருமேதை, பகுதாதிலிருந்து தென்னகம் வந்த இறைநேசர் தஞ்சை தரணியெங்கும் ஞானமணம் மணக்கவைத்த வள்ளல் நாகூர் ஷாகுல் ஹமீதரசர் அவர்கள் தங்களின் பயணத்தில் ஜியாரத் செய்து சென்ற பெருமகனார் ஹள்ரத் அஷ்ஷைகு முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உரூஸ் முபாரக் வெகு விமர்சையாக நடந்தேறியது. பெருவாரியான மக்கள் நிகழ்வில் கலந்துகொன்டு இறையருள் ஆனந்த பெருநெகிழ்வடைந்தனர். இன்று காலை ஹந்தூரி நிகழ்வும் சிறப்பாக நடந்தது.

நிகழ்வில் அருளிசை அரசு எஸ்.எம். அபுல்பரக்காத் அவர்களின் சூஃபி இஸ்லாமிய இசைநிகழ்ச்சியும் நடைபெற்றது குறிப்பிட தக்க செய்தி. மாஷா அல்லாஹ்.
விழா சிறக்க துணைநின்ற எல்லா அன்பர்களுக்கும் இறைவன் நிறையருள் புரிவானாக. ஆமீன்.



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

11 ஜூலை 2014

ஹனீபா குரல் சுலைமான்

கேட்டுப்பாருங்கள் வழுத்தூர் சுலைமானின் பாடலை

இவர் மதிப்பிற்குரிய பாடகர் நாகூர் ஹனீபா அவர்களால் ஈர்க்கப்பட்டவர் அவரது அத்தனை பாடல்களையும் அவரைப்போலவே பாடுவார், எங்கள் ஊரிலும் சுற்றுப்புறங்களிலும் நடக்கும் சுபகாரியங்களில் ஹனீபாவின் பாடல்கள் லைவாக இவரது குரலில் தான் ஒலிக்கும், எங்கள் ஊர் மதரஸா பள்ளியில் இவரது குரலில் அடிக்கடி பாங்கின் ஓசையை ஹனீபா வாய்ஸில் கேட்டுமகிழலாம். பள்ளிக்கூட நிகழ்ச்சி மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளிலும் இந்த ஹனீபா சுலைமான் ஆஜராகி பாடாமல் இருக்கமாட்டார். சுலைமான் எல்லோரிடமும் அழகாக நகைச்சுவையோடு பழகும் பண்பு கொண்டவர், நான் உட்பட எல்லோரிடமும் மிகுந்த பாசமும் நட்பும் பாராட்டுபவர்.

தற்போது வேலை நிமித்தமாக அபுதாபியில் வசிக்கிறார், ரூம் நண்பர்கள் ரஜீக், பாவாஜி, ஷாஜஹான், மற்றும் பலர் இந்த கிளிப்பை பாடச்சொல்லி தரவேற்றி உள்ளார்கள்.

வாழ்த்துவோம் சிறப்பான குரல்வளம் கொண்ட ஹனீபா சுலைமானின் பிரகாசமான எதிர்கால வாழ்வுக்காய்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

26 செப்டம்பர் 2013

சிக்கந்தர் படிப்பகம், சரபோஜிராஜபுரம் வழுத்தூர்.



கீழ்கண்ட கவிதை தஞ்சை மாவட்டம் வழுத்தூர் சாலைத் தெருவில் செளக்கத்துல் இஸ்லாம்  பாலிய முஸ்லிம் சங்கம்  மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே முன்பு இருந்த  "சிக்கந்தர் படிப்பகம்" பற்றியதாகும், சிறப்பாக இயங்கி வந்த அந்நூல்கம் பின்னாளில்  நலிவடைந்த நிலையில் இருந்த காரணத்தால் அதை மீட்டெடுக்க வேண்டி 1996-97-ல் மறைந்த சாலைத்தெரு துருவத்தார் ராஜ் முஹம்மது அவர்கள் மகத்தான களப்பணியை மேற்கொண்டார். அதில் பலரும் சிறப்பாக பங்கெடுத்தனர். (அதைப்பற்றிய பதிவு ஒன்றை கண்டிப்பாக எழுத வேண்டுமென என் மனம் நாட்டம் கொண்டுள்ளது) அத்தருணத்தில் அவரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கவிதை பெரிய தாளில் (Chat paper) எழுதி தொங்க விடப்பட்டு அது சில ஆண்டுகள் வரை அங்கேயே நிலைத்திருந்தது. அதை பதிவு செய்யவே இங்கே இடுகையாக்கினேன்.

இளஞ்சிங்கங்களே! 
சமுதாய அங்கங்களே!! 

சிக்கந்தர் படிப்பகம் 
சிந்தனை சிறகுகளின் சிம்மாசனம்,
அறிவின் ஆலயம்,
நாளிதழ், வார இதழ் , மாத இதழெல்லாம்
பீடுநடை போட்டுவரும் நூலகம்.

வந்தாரை வாழவைக்கும்
வழுத்தூரில் வகையின்றி நம்
படிப்பகமும் வாடலாமோ?!

நம் முன்னோர் 
செதுக்கி வைத்த சிற்பமல்லவா - அது 
சிறப்பிழந்து போகலாமோ?

மலர் பொய்கையாய் இருந்த போது 
மகிழ்ச்சிக் கனாக் கண்டு 
தாதுண்ண வரும் வண்டுகள் போல்
தேடி வந்த தகைசால் பெரியீர்!
தார்பாலையாய் நூலகமும் 
தரம்மாற தலையசைக்கலாமோ?

ஆயிரம் நூல்கள் இருந்ததே
பாயிரம் பாடத்தான் ஆளில்லை!
ஆன்மீகம், அறிவியல், அரசியல்
பால்நிகர் வரலாறு, இலக்கிய படைப்புக்கள்
எதில் குறை?

பொழிவு பெற வேண்டுமானால் 
பொருள் தாரீர்! - இன்றேல்
பொன்னகை நிகர் செயல் தாரீர்!! - இன்றேல்
பொதிகை தென்றல் நிகர் சொல் தாரீர்!!!

-ஜா.முஹையத்தீன் பாட்ஷா



என் நோட்டு புத்தகத்தில் அன்று எழுதி வைத்திருந்த அந்த வரிகள் உங்கள் பார்வைக்கு.