காலையில் கண் பட்டதெல்லாம் மலர்மாலை தந்தது
சாலையோர புல் கூட சலாம் சொன்னது
அடி வைத்த மண் அருமை மகனே என்றணைத்தது
காற்றின் இறகுகள் மனதை வருடி இதமான ஊற்றைத் திறந்தது
வேற்று கிரகமாயிருதும் விடியல் நிலா வாழ்த்திசைத்தது.
அகமது குளிர முகமது பூத்தது.
இதில்..
நாளின் இனிமை எல்லாம் கொன்ற
வெற்று மனிதன் இவனை மட்டும்
ஏன் பார்த்தோமென்றானது.
*
உள்ளூர புன்னகைத்தாலும்
எள்ளு வெடிக்கும் முகம் காட்டுகிறான்,
வீணானது அவன் மானுடப்பிறப்பு.
06-02-2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக