நேற்றைய ஞாயிற்றுக்கிழமை 18.09.2022 அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் கானல் / Kaanal குழுமத்தின் சார்பாக கோலாகல நிகழ்வாக "ஏர்டெல் சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆஃபினாவுக்குப் பாராட்டு விழா மற்றும் டாக்டர். 'தெரிசை' சிவா எழுதிய 'ருபினி' புதின புத்தக விமர்சனக் கூட்டம் அபுதாபி செட்டிநாடு உணவகத்தில் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் சார்பாக ஏற்பாடு செய்திருந்தார் பிர்தெளஸ் பாஷா அவரோடு அபுதாபி வாழ் நம் குழும நெஞ்சங்கள் Subhan Peer Mohamed Sivasankari Vasanth குடும்பத்தினர், Raja Rajaram Mohamed Firthouse Velmurugan Renganathan கைகோர்த்திருந்தனர்.
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக
Dr. Balaji (Counsellor Indian Embassy Abu Dhabi), Mr.Ajith Kumar (BLS Head UAE), Mr. Natarajan ISC (President Abu Dhabi), Mr. Nawshad Ali (Vice President Etisalat UAE), Uma Pugazhenthi (Entrepreneur) எனப்பலர் கலந்து சிறப்பித்தனர், நிகழ்வை எங்கள் குழுமத் தலைவர் அண்ணாச்சி ஆசிப் மீரான் தொகுத்தளிக்க சிறப்பான காலை அமர்வாக நடந்தேறியது. விருந்தினர்கள் ஆஃபினாவை பாராட்டிப் பேச பிறகு குழுமத்தின் சார்பிலும், கேலக்ஸி பதிப்பக சார்பிலும், FJ Tourism நிறுவனத்தின் சார்பிலும் நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டது நிகழ்வில் சூப்பர் சிங்கர் ஆஃபினா முதல்மரியாதை படத்தின் ராசாவே ஒன்ன நம்பி பாடலையும், றெக்கை படத்தின் கண்ணக்காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ற பாடலையும் பாடி அசத்தினார்.
பிறகு அடுத்த அமர்வாக நண்பர் டாக்டர். 'தெரிசை' சிவா Siva Sai எழுதிய 'ருபினி' புதின புத்தக விமர்சனக்கூட்டம் மதிய உணவிற்கு பிறகு ஆரம்பமானது. நூல் விமர்சனம் நடக்க எப்போதும் போல நகைச்சுவை மிளிர சபையை அண்ணாச்சி Asif Meeran நடத்த மூத்த எழுத்தாளர் சுரேஷ் Suresh Babu , சுப்ஹான் அண்ணன்Subhan Peer Mohamed, பாலாஜி Balaji Baskaran , Bilal Aliyar பிலால், Jazeela Banuஜெஸிலா, Mohamed Firthouseபிர்தெளஸ், பிரபாவதி, Balkarasu Sasi Kumarபால்கரசு, கணேஷ் மற்றும் நானும் J Mohaideen Batchaபுத்தத்தைப் பற்றி பேசினோம். குழும வழக்கப்படி எப்போதும் போல கருணைக்கு இடமில்லாமல் கிடா வெட்டு நடக்கும் என சிவா உட்பட எல்லோரும் எதிர்பார்த்திருக்க விமர்சனங்கள் மிக மென்மையாகவும் பெரிய அளவிற்கு துவைத்து தொங்கப்போடாமலும் பாராட்டுக்களையும் மென்மையான விமர்சனங்களையும் பெற எழுத்தாளர் முகத்தில் தேஜஸ் மிளிரும் புன்னகை தாண்டவமாடியது. பிறகு அதே சிரித்த முகத்துடன் ஏற்புரை தந்தார்.
அதே விழாவில் நண்பர் பால்கரசு பிறந்தநாளைக்கொண்டாடி கேக் வெட்டி விழாவை முப்பெரும் விழாவாக்கி மகிழ்ந்தோம்.
அபுதாபிக்கு நுழைந்ததும் மோர் வழங்கியதிலிருந்து மதியம் கல்யாண வீட்டு சாப்பாடு தோற்கும் சிறப்பான மட்டன் பிரியாணி மற்றும் இதர உணவுகள் மாலை டீ, காபி, சுடச்சுட பக்கோடா என கவணித்து திக்குமுக்காட செய்துவிட்டனர். துபாயிலிருந்து சென்ற எங்களுக்கு ரியாஸ் Riyas Mohamed Ali அவர்கள் அக்கரையுடன் சிறப்பான எலக்காய் இஞ்சி டீ வீட்டிலிருந்தே செய்தும், பிறகு ஃபலாபில் சவர்மாவும் கொண்டு வந்து காலைச்சிற்றுண்டியாக அசத்தினா. துபாய் – அபுதாபி மினி பஸ்ஸிலும் அண்ணாச்சி, மஜீத் காரைக்குடிமஜீத் அண்ணன், சுல்தான் அண்ணன், பாலாஜி, சிவா, ஜெஸிலா & சாந்தி Shanthi Shanmugam மைக் செட்டில் பாட்டுகள் பாட குதூகளத்திற்கு குறைவில்லை.
நேற்று உண்மையான விடுமுறை கொண்டாட்டம், மகிழ்ச்சியே நிறைந்திருந்தது. எல்லோருக்கும் நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக