இசைமுரசு பிறந்தநாள் சிறப்பு பாடல்
சிம்மக்குரலோன் இசைமுரசு E.M.நாகூர் ஹனிபா அவர்களின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் பாவரசு வழுத்தூர் ஜா.முஹைய்யதீன் பாட்ஷா அவர்களின் வரிகளில், இஸ்லாமிய பாடகர் முகவை S.A.சீனி முகம்மது அவர்களின் குரலில், இசையமைப்பாளர் கீழக்கரை அப்துல் ரஹ்மான் அவர்களின் மெட்டு மற்றும் இசையில் உருவான சிறப்பு பாடல்.
_______________________________________________________________________
பாடல் வரிகள்
பல்லவி:
பாட்டெடுத்துப் பாட வந்தேன் பெரும் பாடகரைப் பாட வந்தேனே..
சொல்லெடுத்து சோபனத்தை நான் சொல்லிச் சொல்லி வாழ்த்திட வந்தேனே..
அனுபல்லவி:
இசைமுரசே இன்ப முரசே
திசை எங்கும் பேர் விளங்கும் தீனின் முரசே
கோடையிடியே கொள்கை முரசே நாகூர் ஹனிபா பாட்டுக்கரசே
கோரஸ்:
இறைவன் அவர் புகழ் நிலைக்க வைத்தான்
இறவாப் புகழ் பெற ஆக்கி வைத்தான்
சரணம்:1
அல்லா ரசூலை பாட்டில் வைத்தே
எல்லார் மனதில் சேர்த்தவரே
நல்லார் பெருமை நாளும் பாடி
வெல்லும் ஞானம் சொன்னவரே
அறிஞர் பலரும் பாடல் எழுத
அமுதக் குரலில் இசைத்தவரே
மறையின் ஞானம் நபியின் போதம்
நாளும் பொழுதும் இசைத்தவரே
இஸ்லாம் உரைத்தது அவர் பாட்டு
ஈமான் பெருகிடும் அதைக் கேட்டு
வரலாறு சொன்னது அவர் பாட்டு
வழிகாட்டி நெறியூட்டும் அவர் பாட்டு
திருமண வீடா ஹனீபா
திருவிழா நிகழ்வா ஹனீபா
பட்டிதொட்டி எங்கும் ஹனீபா
பாட்டிக்கும் பேத்திக்கும் ஹனீபா தான்
--
இறைவன் அவர் புகழ் நிலைக்க வைத்தான்
இறவாப் புகழ் பெற ஆக்கி வைத்தான்
--
பாட்டு எடுத்துப் பாட வந்தேன்...
சரணம் 2:
மண்ணைக் காக்க மொழியைக் காக்க
விண்ணும் அதிர முழங்கியவர்
எண்ணத் தூய்மை கொண்டே திராவிட
இயக்கத்திலே இயங்கியவர்
பெரியார் அண்ணா கலைஞர் வழியில்
இனங் காக்கும் உணர்வாளர்
ஜாதிமத எல்லை கடந்தே
மனிதம் சொன்ன மகராசர்
மக்கள் கூடிட அவர் பாட்டு
மாநாட்டு நிகழ்வா அவர் பாட்டு
இயக்கம் வளர்த்ததும் அவர் பாட்டு
இதயத்தில் இனிக்குது அவர் பாட்டு
குரலில் கம்பீரம் ஹனீபா
மொழியின் மிடுக்கும் ஹனீபா
இனத்தின் சின்னம் ஹனீபா
இறையின் பரிசு ஹனீபா தான்..
--
இறைவன் அவர் புகழ் நிலைக்க வைத்தான்
இறவாப் புகழ் பெற ஆக்கி வைத்தான்
--
பாட்டு எடுத்துப் பாட வந்தேன்...
- ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக