கடந்த 15-12-2011 வியாழன் அபுதாபியில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் பொதுக்குழு கூடியது. எப்போதும் முனைப்புடன் ஏற்பாடுகளை செய்யும் நம் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் இம்முறையும் மிகச்சிறப்பாக விழா ஏற்பாடுகளை
சகோதரர் எச்.ஏ.சி.ஹமீது மற்றும் சமூக ஆர்வளர்கள் துணையுடன் செய்திருந்தார்.
விழா சரியாக மாலை 8.22க்கு ஆரம்பமாயிற்று நான் புஜைராவிலிருந்து மதியம் புறப்பட்டு துபை வந்து பிறகு அன்பர் முதுவை ஹிதாயத்தின் உதவியுடன் ஹமீது யாசினின் வாகனத்திலும் பிறகு ஜமால் அவர்களின் வாகனத்திலுமாக நண்பர்களோடு விழா நடக்கவிருந்த ஏர்லைன்ஸ் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.
சகோதரர் ஜமால் திருக்குரானின் வசனங்களை ஓதி கூட்டத்தை ஆரம்பித்து வைக்க ஜனாப் அல்ஹாஜ் குத்தாலம் லியாக்கத் அலி அவர்கள் தலைமையேற்க, ஜனாப் தாஹா, ஜனாப் களமருதூர் சம்சுதீன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த நிகழ்விற்கு வரவேற்புரை நிகழ்த்தினார் லால்பேட்டை அப்துர் ரஹ்மான். அதில் பேராசிரியரின் அணுகுமுறைகளையும், பாக்கிஸ்தான் பிரிவினையில் காயிதே மில்லத் எவ்வாறு செயல்பட்டு இந்திய முஸ்லீம்களுக்கு அரணகாக இருந்தார்கள் என்றும், பட்டேல் போன்றவர்கள் நீங்கள் பாக்கிஸ்தானுக்கு போகவேண்டியது தானே என சொல்ல அதற்கு நாங்கள் மண்ணின் மைந்தர்கள் என்றும் எங்களை எங்கும் போவென சொல்ல யாருக்கும் அருகதை இல்லை என்று உரைத்ததையும் நினைவு கூர்ந்து இன்று வரை முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் எவ்வாறு எல்லா சந்தர்ப்பங்களிலும் எவ்வாறு செயல்பட்டு அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளுக்காக பாடுபடுகிறது அதன் தலைமையை பேராசிரியர் ஏற்றதிலிருந்து அவர் சமீபத்தில் கோவை சிறைவாசிகளின் விடுதலைக்காக வழக்காடுவதற்கு சமீபத்தில் ரூபாய் பத்தாயிரம் ஏற்பாடு செய்து வழங்கியது உட்பட் பலவற்றை எடுத்துரைத்தார்.
விழா தொகுப்புரையாளர் ஹமீது ரஹ்மான் அழகான முறையில் சலவாத்தோடு ஆரம்பிக்க நமது பேரவைக்கு வைத்திருக்கும் பெயரின் சொந்தக்காரர் கண்ணியமிக்க காயிதே மில்லத் (ரஹ்) எத்தகைய சிறப்பினை கொண்டவர்கள் என விளக்கி பேசுகையில் நேருவின் அமைச்சரவையில் கிருஷ்ணமேனன் பாதுகாப்பு அமைச்சராகவும், வல்லபாய் பட்டேல் உள்துறை அமைச்சராகவும் இருந்த போது நடந்த சீனா இந்தியவின் காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்த சமயத்தில் நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சீனா ஆக்கிரமிப்பு செய்த இடம் ஒன்றுக்கும் உதவாத ஒன்று தானே என நேரு உட்பட எல்லோரும் கருத்து தெரிவிக்கையில் அதற்கு எதிராக எனது தாய் நாட்டு மண்ணை யாரும் ஆக்கிரமிக்க ஒரு கணமும் ஒத்துக்கொள்ள மாட்டோம் அது ஒரு பிடிமண்ணாக இருந்த போது சரிதான் ஆகவே சீனா அங்கிருந்து தன் படைகளை திரும்ப பெற்றே ஆகவேண்டும் என முழங்கிய ஒப்பற்ற தேசபக்தர் என்றும், இந்தியா – பாக்கிஸ்தான் பிரிவினையின் போது ஜின்னா அவர்கள் பாக்கிஸ்தானை வழிநடத்தி சென்ற சமயத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்க்கின் தலைமையை காயிதே மில்லத் ஏற்ற போது கட்சிப்பணம் 80,000ரூபாய் இருப்பதை நீங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு வைத்து கொள்ளுங்கள் என சொன்ன நேரத்தில் அதை கூட வாங்க மறுத்து விட்ட தூய்மையையும் இன்னும் சில சரித்திர நிகழ்வுகளையும் கூறி அப்பேர்பட்ட அற்புத தலைவரின் பெயரைத்தான் நாம் நமது பேரவைக்கு வைத்திருக்கிறோம் என நினைவு கூர்ந்தார். இடையிடையே அவர் கூறிய தொகுப்பு மொழிகளும் அருமை.
தீர்மானங்களை முன் மொழிந்தும் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையுயர்வை திரும்பப்பெற சென்னையில் முஸ்லிம் லீக் நடத்திய போராட்டத்தை ஆதரித்து பேசுமாறு பணிக்கப்பட்ட நான் சற்றே இடைவெளிக்கு பிறகும், முன்னறிவிப்பு இல்லாமலும் தயார்நிலை ஏதும் இல்லாத நிலையில் திடீரென பணிக்கப்பட்டேன், விழா ஏற்பாட்டாளர் லால்பேட்டை அப்துர் ரஹ்மான் அவர்களோடு முன்பு அபுதாபியில் இருந்த காலங்களில் அவரோடு கூடிய நட்பு மற்றும் அவரின் இயக்கப்பணிகள் மீதுள்ள ஆர்வத்தையும் சொல்லி பிறகு பேரவைத் தலைவர் அல்ஹாஜ்.குத்தாலம் லியாகத் அலி அவர்களின் எளிமை மற்றும் அவரின் அரவணைப்பு இவைகளால் ஈர்க்கப்பட்ட விதத்தையும், அண்ணன் தாஹா, ஹமீத் ரஹ்மான், மற்ற நிர்வாகிகளின் தனித்தன்மைகளையும் மகிழ்ந்து கூறி தமிழ்நாடு மாநில முஸ்லிம் லீக்கிற்கு அமீரக காயிதே மில்லத் புத்துணர்வூட்டி வருவதையும் அதில் நமது பாராளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான் அவர்களின் மக்கள் பணிகள் பற்றியும் பேசி விளக்கிவிட்டு....எனது தலைப்பான சமீபத்திய பஸ் கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வால் நடுத்தர மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், சிரமங்களையும் எடுத்துக்கூறி அதை அரசு கருத்தில் கொள்ளுவதன் அவசியம் குறித்தும் பேசி சென்னையில் முஸ்லிம் லீக் நடத்திய போராட்டத்தையும் அதில் முன்மொழியப்பயட்ட தீர்மானத்தையும் ஆதரித்து உரைநிகழ்த்தி அமர்ந்தேன்.
பிறகு அமீரக காயிதெமில்லத் பேரவையின் துணைத் தலைவர் களமருதூர் ஹாஜி.ஷம்சுத்தீன் அவர்கள் நம் வீடு பழையதாக இருப்பதால் மராமத்து பணி செய்யும் தருணங்களில் அடுத்த வீட்டு திண்ணைகளில் குடியேறலாம் ஆனால் அங்கேயே எவ்வாறு தங்க கூடாதோ.. அனுமதிக்க மாட்டார்களோ அது போல நமது தாய்சபை சற்றே தளந்த சமயத்தில் எங்கெங்கோ பிற கட்சிகளுக்கு சென்ற சகோதரகள் நம் வீட்டிற்கு தாய்சபைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார். காயிதேமில்லத் அவர்களுக்கு 1962-ல் தான் சேவையாற்றியதையும் நினைவு கூர்ந்தார்.
அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது,துணைப்பொருளாளர் முத்தலிபு இக்பால்,ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்,இராமநாதபுரம் தைய்யுப் அலி,கீழக்கரை ஹமீது யாஸீன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை மாவட்டத் தலைவர் பி.கே.என்.அப்துல் காதிர் ஆலிம் பேசும் பர்மாவிற்கு சென்று வசூல் செய்து காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் இரண்டும் கேரளத்தில் ஒன்றுமாக கல்லூரிகளை நிறுவியதை சிலாகித்தார்.
அபுதாபி இந்தியன் ஸ்கூல் தலைமை ஆசிரியர் ஷேக் அலாவுத்தீன் கல்வியால் மட்டுமே சமூகம் வளரமுடியும் ஆகையால் நமது குடும்பத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் குறைந்த பட்சம் ஒரு டிகிரியாவது படிக்கும் வாய்ப்பினை வழங்கவேண்டும் என்றார். பிறகு அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது,சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் இஜாஜஸ் பெய்க்,அய்மான் கல்லூரியின் பொருளாளர் திருச்சி அப்துல் வஹ்ஹாப் சாஹிப் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தாய்ச்சபை பாடகர் அரங்கம் அதிர கொள்கை முழக்கங்களை முழங்க எல்லோரும் உடல் சிலிர்க்க ஒன்றிப்போய் உணர்வு பொங்க கேட்டு ரசித்தனர்.
------மற்றவை தொடர்கிறேன். இன்ஷா அல்லாஹ்
-ஜே.எம்.பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக