முஸ்லிம் லீக் முதன்மைத் துணைத்தலைவவர் அப்துல் ரஹ்மானோடு வழுத்தூர் முஹையத்தீன் பாட்ஷா |
நேற்றைய தினம் 17-6-2016 துபாய் வந்திருக்கும் நமது தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மை துணைத்தலைவர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்பாசத்திற்குரிய அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வந்தேன்.
அண்ணன் அவர்களுக்கு சென்ற மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததில் கவலை இருந்தது, அவர்கள் உடல்நலம் தேறி வர எல்லோரையும் போல நானும் துஆ செய்த வண்ணம் இருந்தேன். உடல்நலம் தேறிமீண்டும் பொது நிகழ்ச்சியில் அண்ணன் அவர்களை பார்த்தபோது தான் மனம் ஆறுதல் அடைந்தது, மகிழ்ச்சி கொண்டது.
நேற்று முன்தினம் அண்ணன் துபாய் வந்திருப்பது எனக்கு தெரியாது ஆனால் அன்றைய விடிகாலை மிக நீண்ட கனவில் சந்தித்து உடல் நலம் விசாரிப்பது போலவும், சிரித்து பேசி அளவளாவுவது போல கண்டேன், அதற்கேற்ப முகநூலை திருப்புகிறேன் வந்திருக்கும் செய்தி.
மாலை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தேன், பார்க்க வேண்டும் என்ற அவாவையும் சொல்ல, டி-ப்ளாக்கில் தான் தராவிஹ்
தொழுது கொண்டிருப்பேன் வாருங்கள் சந்திப்போம் என பாசமுடன் அழைத்தார்கள். துபாய் தேராவில் ஈ.டி.ஏ டி-பிளாக் கட்டிடத்தில் எப்போதும் போல ரமலானின் தராவிஹ் மற்றும் சிறப்பு அமல்கள் நடந்தேறிக்கொண்டிருந்தது, தொழுகையை கண்ணியப் பெருந்தகை சுலைமான் ஹஜ்ரத் அவர்கள் சிறப்பாக நடத்திக்கொண்டிருந்தார்கள், முடிவில் அருமையான திக்ரும், துஆவும் ரமலானின் வசந்தங்களை வீசிக்கொண்டிருந்த மஜ்லிஸ் அகமகிழ்வை அள்ளித் தந்தது.
அப்துல் ரஹ்மான் அண்ணன் முதல் சஃப்பின் இறுதில் மெய்மறந்து தொழுது முடித்திருந்தார். முகமும் அகமும் மலர என்னை கண்டதும் வரவேற்று அருகே இருத்திக்கொண்டார், பிறகு யாருடன் வந்திருக்கிறீர்கள் என கேட்டு தம்பியுடன் எனச்சொல்ல தம்பி காலித்தையும் அவர் தம் பக்கத்தில் அமர்த்தி பாசம் பறிமாறினார்.முதலில் உடல் நலம் குறித்து விசாரித்தேன் பிறகு சமூக, அரசியல் விடயங்களை பகிர்ந்து கொண்டோம், பிறகு வெளியே சிறுநடை போட்டு உலாவினோம் மனநிறைவாக ஒரு மணி நேரத்திற்கு மேலான சந்திப்பு நிறைவடைய விடைபெற்றோம்.
முஸ்லிம் லீக் முதன்மைத் துணைத்தலைவவர் அப்துல் ரஹ்மானோடு வழுத்தூர் தாவுத் காலித் |
மற்ற இயக்கங்களின் தலைவர்களுக்கும், முஸ்லிம் லீக்கின் தலைவருகளுக்கும் இந்த பெருந்தன்மையும், எளிமையும் தான் வித்தியாசம். இது எங்கள் தொன்று தொட்டு வந்த கண்ணியத் தலைவர்கள் தந்த பரிசு.
பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனையை தொய்வின்றி எடுத்துரைத்தவர், சமுதாய நலனுக்காக பாஸிச வாட்களோடு கருத்து யுத்தம் நடத்தியவர் அவரை சில சூழ்ச்சிகள் சமுதாய ஒற்றுமையின்மைகள் பாராளுமன்றம் செல்லவிடாமல் செய்து அவரால் விழையும் நன்மைகளை தடுக்க நினைத்தது, சாதித்ததாகவும் நினைத்தது ஆனால் உண்மை சமுதாய தலைவர்கள் எங்கிருந்தாலும் அதற்காக உழைத்துக்கொண்டே தான் இருப்பார்கள் என்பதை அவர் நிரூபித்து வருகிறார். இன்ஷா அல்லாஹ் அவர் மீண்டும் அங்கே செல்ல வேண்டும். இன்னும் இன்னும் தாய்ச்சபையை வளர்த்து சமூகத்தின் குரலாய் ஓங்கி ஒலிக்க வேண்டும்என்பதே எல்லோரையும் போல எனது எண்ணம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக