பிஜேபி / ஆர். எஸ்.எஸ்-ன் ப்ளான் மாஸ்டர் பிளான் இது வரை உலக சரித்திரத்தில் ஆரியர்கள் முன்வாசலை எப்போதும் பயன்படுத்தியது கிடையாது, அவர்களுக்கு அது பழக்கமும் இல்லை. இப்பவும் அதையே மிகச்சரியாக செய்திருக்கிறார்கள்.
இந்தியாவில் அவர்கள் எப்படியும் நுழைந்துவிடத் துடிக்கும் மாநிலங்கள் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம். கேரளாவில் தமிழகத்தை விட மேலதிகமாக தினம் ஒரு லோக்கல் இந்துத்துவ நிர்வாகியை கொலை செய்து அதை கம்யூனிஸ்ட் அல்லது முஸ்லிம் லீக்குடைய பெயரில் போட்டு அங்கே நடக்கும் பல மதத்துவேசக் கூத்துக்களும், வெறியாட்டங்களும், கேரள அரசியலை கண்கானித்துவருபவருக்கு தெரிந்திருக்கும். அதைப்போலவே மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு, மோடி வகைராக்களுக்கும் நடக்கும் மோதல் யுத்தம் மிகவும் நினைவில் கொள்ள வேண்டியது.
அடுத்து நமது தமிழ்நாடு, இங்கு அவர்களது பாச்சா பலிக்காமல் இருக்க இங்கே இருக்கும் இரண்டு திராவிட கட்சிகளும் அதன் மூலமான பெரியாரியமும் தான் என்பது அவர்களுக்கு பெரிய தலையிடியாகவே தொடர்கிறது எவ்வளவோ முயன்றும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முடியாத சூழ்ச்சிக்காரர்களுக்கு கிடைத்த அல்வா துண்டு தான் ஜெயலலிதாவின் மருத்துவ மனை பிரவேசமும், இறப்பும். விடுவார்களா போட்டார்கள் மாஸ்டர் ப்ளான், அந்த சரியான திட்டத்தின் வழியே தான் இன்று நடக்கும் அதிமுக பிளவு, பன்னீரை தூக்கிப்பிடிப்பது, ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவை தூக்கிப்பிடிக்கும் சசிகலாவை மக்கள் வெறுக்கும் கொலைகாரி, கொள்ளைகாரியாக சித்தரிப்பது, பிறகு கவர்னரை வைத்துப் படங்காட்டி அவரை பதவியேற்கவிடாமல் தாமதப்படுத்தி பிறகு தீர்ப்பின் பெயரால் அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்டி சிறைக்கு அனுப்பியது என எல்லாம்.
ஆனால் பிஜேபி-யின் மிகப்பெரிய வஞ்சகம் தெரியாமல் எல்லோரும் சசிகலாவை திட்டி சந்தோசமடைகின்றனர், ஓன்றுமில்லாத குஜராத்தை இந்தியாவின் மிக முதன்மை மாநிலம், பூலோக சுவர்க்கம், என்றெல்லாம் சீன் காட்டியும், நரபலி மோடியை இந்தியாவை ரட்சிக்கவந்த பிதாமகன் போலவும் காட்டிய பிஜேபியின் ஊடக தந்திரத்திற்கும், அவர்கள் உருவாக்கும் மீம்ஸிற்கும் பலியாகி நிற்கும் தமிழக அறிவாளிகளை நினைத்தான் அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியவில்லை.
ஜெயலலிதாவின் பல அரசியல் முடிவுகளுக்கு பக்க துணையாக இருந்த சசிகலா தான், ஜெயலலிதா துணிந்து செய்தார் என்று பேசப்படும் ஜெயேந்திரரின் கைது நடவடிக்கைக்கு பின்புலத்தில் இருந்து அதை துணிந்து செய்ய தூண்டுகோளாகவும், காரணகர்த்தாவாகவும் செயல்பட்டார் என்ற ஆரியவர்க்கத்தின் கோபமும் ஜெ.மறைவை அடுத்து பஜாகவின் பல உடன்படிக்கைகளுக்கு அவர் அடிபணியாததும் தான் இப்போதைய சசிகலாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு காரணமென பல நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகளை அறிய முடிகிறது.
எது எப்படியானாலும் பின்னால் இருந்து நிகழ்வின் வெற்றியை ரசித்து பெரியார் பூமி எனப்படும் தமிழ்மண்ணில் அதன் முதல் அறுவடையாக ஒரு திராவிட கட்சியை சிதைத்து தன் திட்டத்தில் பரிவாங்கள் வெற்றிகண்டிருப்பதை தமிழர்கள் உணர்ந்தால் நல்லது. இல்லையே இப்போது அரிக்கத் தொடங்கி இருக்கும் பாசிசத்தின் சூழ்ச்சி முழுவதும் வெற்றிபெற்றால் இத்தனை நாள் திராவிடம் வளர்த்தும் பயனில்லாமல் போகும், எச்சை ராஜாக்கள் நாடாளும் நிலை கூட வரலாம்.
- வழுத்தூர். ஜா.முஹையத்தீன் பாட்ஷா
2 கருத்துகள்:
தர்மத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும்
தர்மமே வெல்லும்
//பிஜேபி / ஆர். எஸ்.எஸ்-ன் ப்ளான் மாஸ்டர் பிளான் இது வரை உலக சரித்திரத்தில் ஆரியர்கள் முன்வாசலை எப்போதும் பயன்படுத்தியது கிடையாது, அவர்களுக்கு அது பழக்கமும் இல்லை//
இது பன்ச்
கருத்துரையிடுக