எவன் புறக்கணித்தால்
எவன் அரவணைத்தால்
எவன் முகம் சுழித்தால்
எவன் கை கொடுத்தால்
எவன் கழுத்தறுத்தால்
என்ன ஆகிவிடப்போகிறது?
நான் இளவம்பஞ்சு
பறந்துகொண்டே இருப்பேன்
நான் கடற்கரை காற்று
வீசிக் கொண்டே இருப்பேன்
நான் மேற்குத்தொடர்ச்சி மலை
ஆற்றெழுந்து பொங்குவேன்
நான் தொடமுடியாத சூரியன்
தகித்து நிதமும் ஒளியுமிழ்வேன்.
என் ராஜாங்கத்தில் நான் ராஜா.
ஜா.மு. 19-11-18
ஜா.மு. 19-11-18
FB link
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக