08 நவம்பர் 2022

அமீரகத்தில் பாரதியார் கவிதைகள் அரபு மொழி பெயர்ப்பு வெளீயீடு


• அமீரக எழுத்தாளர்கள்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் கானல் / Kaanal அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் சார்பில் 06-11-2022 அன்று துபாயில் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாகவி பாரதியார் கவிதைகள் முனைவர். ஜாஹிர் ஹுஸைன் அவரகளால் அரபி மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட நூல் வெளியிடப்பட்டது. நூலினை திரு.பாலாஜி பாஸ்கரன் அவர்களின் கேலக்ஸி பதிப்பகம் Galaxybs Galaxybs மிக நேர்த்தியாக பிரசுரித்திருந்தது.
• நிகழ்விற்கு அமீரக அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சக செயலாளர் மாண்பமை ஹெஸ்ஸா தஹ்லக், தகவல் தொழில் நுட்பத்துறை சமூக அமைச்சக ஆலோசகர் சயீத் அப்துல்லாஹ், அமீரக அரபுக் கவிஞர் காலித் அல் ழன்ஹானி, அமீரக அரபு நாவலாசிரியர் அஸ்மா ஸ்ர்வூனி போன்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க நூல் வெளியிடப்பட்டது.
• விழாவிற்கு அமீர்க எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் தலைவர் திரு.ஆசிப் மீரான் தலைமை தாங்க விழாவினை எழுத்தாளர் ஜஸீலா அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்வுக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முக்கிய விருந்தினர்கள் மூலம் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பாரதியார் அரபு மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
• சிறப்பு விருந்தினர்கள் முன் அமீரகத்தின் பிரபல பேச்சாளர், பல்துறை வித்தகர் சசிகுமார் அவர்கள் பாரதியை ஏன் போற்ற வேண்டும் என சிறப்பாக விளக்கினார், பிறகு பாரதியின் கவிதை ஒன்றை பொன்மாலைப் பொழுது கணேசன் அவர்கள் அழகுக்குரலில் பாடி அசத்தினார். இருவருரின் மேடைப்பங்களிப்பும் விருந்தினர்களை வெகுவாகக் கவர்ந்தது.
• சிறப்புரை வழங்கிய அமைச்சக செயலாளர் மற்றும் அமைச்சக ஆலோசகர் தென்இந்திய அமீரக உறவு முவாயிரம் ஆண்டு தொண்மையானது என்றும், முனைவர் ஜாஹிர் ஹுஸைன் அவர்கள் மொழிபெயர்த்த திருக்குறளைப் படித்த போது இஸ்லாமிய நெறிகளை அப்படியே சொல்லி இருப்பதாகவே பட்டது என்றும் கூறி வியந்தார். மேலும் பாரதி பற்றி இந்நூலைப் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் தமிழ் மொழியின் பொக்கிசங்களை தாங்கள் எப்போதும் வரவேற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்து மகிழ்ந்தனர். நிகழ்வில் அமீரக கவிஞர் மற்றும் நாவலாசிரிர் பேசும் போதும் பாரதியின் அறிமுகம் தங்களுக்கு கிடைத்ததின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
• ஏற்புரை நிகழ்த்திய முனைவர் ஜாஹிர் ஹுஸைன் கடந்த பத்தாண்டு காலமாக தனது மொழி பெயர்ப்பு பயணத்தை விளக்கிப் பேசினார். அதற்கு தமிழக அரசின் உறுதுணை மிக சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். தமிழ் மொழியை பரவலாக்க என்ன செய்ய வேண்டும் என பாரதி தனது கவிதைகளில் குறிப்பிட்டவற்றைப் பட்டியலிட்டு அதை நாம் செய்ய வேண்டும் என்று உணரவு மேலிடப்பேசினார். நமது மொழியின் மத நூல்கள் அல்லாதா பொக்கிசங்களை இலக்கியங்களை பிற நாட்டு மொழிக்கு கொண்டு போகும் போது தான் நம் மொழி பற்றி அவர்கள் அறிந்து போற்ற நேரிடும் என்றும் அது போல பல மொழிகளிலிருந்தும் நம் மொழிக்கும் சிறப்பானவற்றை கொண்டு வர வேண்டும் இதைத் தான் பாரதி கூறினான் அதை நான் செய்வதன் மூலம் அவனின் கனவை நனவாக்கும் மகிழ்ச்சி உண்டாகிறது என்றார். மேலும் கல் தோன்றி மண் தோன்றா மூத்த மொழி என்பதற்கு ஆய்வின் மூலம் விளக்கத்தை கூறி தமிழர்களின் தொன்மையை விளக்க அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். தமிழகத்தின் இஞ்சியும், நறுமணப்பொருட்களும் பல்கீஸ் ராணி, தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அளித்த பரிசுப்பொருட்களில் இருந்த ஆதாரம் சொல்ல வியப்பாய் இருந்தது. பிறகு அரபுக் கவிஞர் அண்ணலாரைக் கவிதை மூலம் வியந்த போது இந்திய வாளின் சுடரொளிப் போல என கவித்துவத்தில் வியந்ததை கோடிட்டுக் காட்டினார். மேலும் பாரதிக் கவிதைகளின் அரபு மொழியாக்கத்தை, திருக்குறளை எல்லா அரபிகளுக்கும், அரபு நூலகத்திற்கும், கல்வி நிறுவனங்களுக்கும் கொண்டு செல்லுங்கள் என்ற கோரிக்கையோடு நிறைவு செய்தார்.
• பல சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கவும், பாலாஜி அவர்கள் நன்றி சொல்லவும் விழா இனிதே நிறைவு பெற்றது.
• நம் தாய்த் தமிழ் மொழிக்கும் மகாகவி பாரதிக்கும் மறக்கமுடியாத விழாவாக, வரலாற்றுச் சிறப்பு மிகு விழாவாக அமைந்திருந்த இதை அழகிய முறையில் அமீரக எழுத்தாளர்கள் குழுமத்தின் அங்கத்தினர்கள் சேர்ந்து முன்னெடுத்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக Asif Meeran Jazeela Banu Balaji Baskaran Firdhous Basha Bilal Aliyar Charu Mathi - Shroo Kausar Baig Sasikumar Ssk Sivasankari Vasanth போன்றோருக்கும் மற்ற நம் அனைத்து குழும உறுப்பினர்களுக்கும் அன்பின் வாழ்த்துகள்.
அன்புடன்
ஜா,மு.
07-11-2022.
புகைப்படங்கள் Subhan Peer Mohamed & Riyas Ahamed




கருத்துகள் இல்லை: