கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
செப்டம்பரிலெல்லாம் சிறகு விரித்தாடி
செவிக்குணவாய் உன் கூவல்களையும்
புவிக்கழகாய் தருவாயே
பறக்கும் பூவிதழே
நிறக்கும் சோபிதமே
நீ எங்கே..
நீ எங்கேயெனவே..
உன் அழகு சூழும்
பிரதான கடற்கரைகளில்..
நீ சிறகுளர்த்தும் புல்வெளிகளில்
விழிவைத்திருந்தேன்..
ஏமார்ந்தே எதிர்பார்த்திருந்தேன்..
இனிய சீகல் பறவையே
இன்னும் நீ வரவில்லையே
சீகல் நீ இல்லையானால்
சீசன் சிறக்குமோ அமீரகத்தில்..
உனக்கென்ன ஆச்சு
இயற்கைக்கு இழுக்கிறதா மூச்சு
என்றெல்லாம் புலம்பி
துயர் தரித்தேன்..
முந்தாநாள் மாலை
கூட்டம் கூட்டமாய்
ஆகாயத்திற்கு அதிசய
மாலைச் சூட்டி
மகிழ்திருந்திருந்தாய்.
காணாத கண்களுக்கு
எழிலோவியம் காணத்தந்தாய்.
பார்த்துப் பூரித்தேன் - பால்
வார்த்து என்னுயிர் வளர்த்தாய்.
உள்ளம் நெகிழ்ந்து இன்ப
வெள்ளத்தில் ஆழ்ந்துபோனேன்.
21-11-21
10:44 pm
- ஜா.மு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக