24 ஜனவரி 2023

உணர்வின் மொழி!

பார்த்த மாத்திரத்திலேயே
உணர்வுப் பொங்க வைக்கிறது
சில எழுத்துக்கள்.
படிக்கும் நிகழ்ப் பொழுதிலேயே
உருகி அழவைத்துவிடுகிறது
சில சொற்கள்.
ஆழ்ந்த சில நொடிகளிலேயே
உருக்குலைய வைக்கிறது
சில வரிகள்.
அது வெறும்
எழுத்துக்களால் ஆன
சொற்கள் என்பதைத் தாண்டி,
அவை..
உயிரைத் தோண்டிக்
கிளற.. கிளறப்
பூதம் போல வெளிப்பட்டவை,
வெறி கொண்டு
மென் உணர்வின் மீது
காழ்ப்புடன் எறியப்பட்ட
கற்களின் ரத்தம் தோய்ந்தவை,
அக்கினி மிகு
அனல் சூழ் வாழ்வில்
யாருக்கும் தெரியாமல்
எரிந்த பெருந்தீக் கருக்க,
உள்ளம் உருகப் பெருகிய
கண்ணீரினால் ஆன
உப்புக்கற்கள் அவை.
- ஜா.மு
24-01-17

18 ஜனவரி 2023

அன்பென்ற மழையிலே - Islamic version

1
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி  தோன்றினாரே..
 
உலத்தில் எல்லோர்க்கும்
உயர்க் கொடையாகவே
உம்மிநபி தோன்றினாரே
 
புகழோங்கும் இறைவனே
புகழ்ந்தேற்றும் புனிதராய்
புவிமீது தோன்றினாரே
 
நற்செய்தி பகிர்ந்திடும்
நாநிலத் தூதராய்
நாயகம் தோன்றினாரே
 
2
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி  தோன்றினாரே..
 
நிலம் அழிக்கும் பேதங்கள்
நிஜமாக நீங்கவே
நிறைநாதர் தோன்றினாரே
 
குலப்பெருமை பேசியோர்
கொடுஞ்செயல்கள் ஒழியவே
குணநாதர் தோன்றினாரே
 
நூற்றாண்டு காலமாய்
புதையுண்ட பெண்சிசுக்கள்
விசும்பல்களில் தோன்றினாரே..
 
அறியாமை காலத்து
அநீதங்கள் பொசுங்கிடும்
நெருப்பாக தோன்றினாரே
 
பாலைவன நிலத்திலே
பால்சுரக்கும் ஊற்றாக
பாசநபி தோன்றினாரே
 
3
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி  தோன்றினாரே..
 
உலத்தில் எல்லோர்க்கும்
உயர்க் கொடையாகவே
உம்மிநபி தோன்றினாரே
 
அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அண்ணல்நபி  தோன்றினாரே..
 
உலத்தில் எல்லோர்க்கும்
உயர்க் கொடையாகவே
உம்மிநபி தோன்றினாரே
 
 
- ஜா.மு
02-05-2020

14 ஜனவரி 2023

அறியாதபுரம் வெளியீடு குறித்த பதிவுகள்















- ஜா.மு

04 ஜனவரி 2023

"அறியாதபுரம்" துபாய்க்கு வந்து சேர்ந்தது

"அறியாதபுரம்" நூல் பிரதிகள் துபாய்க்கு வந்து சேர்ந்துவிட்டது, பெருமகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டேன்.



கேலக்ஸி பதிபகத்தின் வெளியீடாக வரும் இந்நூலை FJ tours & Travels மூலம் கேலக்ஸியின் பாலாஜி அண்ணன் Balaji Baskaran சுடச்சுடத் தருவித்து அளித்தார்.

நூலின் தரம் சிறப்பாக வந்துள்ளது. கையில் வாங்கும் போதே தரத்தின் நிறைவில் மனம் நிறைந்தது. இந்நூலுக்கு உழைத்த கேலக்ஸியின் ஆமினா முஹம்மத் Amina Mohammed உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

நூலின் பிரதிகளை கேலக்ஸி பதிப்பகத்தின் பாலாஜி அண்ணனுக்கும் எழுத்தாளரும் Proactive safety consultancy உரிமையாளருமான ஜெஸிலா பானு Jazeela Banu அவர்களுக்கும் அளித்து மகிழ்ந்தேன்.
நூல் வரும் சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 156&157ல் கிடைக்கும், மேலும் ஆன்லைனில் galaxybs.com Galaxybs Galaxybs
என்ற இணையதள முகவரியிலும் கிடைக்கும்.

மகிழ்ச்சி.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
-ஜா.மு.

முகநூல் இணைப்பு