14 ஆகஸ்ட் 2010

தரையினில் தவழும் நிலவோ


சுல்தான் அஹமது நளீர்

தரையினில் தவழும் நிலவோ – நீ
மடியினில் மின்னும் கதிரோ
தமிழினில் சேர்ந்த சுவையோ- நீ
கவியினில் மிளிரும் அழகோ

இல்லம் வந்த இசையோ – நீ
இதயம் ஈர்க்கும் விசையோ
இலக்கணம் பாடும் அசையோ – நீ
இலக்கியம் தேடும் ஓசையோ

இதந்தரும் இயற்கையின் சிரிப்போ – நீ
நிதம்வரும் நினைவினின் களிப்போ
விடியற் காலையின் கிழக்கோ – நீ
விடியல் நல்கிடும் இலக்கோ

மழைக்கால வானத்து வில்லோ – நீ
மனங்கவர் மணிவைரக் கல்லோ
தெய்வீக நாதக் குழலோ – நீ
தெவிட்டாத தெனின்பக் குறளோ

ஆசையில் தேடிய முத்தோ – நீ
அன்பினில் விளைந்த வித்தோ
ஆண்டவன் அளித்த பரிசோ – நீ
ஆதவன் போல் வந்த முரசோ

நதியினில் ஆடிடும் வளமோ – நீ
நகர்ந்திடும் ஆனந்தக் குடமோ
நாயகன் அளித்திட்ட அருளோ – நீ
நபிநாயகம் உவந்திடும் நிறைவோ

முகம்பார்த்து சிரிக்கும் பூவே – நீ
சகம் போற்ற சிறந்து வாழ்க!
புகழோங்க வாழ்வு வாழ்க!! – நாங்கள்
பூரித்து மனம்மகிழ வாழ்க!!!

வாழ்த்துடன் ஜே.எம்.பாட்ஷா (30-10-2009)


4 கருத்துகள்:

Kavianban KALAM, Adirampattinam சொன்னது…

"நதியிலாடும் நிலவோ” என்பது சரியாக இருக்கும்
புதுக் கவிதையில் புகுந்து விளையாடும் உங்கள் கற்பனைகள் என்னும் மலர்கள் மரபு என்னும் நாரில் தொடுத்தால் இன்னும் மணம் வீசும்

Thanjai Vasan ‎ சொன்னது…

// தரையினில் தவழும் நிலவோ //

எனது இதயத்தின் அறைகளிலும் பாய்ந்து கொண்டு...

குழந்தையின் படமும், குழந்தைக்காண வரிகளும் அருமை..

// முகம்பார்த்து சிரிக்கும் பூவே – நீ

சகம் போற்ற சிறந்து வாழ்க!

புகழோங்க வாழ்வு வாழ்க!! – நாங்கள்

பூரித்து மனம்மகிழ வாழ்க!!!//

உங்களுடன் வாழ்த்துவதில் எனக்கும் மகிழ்ச்சி..

Abu Aasima சொன்னது…

super, naan en makalukkake enru ninaiththukkonden.........​...

Abdul Kader Sinras சொன்னது…

super machan