05 ஜனவரி 2014

பேராசிரியர் முனீருல் மில்லத் பிறந்தநாள்

தற்போதைய அரசியல் சூழலில் அதுவும் இஸ்லாமிய சூழலில் இப்படி ஓர் முதிர்ந்த பக்குவட்ட அரசியல் துறவி ஒருவரை பார்ப்பது அரிது! சமூகத்திற்கு எது எப்போது உகந்ததோ அதை தீர்க்கமுடன் செய்து முடிக்கும் தீரரிவர், ஆழமான சிந்தனைவாதிகளுக்கே இவரது அணுகுமுறையின் தொலைநோக்கை உணர்ந்து கொள்ள முடியும்.. 

இவரது எதார்த்தமும் எளிமையும் இவரது மிகப்பெரிய பலம் என்றால் அதுவே பலகீனமாகவும் புரிந்து கொள்ளப்படுவது சமூதாயக் கோளாறு. ஆனாலும் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும் அவர் ஒரு அறிவின் தேனாறு, இவரின் ஆளுமைக்கோர் நிகராரு என!

தங்களுக்கும் தங்கள் இயக்கத்திற்கும் வலுசேர்க்கும் வண்ணம் இன்றைய இஸ்லாமிய இளைஞர்களை, பெண்களை, சிறார்களை தங்கள் இஷ்டப்படி உணச்சி வெறியேற்றி பகடைக்காய்களாய் பயன்படுத்தும் தலைவர்களுக்கு மத்தியில் அவ்வாறெல்லாம் அரசியல் செய்யத்தெரியாத பண்பட்ட... சீர்மையுள்ள அறநெறிகள் உணர்ந்த சிறப்பான மனிதர் ஒருவர் நம்மிடம் இருக்கிறார் அவர் எல்லா தரப்பு மக்களையும் அனுசரித்து இந்திய ஜனநாயகத்தின் மாண்பை போற்றி காயிதே மில்லத்தின் அடியொற்றி இயக்கத்திற்கும் சமுதாயத்திற்கு திசைகாட்டும் இன்னொரு கண்ணியமானவர். அவருக்கு இன்று பிறந்த நாள் எனும்போது உள்ளபடியே உள்ளம் பேருவகை அடைகிறது. இப்படியானதொரு தேடக்கிடைக்கா தலைமைக்கு கீழ் நான் நானும் இருக்கிறேன் என்பதை பெருமிதமாக கருதுகிறேன்.

இன்று பிறந்த நாள் காணும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஒப்பற்ற தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை எல்லா நலவளங்களும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.




இதை தனது நிலைத்தகவல் மூலம்   எல்லோருக்கும் சொன்ன வழக்கறிஞர் திரு.ஜீவகிரிதரன் அவர்களுக்கு நன்றிகள். திரு ஜீவா அவர்களின் நிலைத்தகவல் இதோ..

"TODAY IS OUR THALAIVAR MUNIRUL MILLATH PROF. KADER MOHIDEEN'S BIRTHDAY.. LET US REGISTER OUR GREETINGS AND WISHES TO CONTINUE HIS SERVICE TO THE COMMUNITY AND THE COUNTRY...
பேராசிரிய பெருந்தகையின் பிறந்த நாள் இன்று..... 
கண் அறுவை சிகிச்சை முடித்து ஓய்வில் உள்ள அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன்...

" நானே மறந்து போன ஒன்றை நினைவுபடுத்துகிறீர்களே ... நீங்கள் நலமுடன் இருப்பதுதான் எங்களுக்கு முக்கியம் என்றார்"

நீங்கள் நலமுடன் இருப்பது நாட்டுக்கு முக்கியம் ஐயா என்றேன்...
நாடும், சமுதாயமும் வாழ உழைக்கும் தன்னலமற்ற இந்த சமுதாய தலைவருக்கு நம் இனிய வாழ்த்துக்களை பதிவு செய்வோம்...."

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: