மதினாவை நினைத்தாலே மனசெல்லாம் சந்தோசம்
பச்சை கோபுரம் பார்த்தாலே பசுமையான பரவசம்.
*
புன்னகையை கூட தர்மமாக்கிய பூ அது
புன்னகைக்கே புல்லரிக்கும் அவர்கள் சிரித்தால்!
*
சூரியன் இருந்தும் சூழ்ந்திருந்தது இருள்
பூமி சுற்றிவும் விடியவில்லை இரவு
மனிதர்கள் உலவினர் மிருகமாய்
சூதுகள் எல்லாம் வென்று பூமிவந்தது அருள்!
*
மண்ணின் மனிதகோடிகளில்
இதயதுடிப்புள்ள ஒரே பிறப்பு
மாநிலத்தில் நிகழ்ந்ததற்காய்
மிக்க மட்டட்று மகிழுவோம்
எங்கள் அண்ணலே அஹமதரே
என்றே அனுதினமும் புகழுவோம்.
*
நாயகத்தை நினைக்க மறுத்தால்
இதயத்தையே பிய்த்தெறி
மனம் அதற்கு முரண்டு பிடித்தால் - உலகின்
மூத்த துர்ரதிஷ்டசாலி நீ என்று உறுதி செய்.
*
எழுந்து நடந்தாலும்
கூனாகவே இருந்த மனிதரில்
நிமிர்ந்து நடந்த முதல் பிறப்பு
அவர்கள் தான்.
*
உலக பிறப்புக்களில்
உச்சகட்ட சக்தி வாய்ந்தது
முஹம்மதிய்ய அம்சம் - அதை
மறுப்பவன் இருப்பதே மொசம்.
*
உலகின் எல்லா திசைகளிலும்
முஹம்மதுர் ரசூலுல்லாஹ்வின்
ஆளுமையின் வல்லமை
ஓங்கி ஒலிக்க
யாருக்கு மறுக்க முடியும்
நபிகள் நாயகத்தின்
பிரமாண்ட சக்தியை!
*
ஓரிறைவா என்றும் அருள்
ஓய்வில்லாமல் அவர் பாசம்!
என்னிறைவா உறுதி யருள்
உன்னைப் போல உவப்பு வைக்க நபிமேல்!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக