இன்றைய இந்து-வில் தோழர் சமஸ் அவர்களின் வஹ்ஹாபிசம் குறித்த மிக சிறப்பான கட்டூரையை ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி ஓகோ.. ஆஹா என்போர் படித்துப்பாருங்கள்.. மிக எதார்த்தமான இந்த கட்டூரையை நீங்கள் நடுநிலையோடு படித்தால் பயனடைவீர்கள்.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பி, மாமன் மச்சானாக வாழ்ந்து வரும் நாட்டில் பரவும் ஆபத்தின் இன்றைய மிக மோசமான சூழலை கட்டூரை அப்படியே அப்பட்டமாக மிக எதார்த்தமாக எடுத்துரைக்கிறது, இது படித்துவிட்டு கடந்து போகக்கூடிய கட்டூரை அல்ல, இதனை படித்து சிந்தித்துப்பார்த்து வஹாபிஸம் என்ற நஞ்சை புறந்த தள்ளவேண்டியது இஸ்லாமியர்களுடைய வசம் இருக்கும் மிகப்பெரிய கடமையும், பொறுப்பும் ஆகும். ஆனால் எத்தனை பேர் இதனை நடுநிலை கட்டூரையாக அணுகுவார்கள் என்பதில் தான் பிரச்சனை அந்த அளவுக்கு மூளைச் சளவை செய்திருக்கிறார்கள்.
நமது பன்முக மண்ணுக்கு எந்த விதத்திலும் ஒத்துவராத மேலும் இஸ்லாத்தின் மூல அடிப்படைகருத்துக்கும், நபிகள் நாயகம் போதித்த மூல கருவுக்குமே வஹ்ஹாபியிசம் எதிரானது. தமிழகத்தின் பெரும்பான்மை முஸ்லிம்கள் சமஸ் சொல்வது போல் வஹ்ஹாபிசத்தினை ஏற்காதவற்கள் ஆனால் இன்றைக்கு வஹ்ஹாபிச கருவிகள் இளைஞர்களை, பெண்களை, குழந்தைகளை குறிவைத்து செய்ல்பட்டு கெடுப்பதே துர்ரஷ்டம். இவ்வாறு பெருகும் வஹ்ஹாபிசத்தால் நாட்டுக்கும், வீட்டுக்கும், தனிமனிதனுக்கும் கேடு என்பதே எதார்த்தம்.
அறம்சார்ந்த மண்ணுக்கு நல்வழிகாட்டும் அற்புதமான கட்டுரையை எழுதிய சமஸ் Samas மற்றும் பதித்த இந்து நாளிதழுக்கும் நெஞ்சாந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.
1 கருத்து:
மிக சிறந்த கட்டுரை. மதத்தில் பிடிப்பு இருப்பதில் தவறில்லை, அது அவரவர் விருப்பம். ஆனால் 'மதம்'(யானை) பிடித்துவிடக்கூடாது என்பதைத் தெளிவு படுத்தியக் கட்டுரை. நம்மிடம் ஒற்றுமை இருக்கும் வரையில் எந்த 'மத' யானையும், தும்பிக்கையை அல்ல, அதன் வாலைக் கூட ஆட்ட முடியாது.
அன்புடன்
நிமித்திகன்
கருத்துரையிடுக