22 மார்ச் 2016

சூப்பர் சிங்கர் 2016 முடிவு முன்பே முடிவு செய்யப்பட்டதா.?



சூப்பர் சிங்கர் பற்றி கீழே பகிரப்பட்டிருக்கும் செய்தியை இரண்டு தினங்களுக்கு முன் பார்த்து அதிர்ந்தேன், அவ்வளவு முக்கியமான விசயம் இல்லை என்றாலும் ஒரு ஊடகம் உலகத்தமிழர்களை எவ்வளவு இழிச்சவாயன்களாக ஆக்கி பிழைப்பு நடத்துகிறது என்பது தான் அது, சரி நாமும் இது உண்மையா என பார்க்கும் போது தான் புரிந்தது ஆனந்த அரவிந்தாஷன் கீழே குறிப்பிட்டபடி
1. இந்த வான்வெளி விடியாதோ - படம்: ஆரோகணம்(2012)
2. யார் வீட்டு மகனோ -
படம்: நீர்ப்பறவை(2012) மற்றும்
10 எண்றதுக்குள்ள, இவன் வேற மாதிரி, பாண்டிய நாடு, மத யானை கூட்டம், உள்ளிட்ட பல படங்களில் பாடியிருக்கிறார், மேலும் மேற்படி நபர் பல ஆல்பங்களிலும் பாடி வரவேற்பு பெற்றிருக்கிறார் இருக்கிறார், எந்த அளவுக்கென்றால் அவரின் யூ டியூப் பதிவுகள் ஒவ்வொன்றும் முன்பே ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை தாண்டி பார்க்கப்பட்டிருக்கிறது.. இவர் வென்றார் என்ற அவரது பேஸ்புக் பதிவுகல் அவரின் பக்கத்து போட்டோக்கள் எல்லாம் யாரும் நம்பமுடியாதபடி பல லட்சத்தை தாண்டி லைக்கும் ,சேரும் செய்யப்பட்டிருக்கிறது..இதுவும் ஆச்சர்யத்தை தந்தது.
பரீதா நாலரை லட்சம் வாக்குகள் வாங்க இவரோ அவரைவிட 5 லட்சாம் வாக்குகள் அதிகமாக ஒன்பதரை லட்சம் வாக்கு வாங்கி இருக்கிறார் என்பதிலும் உண்மை தன்மை இருப்பதாக தெரியவில்லை அப்படியே இருந்தாலும் முன்பே பல லட்சம் ரசிகர்களை (அதுவும் மலையாள ரசிகர்கள் அதிகம் இருக்க வேன்டும் என நினைக்கிறேன்) பெற்ற பாடகருக்கு பரிசு என்பது பொருந்தாது, பைனலிஸ்ட்-ல் இருந்த லட்சுமி, சியாத் என்ற ஏனைய மளையாளிகள் வென்றிருந்தாலும் அல்லது பலரால் எதிர்பார்க்கப்பட்ட பரிதா வென்றிருந்தாலும் தகும்
ஆனால் பிண்ணனியில் திரையிசை பாடும் ஒரு பாடகரை பாடவைத்து அதில் அவரை வெளியேற்றி... பிறகு வைல்ட்கார்டில் கொண்டுவந்து பிறகு முதல் பரிசு என்பதெல்லாம்..என்ன டீல்??? வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அது வேறு.. ஆனால் இப்படி எல்லோரையும் கேனயன்களாக்குவது விஜய் டீவிக்கு நல்லதல்ல....
எல்லாவற்றையும் விட விழா மேடையில் சந்தோஷ் நாராயணன் வெற்றி பெற்றவருக்கு படத்தில் பாட வாய்ப்பு என அறிவிக்க அரவிந்தின் எதார்த்த நடிப்பை யாரும் தூக்கி சாப்பிட முடியாது.
ஏழுபது லட்சம் வீட்டை நாங்கள் முன்பே முடிவு செய்த மலையாளிக்கு தான் அதுவும் இவருக்கு தான் கொடுப்போம் என முன்னமேயே அறிவித்துவிட்டு பாடச்சொன்னால் உத்தமம். இது மொழி வெறியோ அல்லது இனவெறியோ அல்ல விஜய் டிவியின் செயல்பாடுகளால் எழுந்த கேள்விக்கனைகள். மேலும் அரவிந்திற்கு கொடுப்பதில் யாருக்க்கும் எந்த பிரச்சனையும் இல்லை முன்னமேயே தன் தளத்தை அமைத்துக்கொண்டவருக்கு காவடி எடுத்தது தான் எல்லோராலும் கோபமாக பகிரப்படுகிறது.
*************************************************
- Vijayachakravarthy SP அவர்களின் பதிவு
விஜய் டிவியின் ஜூப்பர் ஜிங்கரில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்ற நபர் வெற்றி பெற்றார் என்பதை தெரியாதவர்கள் இன்று தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது.
அதில் ஒரு எபிசோட் கூட பார்த்ததில்லை என்பதால் அந்த நபரின் முகம் கூட எனக்கு தெரியாது. ஆனால் சற்றே வித்தியாசமான அந்த பெயரை எங்கேயோ கேட்ட மாதிரியே இருந்ததாக மனதை குடைந்து கொண்டே இருந்தது.
பாட்டு கேட்பது ரொம்ப பிடித்தமான பொழுதுபோக்கு என்பதால் என் மொபைலில் கிட்டத்தட்ட 2500 பாடல்கள் வைத்திருக்கிறேன்.
பெரும்பாலானவையில் பாடல்களை பற்றிய விவரங்களை (படத்தின் பெயர், பாடகர்கள், இசையமைப்பாளர்..) தெளிவாக tag செய்திருப்பேன்.
அந்த தொகுப்பில் இந்த பெயரை போட்டு தேடியதில் வந்து விழுந்தன அதிகம் பிரபலமடையாத ஆனால் எனக்கு மிகவும் பிடித்த இரு பாடல்கள்.
1. இந்த வான்வெளி விடியாதோ - படம்: ஆரோகணம்(2012)
2. யார் வீட்டு மகனோ -
படம்: நீர்ப்பறவை(2012)
இரண்டு பாடல்களும் Male Solo, பாடியவர் ஆனந்த் அரவிந்தாக்ஷன்!
இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்ததில் 10 எண்றதுக்குள்ள, இவன் வேற மாதிரி, பாண்டிய நாடு, மத யானை கூட்டம், உள்ளிட்ட பல படங்களில் பாடியிருக்கிறார் இவர். இந்த தகவலை எதாவதொரு எபிசோடில் சொன்னார்களா என்பது தெரியவில்லை. ஓரளவு தொடர்ச்சியாக பார்த்தவர்களிடம் கேட்ட போது அவர்களுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
பார்வையாளர்களை எவ்வளவு கேனையர்களாக நினைத்திருந்தால் ஒரு பிண்ணனி பாடகரை போட்டியாளராக கொண்டு வந்து, அவரை பாதியில் எலிமினேட் செய்து, மீண்டும் wild card என்ற பெயரில் உள்ளே கூட்டி வந்து, மக்களை முட்டாளாக்கி எஸ்.எம்.எஸ் ஓட்டு போட வைத்து அவரை வெற்றியாளராக தேர்ந்தெடுப்பார்கள்.
இது ஒரு பெரிய ஏமாற்று வேலை என்று பல முறை பலர் சொன்ன போது ஏற்றுக்கொள்ளாதவர்கள் இது போன்ற போலி நிகழ்ச்சிகளை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் உருப்படியாக எதாவது செய்யலாம்.
- Vijayachakravarthy SP


1 கருத்து:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஏற்கனவே பின்னணி பாடியவரை தேர்வு செய்தது தவறுதான்.ராஜகனபதியை விஜய் டிவி பிக்ஸ் தெய்திருக்கும் என நினைத்தேன். இடையில் வேறு ஒரு டீலிங் போலிருக்கிறது. இன்னும் ஆறு மாதத்திற்கு புது சூப்பர் சிங்கர் தொடங்காமல் இருக்க வேண்டும்.