23 அக்டோபர் 2025
ராஜகிரி தாவூத் பாட்சா கல்லூரி - A Poem about Rajagiri Dawood Batcha College RDB
நான் படித்த கல்லூரி இது பற்றி
நாளெல்லாம் எங்கள் நாவுரைப்பதை
உள்ளமெல்லாம் கள்ளூறி
உள்ளன்போடு நானும் இங்கே
பகிர வந்திருக்கிறேன்
பதிக்க வந்திருக்கிறேன்.
ஆர் டி பி,
அவர் தான் எங்களின் கம்பீர
டி பி களுக்கு பின்னால் இருப்பவர்.
அவருக்கு எங்கள் முதல் நன்றி,
எங்கள் பெருமிதம்
சாத்தியமே இல்லை அவர் இன்றி.
கல்வி என்பது சமுதாயத்தில்
ஒருபால் சார்பாய் இருந்ததை
அண்ணல் நபிமணியின்
கண்ணல் மொழிப்பிரகாரம்
ஆண்பால் பெண்பால் என
இருபாலருக்கும் பொதுவென
இப்பிரதேசத்தில் சாத்தியப்படுத்தி
சாதனை செய்தது ஆர்டிபி.
தூரத்தின் முதுகில்
பயணம் அனுப்பிப்
படிக்க வைக்க வேண்டுமே
என்றே தள்ளி வைக்கப்பட்ட
எங்களின் மேற்படிப்படிப்பை
அதாவது இப்பகுதி
பெண்களின் மேற்படிப்பைப்
பக்கத்தில் கொண்டு வந்து
பட்டம் கொடுத்தது ஆர்டிபி.
ராஜகிரியிலிருந்து புறப்பட்டு
அமீரகத்தில் பணியாற்றி
தமிழ் உணவகமாய்
பலரின் பசியாற்றி
பொருள் சேர்த்தவரால்
எங்கள் இருள் நீக்கிவைத்தது ஆர்டிபி
வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தது ஆர்டிபி.
ஆம் பாபத்தைப் போக்கி வைக்கும்
பாபநாசத்தில் உண்மையாகவே
அறியாமைப் பாவத்தைத் துடைத்தெறிந்தது
அறிவுக்கோட்டையாம் ஆர்டிபி யாவருக்கும்
பரிவுக் கோட்டையாம் ஆர்டிபி.
அதனால் இன்று
வாழ்வைப் புரிந்தோம்
வாழ்வில் உயர்ந்தோம்
எந்நாளும் எங்கள்
ஆழ்மன நன்றி ஆர்டிபி.
வாழ்நாள் நன்றி ஆர்டிபி.
-மேனாள் மாணவி முவாஃபிகா
14-07-2025
01 ஆகஸ்ட் 2024
ஒவ்வொரு நாட்களுமே
ஒவ்வொரு நாட்களுமே.. சுப்பர் சிங்கர் பரீதா
ஒவ்வொரு நாட்களுமே விடிகிறதே
நபிநாதர் மஹமூதர் ஒளியாலே
ஒவ்வொரு நாட்களுமே நிறைகிறதே
இறைத்தூதர் ஹாமீமின் நெறியாளே
அஹதோன் நபியை தந்தான் தன் நூரில் -
அவனே
யாவும் அமைத்தான் நபி நூரில்
மனிதா ஒ மனிதா நீ உணர்ந்துவிடு
நபி அருமை அதை அறிந்தே நீ வெற்றி பெறு
-1-
நன்றி உள்ள உள்ளத்தில்
நாயகத்தின் நேசம் வரும்
வாழ்வளித்த
வள்ளல் பேரில்
எல்லை
இல்லா பாசம் வரும்
பாலை நிலம் மீதில் வந்த
பால்
வார்க்கும் தாயம்மா
நிதம் ஊறும் ஜம்ஜம் போலே
நாதன் தந்த கொடையம்மா
கல்லாலும் சொல்லாலெல்லாம்
காயங்கள் செய்தவரை
எந்நாளும் சபித்திடாத
பொன்னான நல்மனதார்
வாழ்க்கை முழுதும் போராடி
வாழவைத்த முன்னோடி
வாழ்தல் அர்த்தம் பெற
வள்ளல் திசையில் சென்றால்
இந்த பிறப்பே சிறப்பாகும்
மனிதா ஒ மனிதா நீ உணர்ந்துவிடு
நபி அருமை அதை அறிந்தே நீ வெற்றி பெறு
-2-
வாழ்த்துக்கவிதை வாசிப்போம்
வாழ்வில் என்றும் நேசிப்போம்
நபியின் நேசம் என்ற ஒன்றை
மஹ்சர் வரைக்கும் யாசிப்போம்
லட்சம் தூதர் வந்தாரே
லட்சியரை பகர்ந்திடத்தான்
ரட்சகனே மெச்சும் திருவை
நினைத்து நெகிழ்ந்து நீ பாடு
யார் தான் இங்கு பிறந்தாரம்மா
புவிமீதில் நபிபோலே
பார் தான் அது பார்க்கவுமில்லை
பண்பாளர் நபிபோலே
இறைவனவன் துணையோடும்
இகத்தை மாற்றும் முனைப்போடும்
ஏந்தல் எழுந்து வந்தார்
தீனை தினம் உரைத்தார்
ஏதும்
சமரசம் செய்யாது
மனிதா ஒ மனிதா நீ உணர்ந்துவிடு
நபி அருமை அதை அறிந்தே நீ வெற்றி பெறு
ஒவ்வொரு நாட்களுமே விடிகிறதே
நபிநாதர் மஹமூதர் ஒளியாலே
ஒவ்வொரு நாட்களுமே நிறைகிறதே
இறைத்தூதர் ஹாமீமின் நெறியாளே
அஹதோன் நபியை தந்தான் தன் நூரில் -
அவனே
யாவும் அமைத்தான் நபி நூரில்
மனிதா ஒ மனிதா நீ உணர்ந்துவிடு
நபி அருமை அதை அறிந்தே நீ வெற்றி பெறு
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
01-08-2024

