19 மே 2016

2016 சட்டமன்ற தேர்தல் - திமுக தோல்விக்கான பத்து காரணங்கள்....


1.சென்றமுறை போலவே இம்முறையும் ஏதிரியை வீழ்த்த சரியான திட்டமிடல் இல்லை

2.கூட்டணி சேர்ப்பதில் காட்டிய அலட்சியம் மிகமுக்கிய காரணம் அதிலும் இருந்த திருமாவை விட்டிருக்ககூடாதுபேரத்தில் பணிய மறுத்த விசயகாந்தையும் வைத்திருந்திருக்க வேண்டும் ஏனென்னால் ஜெதிமுகவை வீழ்த்த அது ஆளுங்கட்சியாக இருந்த 1991 மற்றும் 2001 தேர்தல்களில் பலமான கூட்டணியை வைத்து தான் வீழ்த்தினார்.

3.காசை போட்டு காசு எடுக்கும் வியாபாரம் எனத் அப்பட்டமாக தெரிந்த பின்னரும் திமுக அவ்வளவாக காசை இறக்கவில்லை.

4.கலைஞரின் தலைமையில் கழகம் செல்லும் ஆனால் ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்திருக்க வேண்டும்அது இளம் வாக்காளர்களை கவர்ந்திருக்கும்பல நடுநிலையான வாக்காளர்களின் ஆதரவும் கிடைத்திருக்கும்.

5.திமுகவில் முன்பு இருந்ததைப்போல தற்போதைக்கு அதன் கொள்கைகளை எடுத்துச்சொல்வதற்கு,2ஜிஈழம் போன்ற பல குற்றச்சாட்டுக்களை விளக்கி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் மனதில் பதியவைக்கப்பட்டிருக்கும் தப்பெண்ணங்களை நீக்கும்வண்ணமும்அரசின் ஊழலைஅவலத்தை எடுத்துச்சொல்லும் வண்ணமும் அடுத்த தலைமுறை பேச்சாளர்களை உருவாக்காமல் போனது அதுவும் பேச்சாளர்களுக்கு பெயர்போன திமுகவிலேயே என்பது ஒரு மிகப்பெரிய காரணம்.

6.காங்கிரஸ்க்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி இருக்கக்கூடாது, அதிலும் கூட ஜெ. அழகாக முன்னெடுத்து அனைத்து தொகுதிகளிலும் தஙக்ள் கட்சியே நிற்கும்படி பார்த்துக்கொண்டார். அவ்வாறு நேரடி போட்டி நடந்திருந்தாலும் இன்னேரம் திமுக வென்றிருக்கும்.

7.தயாநிதி மாறன் போன்ற மக்களின் ஆதரவைப்பெறாதவர்களை இன்னும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றியது இதுவும் பார்க்கும் மக்களின் மனசுக்கு ஏற்றதாக இருந்திருக்கவில்லை என்பதும் கருதப்படவேண்டியது.

8.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்த பின்னரும் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள், அழகிரி பிரச்சனை என இன்னும் சில குளறுபடிகளை அடக்காதது.

9.பெண்களை கவரும் வண்ணம் இன்னும் பிரச்சார யுக்திகளை அது மேம்படுததாதது, பெண் பிரச்சாரகர்களை அதிகப்படுத்தாதது.

10. ஜெயிக்கும் சாத்தியக்கூறுகள் நிறைய இருந்தும் வெற்றி தான் என இறுமாந்திருக்காமல் திமுக அதை மிக அதை அடைய மேலதிக உழைப்பை செயல்படுத்தாதது மிகப்பெரிய மைனஸ்.

என பெற்றிருக்க வேண்டிய அடைந்திருக்க வேண்டிய வெற்றியை பறிகொடுத்ததற்கு காரணம் சொல்லிக்கொண்டே போகலாம். ஏனென்றால் வெறும் ஒரு சதவீத வேறுபாட்டில் தான் தோற்றுப்போயிருக்கிறது. அது தான் பரிதாபம். அதுவும் அப்பாவு போன்றவர்கள் 49 வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கின்றனர்.
ஆக, சிறுசிறு தவறுகள் சேர்ந்த அசட்டு அலட்சியம் திமுகவின் ஐந்து ஆண்டுகளின் அரசியல் வெற்றிப்பயணத்தையே புரட்டிப்போட்டுவிட்டது. எப்போதும் போல் ஜெ இம்முறையும் சூழலை லாவகமாகப் பயன்படுத்தினார் ஜெ.ஜெயித்தார் என்று சொல்வதைவிட திமுக தோற்றுப்போனது என்று சொல்வது தான் பொருத்தம். இந்த தோல்வியில் ஸ்டாலினின் ஒன்னரை ஆண்டு உழைப்பு, 93 வயது முதியவரின் அயராத போராட்டம் இதெற்கெல்லாம் பயன்கிடைக்காமல் போய்விட்டதே என்ற ஏக்கம் தான் மேலிடுகிறது.


19-05-2016
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

வைகோவின் சதி திட்டத்தை முறியடித்து இருந்தால் dmk ஜெயித்து இருக்கும் !

வேகநரி சொன்னது…

பலருக்கு கால் நிலத்திலே பதிக்காத சீமாட்டி தம்மை ஆளுவது விருப்பம். டாஸ்மாக் இல்லாமல் போய்விடும் என்ற கவலை வேறு (: