ஜூலை மாதம் வந்தாலே ஜோடி சேர்ந்த நினைவு தான்... அப்படியே ரொமேன்டிக்கில் மூழ்கிவிடுவேன், பழைய நினைவுகளை நினைத்தாவது தேற்றிக்கொள்வோமென்று தான். அவற்றை நினைத்தாலே அப்படி ஒரு சுகம்.
என் அழகிய ராட்சசி இருக்கிறாளே அவள் எனக்கு கிடைத்த வரம். நேற்று பார்த்த சுல்தான் திரைப்படத்தில் ஒரு காட்சியில் சல்மான்கான் சொல்லுவார்.. "மனைவிகளெல்லாம் பிறவி சண்டைக்காரிகள்" என்று ஆனால் அந்த சண்டைக்காரிகள் இல்லாத அல்லது சண்டைகள் இல்லாத வாழ்வு சுவாரஸ்யமாய் இருக்காது, அது தான் ரசம் கூட்டுகிறது, அது தான் திடீரென தூரமாக்கி.. பின் இடைவெளியே இல்லாமலும் ஆக்கி சுவர்க்க சுகம் கொண்டுவரும். அதே படத்தில் இன்னொரு அழகான வசனம் கூட சொல்வார் கணவன் மனைவியின் அன்பென்பது "எக்ஸ்பெயரி டேட் இல்லாத லவ் அதாவது முடிவுறாத அன்பு" என்று அந்த அன்பில் தான் பிணைக்கப்பட்டு உனக்கு நான்.. எனக்கு நீ.. மொத்தத்தில் "நமக்கு நாமே" என்று நீள்கிறது எங்கள் வாழ்க்கைப்பயணம். மேலும் எங்களின் பெற்றோர், குடும்பத்து பெரியவர்கள் மற்றும் நல்ல ஆன்மாக்களின் தூய வாழ்த்துக்கள் மற்றும் துஆக்கள் இவற்றோடு வளங்கள் சேர, பலங்கள் சேர செவ்வனே நல்லற வாகனம் பயணம் தொடர்கிறது. பயணத்துணைக்காய் வலது இடதென நளீர் மற்றும் ஜைனப் என்ற இருமலர்களை இறைவன் தனது அன்பின் கரங்களால் அவனே அளித்து இன்னும் இன்பம் கூட்டியிருக்கிறான்.
காலம் தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது, ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது அந்த இன்ப நிகழ்வு, அதற்குள் ஒன்பது ஆண்டு நிறைவுற்று பத்தாவது ஆண்டில் எங்கள் இல்லறம். இன்று எங்கள் திருமணநாள்.
எல்லோரும் சிறந்து வாழ்வோம்.
(இத்தனை வருடங்களில் இது தான் நான் இடும் முதல்
திருமண நாள் பதிவு)
திருமண நாள் பதிவு)
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
5 கருத்துகள்:
பத்தாவது ஆண்டா!
வாழ்த்துக்கள்.
நன்றி சார்
இனிதே பத்தாவது ஆண்டில்
வாழ்க்கைப் பயணம் தொடரவும்
நீடூழி வாழவும் வாழ்த்துக்கள்!
மகிழ்ச்சி ஜீவலிங்கம் சார்
Hi!
Been reading ur blog recently and its found interesting
Am from Thiruvarur
Happy Marriage Anniversary
கருத்துரையிடுக