நிச்சயம் நாயகத்தின் நேசர்கள் மகிழ்வுடன் கேட்டு பரவசம் அடைவீர்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களது அகமியத்தைக் கூறும் பாடல் உங்களுக்காக இதோ..
2017ல் அபுல் பரக்காத் குரலில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற இப்பாடலை அன்பு நண்பர் ஹாஜித் இப்ராஹிம் Hajith Ibrahim சேனலில் வெளியிட நான் அனுப்பிய போது பத்துக்கும் மேற்பட்ட முறை இப்பாடலை கேட்டு உடனே எனக்கும் போன் செய்து சிலாகித்தார்.
இப்போது அவரே ரீ- ரிக்கார்டு செய்து ஷ்மாய்ளா என்னும் சகோதரி பாடி இப்பாடல் வெளிவந்திருக்கிறது.
பாடல் வரிகளும் யூ டியூப் கமெண்டில் உள்ளது.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ அலா ஆலிஹி வசஹ்பிஹி வஸல்லம்.
- ஜா.மு.
பல்லவி:பெருங்காதல் உணர்வோடு நபியைபேரருளாக தந்தானே புவியில் – அவன்பெருங்காதல் உணர்வோடு நபியைபேரருளாக தந்தானே புவியில்அனுபல்லவி:தன் நூராக வைத்திருந்தான் ஒளிவாய்பின்பு தாஹாவாய் அமைத்தானே நிறைவாய்சரணம் :அமாவெனும் இருளில் அறியாது கிடந்தான்கமாலெனும் நிலையையே புரியாது இருந்தான்சமாவெனும் வானும் விண்கோள்கள் இல்லைநபி சர்தாரைக் கொண்டே சமதவனை அறிந்தான்***ஆதத்தின் சாரம் அவன் சமைக்கும் முன்பேஅஹ்மதின் நாதம் அவன் ஆக்கிவைத்தான்நீதத்தின் ஓசை நிலமெல்லாம் ஒலிக்கபோதத்தின் வடிவாய் நபி யாஸினை தந்தான்.***நல்வழிகாட்ட பலரை நபியாக்கி வைத்தான்நபித்துவ அசலாய் நம் மஹமூதை அமைத்தான்ஃகலீல் கலீம் ரூஹென்று நபிமார்கள் வந்தார்ஹபீபென்று அன்பால் அஹ்மதனில் லயித்தான்***மூஸா நபிக்கோ ஊசிமுனைக் காட்சிமுஹம்மதற்களித்தான் மிஃராஜெனும் மாட்சிஎல்லோரும் அஞ்சும் மஹ்சரின் நாளில்மகாமன் மஹ்மூதில் நீர் இருப்பீர் என்றான்***ரப்புல் ஆலமீன் என தன்னை விண்டவன்ரஹமதுலில் ஆலமீன் எனநபியை விளித்தான்இப்பெரும் சிறப்பெல்லாம் ஒருநபிக்கும் இல்லைஇனியுகம் ஜகமெதற்கும் நபிமஹ்மூதே என்றான்
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
குறிப்பு: சங்கைநபி ஒலிப்பேழையில் 2016ல் பாடகர் அபுல் பரக்காத் பாடி வெளிவந்து மிக வரவேற்பை பெற்ற பாடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக