• பொதுவான எல்லா கமல் படம் போல அவரே ஆக்கிரமிக்கும் படமல்ல.. பகத், விசே என எல்லோருக்கும் முக்கியத்துவம் அளித்து பகிர்ந்திருக்கும் முதல் படம். எல்லோருக்குமான அறிமுகம் அருமை, நம் சூர்யா கூட கடைசி இரண்டு நிமிடத்தில் அசத்துகிறார்.
• படத்தில் மலையாளிகள் பட்டாளம் நிறைய நடித்துள்ளது.
• படத்தின் கருவான போதை மருந்து உலகம் மற்றும் வன்முறை கும்பல் முக்கியமாக பகத் பாசில் பாத்திரம் Saravanan Chandran எழுதிய அஜ்வா நாவலின் வாசத்தை நினைவு படுத்தியது.
• இது போன்ற கும்பலின் உலகமே தனி, அவர்களின் தொழில் எப்போதும் தடையற அரசாங்கத்தின் மற்றும் அதிகாரிகளின் துணையோடு மாநிலம், நாடு, உலகம் என எல்லா தளங்களிலும் இயங்கிக்கொண்டிருப்பதும் அவர்கள் எல்லா மட்டத்திலும் நினைத்ததை சாதிப்பதும் கண்கூடு. தமிழ்நாட்டின் போதை உலகமும் கற்பனைக்கு எட்டாதது. இப்போது கூட அதன் பரவல் குறித்தும் அதனால் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் குறித்தும் அதிகப் பேச்சு அடிப்படுகிறது, முந்தைய எடப்பாடி ஆட்சியிலும் பரவியிருந்ததை தடுக்க இயலாததை இந்நாள் முதல்வரே அப்போது அடிக்கடி பேசியிருக்கிறார்.
• படத்தில் இயக்குநர் மற்றும் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் மிகக்கடின உழைப்பைத் தந்திருக்கிறார்கள். படம் முழுக்க விறுவிறுப்பு.. சின்ன இடங்களில் கொஞ்சம் தொய்வு ஆனாலும் எதிர்பாரா திருப்பங்களால் நம்மை ஈர்க்கிறது.
•கமலுக்கு ஏற்ற கதாபாத்திரம், 80களில் எடுக்க வைத்திருந்த அவரின் பட்டியலில் இருந்த இக்கதைக்கு இப்போதைக்கு தகுந்தாற்போல உயிரூட்டியுள்ளனர்.
•விஸ்வரூபம் -2 என்ற குப்பைக்கு பிறகு நல்ல படம்.
•சினிமா ரசிகர்களுக்கும், ஆண்டவர் வெறியர்களுக்கும் இது சிறப்பான ட்ரீட்.
•தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படவரிசையில் விக்ரம் '22.
-ஜா.மு.
0o0
பி.கு: பொதுவாக எல்லா நல்ல படங்களையும் அரங்கில் சென்று பார்த்தாலும் அதுகுறித்து எழுத சூழல் காரணமாக பெரும்பாலும் முடிவதில்லை, இப்போது கமல் எழுத வைத்துவிட்டார்.
0o0
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக