பி.ஜே
வின் சமீபத்திய புதிய தலைமுறை தொலைக்காட்சிப் பேட்டி பற்றி என் கருத்தாக இங்கே சிலவற்றை
பதிவு செய்கிறேன்.
நானும்
அந்த பேட்டி முழுவதையும் பார்த்தேன்.. ரசிக்கும் படியாக இருந்தது.. கேள்விக்கு ஏதும்
நேர இடைவெளியோ அல்லது மழுப்பலோ இல்லாமல் பேசியது அவரது திறமையை காட்டியது. இதை பார்த்து
அவரது ரசிகர்களும், ரசிகர் அல்லாத பாமரர்களும் ஆஹா.. ஓஹோ என புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
இவரல்லவா தலைவர் என்பது போல ஒரு பிரமை பிடித்து பேசுகின்றனர். ஆனால் இவரது அந்த திறமை
தான் அவர் நடத்தும் பிழைப்பிற்கு மூலதனம். இதை நுணுக்கமாக ஆய்ந்து புரிபவர் மட்டுமே
பிழைக்க முடியும் இல்லாவிட்டால் இவரது பொய்யை மெய்யென்றும் மெய்யை பொய்யென்றும் சொல்லும் சூழ்ச்சிக்கு இரையாகிவிடுவர்.
ஏனென்றால்
பொய்யை மெய்யெனவும்.. மெய்யை பொய்யெனவும் மாற்றும் போது முகபாவனையை சற்றும் மாற்றாமல்
அப்படியே அப்பட்டமாக பேசும் வல்லமை அவருக்கே அன்றி வேறாருக்கும் இல்லை. இதை அவரது கடந்த
கால வரலாறு மெய்பித்திருக்கிறது. பேட்டியில் அவரையும், அவரது ஜமாத்தையும் தவிர ஒட்டுமொத்த
சமூகத்தினரையும் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவர் எனவும், வரதட்சணை, வட்டி வாங்குபவர்கள்,
முன்னோர்களை வணக்கம் செய்பவர்கள் எனவும் இல்லாததை இட்டுக்கட்டி சொன்ன விதம் மிகவும்
கண்டனத்திற்குறியது.
சமூக மக்களின் அறியாமையையும், அவர்களின் பலகீன நாடியையும் சரியாக விளங்கிவைத்திருப்பவர் என்ற தகுதியே அவரை இன்றுவரை இயக்கத்தின் தலைவரெனவும், இமாம்களை மறுக்கும் இளைஞர்களின் இமாமாகவும், சிலருக்கு இல்லாத தீர்கதரிசியாகவுமே வலம்வரவைத்திருக்கிறது. சமீபத்தில் தன்னுடைய சரிந்த செல்வாக்கை நிலைநிறுத்தவே மக்களிடத்தில் எப்படி மீண்டும் தான் விவாதப்பொருளாக மாற வேண்டும் என்று திட்டமிட்டு சூனிய நாடகத்தை அரங்கேற்றி வெற்றி கண்டிருக்கிறார். இதனால் அவர் தன் திட்டமிட்டபடியே எங்கும் வெகுவாக பேசப்பட்டு மீண்டும் சற்று எல்லா இடங்களிலும் பிரபலமாகி இருக்கிறார். இதெல்லாம் இவரது அசாத்திய திறமை என்றால் மிகையில்லை.
மயிலாடுதுறை தொகுதியில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் நின்றும் அவர் தங்களுக்கு பிடிக்காத தமுமுகவின் ஹைதர் அலி என்பதற்காகவே நீங்கள் மணிசங்கர் ஐய்யரை ஆதரித்தது வெறுப்பரசியல் தானே என்று கேட்டற்கு அவர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் தனது வெறுப்பரசியல் முகத்தை வெளிக்காட்டமல் முஸ்லிம்கள் எல்லாம் மணிசங்கர் ஐயர் பக்கம் இருந்தார்கள் என்று தனக்கு செய்தி வந்தது என்றும் அதை தொடர்ந்து அவர் சொன்ன பதில்களும் எல்லோரையும் வியப்பின் உச்சியில் ஆழ்த்தியிருக்கும்.
மேலும் கேவை குண்டு வெடிப்பை முஸ்லிம்கள் தான் வைத்தார்கள் என்று ஒத்துக்கொள்கிறேன் என்கிறார்.. உண்மையில் தொன்னூறுகளுக்கு அப்பால் நடந்த பல கலவரங்களின் பின்னணியில் இவர் போன்றவர்களின் பேச்சு இளைஞர்களை எவ்வாறெல்லாம் ஆட்டிவைத்தது என்று எல்லொருக்கும் தெரியும். அவர் முன்பு தமுமுக-வில் இருந்த போது பாபரி மஸ்ஜித் மீட்பு, மறக்கமுடியுமா டிசம்பர் 6 ஐ, இடஒதுக்கீடு போராட்டம், அப்படி இப்படி என உண்மையில் ஒரு ஆணியையும் பிடுங்க வக்கில்லமல் இருந்தாலும் மக்களை ஏமாற்றி இவர் நடத்திய மேடைப்புரட்சிகள் ஏராளம்.அப்படி இருந்தும் அவருக்கே உரிய திறமையால் தான் தீவிரவாத எதிர்பாளர் என பொதுச்சமூகத்தில் காட்டும் வண்ணம் ஐ.எஸ் விசயத்தில் அவர் திறமையாகவே பேசி இருக்கிறார், பனியன் அணிந்த இளைஞர்களையும் ஒன்றுமே அறியாதவர்கள் ஒரு ஹிரோயிச ஈர்ப்பால் போட்டுவிட்டார்கள் என்றார். ஒரு அரசு தான் ஆயுதம் தாங்கி போராட வேண்டும் தனிப்பட்ட அமைப்பிற்கோ தனிப்பட்ட ஆளுக்கோ அது இஸ்லாத்தில் இடமில்லை என்றெல்லாம் பேசி இவரைப்பற்றி தெரியாத மக்களிடமும், இவருக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தவர்களிடத்திலும் மிகுந்த நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் உண்டாகும் வண்ணம் பேசி பேட்டியை முடித்தார்.

இன்று
பி.ஜேவின் கூற்றை ஏற்று ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக பேசக்கூடியவர்கள் அன்றே பேராசிரியர்
காதர் முகைதீன் போன்ற பழுத்த அரசியல்வாதிகள், சமூகக்காவலர்கள் ஐ.எஸ் அமைப்பினர் நிராகரிக்கப்பட
வேண்டியவர்கள், அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை உடையவர்கள் என சொன்ன போது அவர்களை
எள்ளி நகையாடினர்.. பண்பட்ட பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களை கிறுக்கர் எனும் அளவுக்கு
நிதானமிழந்து விமர்சித்தனர். அப்படியெனில் இன்றைய அவர்களின் நிலைப்பாடு என்ப்து பி
ஜே என்ற தனிநபர் துதுயாகவே அறியப்பட வைக்கிறதே தவிர அவரது அடிவருடிகள் தெளிவாக பேசுகின்றனர்
அல்லது தெளிவான தீவிரவாத எதிர் நிலைப்படு கொண்டிருக்கின்றனர் என்பதை அல்ல. ஏனெனில் பேட்டிக்கு
முன்பு தன் இயக்கத்தினரையோ அல்லது தனக்கு உடன்படும் இந்த சமூகத்தின் சிலரையோ, பனியன்
பிரச்சனை வந்த பிறகாவது ஐ.எஸ் குறித்து தனது நிலைப்பாட்டை சொல்லி அவர்களை புறக்கணிக்க வேண்டுமென தெளிவுபடுத்தி இருக்க வேண்டும், அப்படி இல்லாமல் இப்போது பொது மன்றத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டி என வருகிறதென்பதால் இப்போது மட்டும் அவ்வியக்கத்தினரை இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று சொல்லுவது ஊடத்திற்காக அவர்
காட்டும் முகமாகவே படுகிறது. இதையெல்லாம் சிந்தித்து பார்த்து நடுநிலை நெஞ்சங்கள் திருந்துமா? உண்மையான் தீவிரவாத எதிர்பாளர்களை.. சமூக நலவாதிகளை கண்டுகொள்ளுமா என்பதே இன்றைய கேள்வி.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக