"கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாய கடமை" என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களது அருள்மொழி
மன அமைதியை நாடுபவர்கள்..தனக்கும், மற்றவருக்கும் நிம்மதியை நாடுபவர்கள்.. ஆன்ம சாந்தியை இலக்காக கொள்பவர்கள் இவர்கள் தான் முஸ்லிம்கள் அதாவது அமைதிப்பாதையில் பயணிப்பவர்கள். இந்த வரையறை மனிதகுலம் அனைத்திற்கும் பொதுவான சொந்தம். அப்படியான அமைதியாளர்கள்.. உலக அமைதி விரும்பிகள்.. சாந்தமானவர்கள் எல்லோரும் கல்வி கற்பது அவசியம் என்றார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்.
கல்வி கற்றால் தான் அமைதி சாத்தியம். கல்வி கற்று ஞானம் அடைபவர்களால் தான் சாந்தியில் நிலைபெற முடியும். கல்வியே சாந்தி தரும். அறியாமை இருந்தால் அன்மசாந்தி அடையமுடியாது. ஆதலால் தான் அண்ணல் நம் பெருமானார் முஹம்மது நபிகள் ஸல்லல்லஹு அலைஹிவசல்லம் அவர்கள் சாந்தியாளர்கள் அல்லது சாந்தியாளர்களாக விரும்புவர் அனைவர் மீதும் கல்வி கட்டாயம்.. மிக அவசியம்.. அடிப்படை என அன்றே சொல்லிச் சென்றார்கள். கசடற கற்றால் மனம் தூய்மையில் துய்க்கும். அப்போது பேதம் ஒழியும் அன்பும் அறமும் தழைக்கும் என்றால் எங்கும் நிலைபெறுவது சாந்தி தானே! நிம்மதி தானே! அமைதி தானே!
இப்படி பொருள் கொண்டால் நலம்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக