24 செப்டம்பர் 2014

டெல்லி வாலிபனை கொன்றது புலி அல்ல பூங்கா தான்!


டெல்லி உயிரியல் பூங்காவில் தவறி விழுந்த மாணவனை புலி துடிக்க துடிக்க கொன்றவிதம் மிக கொடூரமானது, சிங்கம், புலி, சிறுத்தை, கரடி போன்ற பயங்கர மிருகங்களை வைத்திருக்கும் இவர்கள் அதற்கு தகுந்த பாதுகாப்பை கவனத்துடன் செய்திருக்க வேண்டும் பூங்காவிற்கு பலதரப்பட்ட குணமுடையவர்கள் வருவார்கள் உற்சாகமிகுதியால் பலவாறு விளையாட நேரிடும் அவ்வாறான சந்தர்பங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுப்பதற்கும் அவர்கள் முன்னேயே யோசித்து செயலாற்றி இருக்க வேண்டும், சரி விபத்து நடந்தவுடன் கூட சில நிமிடங்கள் வரை புலி அவனை பார்த்துக்கொண்டே பொறுமையாக யோசித்துக்கொண்டே தான் இருந்தது. இந்த சந்தர்ப்பம் அவனை பாதுகாக்க போதுமானது அந்த தருணத்தில் மயக்க ஊசியை புலிமீது பாய்ச்சி இருக்கலாம் அதுவும் ஸ்டாக் இல்லையாம், குறைந்த பட்சம் புலியை சுட்டிருக்கலாம் அந்த அளவு யோசிக்கவும், முடிவெடுக்கவும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எல்லோரும் பீதியில் கத்தி கதறி அலப்பறை செய்கிறார்களே ஒழிய யாரும் பாதுகாக்க ஆவண செய்யவில்லை.
இது முழுக்க முழுக்க பூங்கா நிர்வாகத்தின் திறமையின்மை, செயலிழப்பு, ஊழியர்களை விபத்து நேரத்தில் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்று பயிற்றுவிக்காமை, முதலுதவிக்கான கருவிகள் அல்லது குழுக்களை தயார்படுத்தி வைக்காமை என எல்லாம் அவர்களின் சீர்கேடே.. இது போலத் தான் என் தாய்த்திருநாட்டில் ஒவ்வொரு அசம்ப்பவிதம் நடந்து ஒன்றோ பலவோ உயிர்கள் பலியானால் தான் அந்த துறையோ அல்லது நிறுவனமோ திடீர் விழிப்படையும் பிறகு பழைய தூக்கத்தில் ஆழ்ந்துவிடும்.. நமது சென்னையில் அடுக்குமாடி கட்டிட சரிவு நிகழ்வு போல.. சென்ற வருடம் பள்ளி வாகனத்தின் உள்ளே இருந்த ஓட்டை வழி சரிந்து விழுந்து சிதறிய பாலகனை போல.. டெல்லியில் அந்த நல்லிரவில் பேருந்திருந்திலிருந்து கற்பழித்து வீசப்பட்ட இளம்பெண்ணைப் போல ஒரு துறை தற்காலிக விழிப்புநிலையெய்த இது போல சம்வங்கள் இங்கே நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
இது என் தேசத்தின் அவலம்.. என்ன செய்ய மங்கள்யானை நினைத்து பெருமைப் படும் இந்தியனான நான் இதையும் நினைத்து வெம்மவேண்டிருக்கிறது.
ஜெய் ஹிந்த்!!!!!!!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: