நமது "மணிச்சுடருக்கு" ஒரு முகநூல் பக்கம் அமைக்க வேண்டும், அது தனிப்பட்ட ஒருவர் என இல்லாமல் பதிப்பகத்தின் அங்கமாக இருக்கும் நிர்வாகிகளில் யாரேனும் ஒருவர் இருத்தல் சிறப்பு, அவ்வப்போதான சூழ்நிலைகளை செய்திகளாக, அல்லது இமேஜ்-ஆக பதிவேற்றி மக்கள் மன்றத்தில் கொண்டு சென்று சமூக நிலையையும், நமது நலைப்பாடையும் சொல்லிக்கொண்டே இருப்பது அவசியம். அப்போது தான் பலதரப்பட்ட சமூகத்தில் நல்ல புரிதலை உருவாக்க முடியும், தலைவர்கள் என்ற பெயரில் பலரிருக்கும் சமூகத்தில் தலைவருக்கான தனித்தன்மையுடன் இருக்கும் பேராசிரியர் பற்றிய உண்மை விளங்கும், இளைய சமூகத்திற்கு "லீக்" பற்றிய அணுக்கம் ஏற்படும். இது காலத்தின் கட்ட்டாயம்.
நாம் மணிச்சுடர் படிக்க ஒரு முஸ்லிம் லீக்-ன் அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலம் வழி வகுத்திருக்கிறோம் ஆனால் இன்றைய மக்களின் சோம்பேறித்தனத்தின் படிநிலை வளர்ச்சியில் யாரும் முஸ்லிம் லீக் இணையதளத்திற்கு போய் அதற்கு பிறகு மணிச்சுடர் பகுதிக்கு போய் அதற்கு பிறகு அன்றைய நாளின் பிரதியை படிப்பதெல்லாம் மிக சிரமம். இன்னும் சொல்லப்போனால் வலைதளமே இன்று வழக்கொழிந்த நிலையில் தான் ஆகிவிட்டது, அதை நாம் அதிகாரப்பூர்வ மற்றும் ஆவணப்படுத்தும் தளமாக வைத்துக்கொள்ளலாமே ஒழிய மக்களை சென்றடையும் வழியாக இன்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது. ஆகையால் விஞ்ஞானம் அழைக்கும் தொலைவிற்கு நாமும் செல்வது அதி முக்கியம், ஏனென்றால் கொள்கை இல்லாதவர்களும், சகோதரத்துவ, சமத்துவ கோட்பாடுகளுக்கு எதிரானவர்களும் தொழிற்நுட்பத்தை மிக பாதகமாக பயன் படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதே என் வேதனை.
நேற்று கூட அண்ணன் அபூஹாசிமா மணிச்சுடர் பற்றிய ஒரு பதிவை இட ஒரு நண்பர் நான் என்றோ பல வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரிடத்தில் பத்திரிக்கை பார்த்திருக்கிறேன், இன்றும் வருகிறதா என பின்னூட்டம் இடுகிறார். இத்தகைய நிலைமையை களைய நம் ஒவ்வொருவர் மீதும் கடமை இருக்கிறது. இன்று மணிச்சுடர் பல தியாகிகளின் பின்புலத்தில் உத்வேகம் கொண்டு வருகிறது என்பது திண்ணமான உண்மை ஆயினும் அதனை சமூகத்தின் கடைக்கோடியிலும் கொண்டு சேர்ப்பது அதன் இலக்கை நிறைவு படுத்தும்.
பிறைமேடைக்கும் இவ்வாறு அமைத்தல் இன்னும் நலம் பயக்கும். இதை என் போன்ற தாய்ச்சபை ஆதரவாளர்கள் செய்ய நெஞ்சத்துடிப்பு இருந்திடினும் இதை பதிப்பகத்தார் அல்லது நிர்வாகத்தின் சார்ப்பில் இருப்பவர்கள் செய்வதே இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது நிலைப்பாடு. அல்லது இதெற்கென இருக்கும் குழு இதை செய்யலாம். (என் போன்றவர்கள் அயலகத்தில் இருக்கிறோம் என்பதும் ஒரு நிலைமை இதையும் கருத்தில் கொள்க).
செய்வதை தொய்வின்றியும், களைப்பின்றியும் செய்வதில் தான் முழுமை இருக்கும்.
மணிச்சுடர் என் இளம்பிராயத்திலிருந்தே என்னோடு இணைந்த, இயைந்த நாளேடு.. அது என் பாட்டனார்கள் எனக்கு இட்ட அமுதம் அதை வைத்தே ஊடகங்கள் இலலாத அப்போதே சமூகத்தை காட்டும் கண்ணாடியாக அதை கண்டு கொண்டேன். அது கொணர்ந்திருக்கும் சமூக சிந்தனைகள், கவிதைகளின் தாக்கம், கட்டூரைகளின் விதை எல்லாம் அளப்பறியது. ஆகவே எனது உள்ளம் விரும்பும் ஒரு நாளேடு பற்றிய எனது எண்ணத்தை ஈங்கன் சொல்லி இருக்கிறேன்.
தொடர்புடையவர்கள் ஆவண செய்தால் மகிழ்வேன்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
__________________________________________________________________________
Reply from Our Vellore Ex.MP Janab.Abdul Rahman Shahib.
|
Sep 14
| |||
Tamil
English
Translate message
Turn off for: Tamil
Thambi,
I appreciate your anguish, anxiety and enthusiasm in propagating our journals.
Your suggestion is very much meaningful.
The said assignment is given to any salaried specific staff, we may see the expected result. If we add this job to any existing staff, I don't know how far it will go smoothly.
Can I suggest you one thing ?
As you are part of us and with real involvement, why don't you just start and continue for few days as a model.
You will get all info from our party website. At one stage, lets arrange some one to follow the steps you do.
You should not think that your own suggestion is getting diverted on you only. You know very well that I am a practical man to explore the reality.
I hope you all will appreciate the effort we took to bring a color machine for all our printing needs. Pl do Dua. It is going to take off on 15th Sept, the day of our National Executive Meet in Chennai. Everything what we dream will happen one after another Insha Allah.
Thanks for your write up.
Regards and Salaam.
Abdul Rahman
2 கருத்துகள்:
மதிப்பிற்குரிய தாய்ச்சபையின் தலைவர் உள்ளிட்ட நிர்வாக பெருமக்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
நலம்! நலமறிய ஆவல்!! நிற்க!!!
மணிச்சுடர்... அது தனிச்சுடர்... இனி வண்ணச்சுடர்... இதுவே சமுதாயத்தின் எண்ணச்சுடர்...
கடந்த 28 ஆண்டுகளாக சமுதாயத்தின் எண்ணங்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் ஒரே இதழான மணிச்சுடர் வண்ணமயமாக அதிக பக்கங்களில் வெளியான இந்நாள்... இந்திய இஸ்லாமிய இதழியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நன்னாளாகும்.
இதற்காக அல்லும் பகலும் உழைத்த அத்துனை நல்லுள்ளங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மை, மறுமை பேறுகளை அள்ளி வழங்கிட வேண்டும் என மனமார்ந்த துஆக்களை சமர்ப்பிக்கின்றேன்.
என் சார்பாகவும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சில கோரிக்கைகள் / யோசனைகள்:
1. மற்ற தமிழ் நாளிதழ்கள் போன்று மணிச்சுடர் நாளிதழுக்கென்று தனி இணையதளம். அதில் உலக செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை நமது சமுதாயத்தின் அனைத்து செய்திகளும் இடம் பெற வேண்டும். அவற்றில் பதிவாகும் முக்கிய செய்திகள் மட்டும் நாளிதழ்களில் இடம் பெற செய்யலாம்.
2. ஆடியோ / வீடியோ செய்திகளும் இடம் பெறும் வகையில் தளம் அமைய வேண்டும்.
3. உலகம் முழுவதும் செய்தியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். குறிப்பாக நமது அமைப்பு தேசிய அமைப்பாக இருப்பதால் இந்தியா முழுக்க செய்தி தொடர்பை பலப்படுத்த வேண்டும்.
4. செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை (ஆங்கிலம் / தமிழ்) வழங்க வேண்டும்.
5. விருப்பு வெறுப்பற்ற சமுதாயத்திற்கு தேவையான அனைத்து தகவல்களும் செய்தியாக, பேட்டியாக, கட்டுரையாக, கவிதையாக, கதையாக பல்சுவை கதம்பமாக வெளிவர வேண்டும்.
6. சிராஜுல் மில்லத் காலத்தில் மணிச்சுடருடன் வெள்ளிதோறும் வெள்ளிச்சுடர் இணைப்பு வெளியானதை போல் மீண்டும் அது போன்று சிறப்பு பக்கங்கள் வெளிவர வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் எல்லாம் தங்கள் அனைவருக்கும் அறியாத செய்திகள் அல்ல. இருப்பினும் என் மனதில் எழுந்த சில எண்ணங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
மற்றபடி என்னால் இயன்ற வரையில் தாய்ச்சபைக்கும், மணிச்சுடர், பிறைமேடை இதழ்களுக்கும் உதவியாக, ஒத்துழைப்பாக இருப்பேன் இன்ஷா அல்லாஹ்...
--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
தற்போதைய சாதாரண உறுப்பினர் (# 550/13),
முன்னாள் அமைப்புக் குழு உறுப்பினர்,
காயிதே மில்லத் பேரவை, குவைத்
அலைபேசி / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம்: (+965) 66 64 14 34 / 97 87 24 82
முகநூல் (Facebook): http://www.facebook.com/khaleelbaaqavee
இணையதளங்கள்: www.k-tic.com / www.mypno.com / www.ulamaa-pno.blogspot.com /www.muslimleaguetn.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
நேரலை (Ustream): http://www.ustream.tv/channel/ktic-live
மதிப்பிற்குரிய தாய்ச்சபையின் தலைவர் உள்ளிட்ட நிர்வாக பெருமக்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
நலம்! நலமறிய ஆவல்!! நிற்க!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
கடந்த நான்கு நாட்களாக தாய்ச்சபையின் இணையதளத்தை திறந்து பார்க்க முடியவில்லை.
"HTTP Error 404.0 - Not Found The resource you are looking for has been removed, had its name changed, or is temporarily unavailable" என்று செய்தி வருகின்றது.
தயவுசெய்து சரிபார்க்கவும்.
நன்றி
--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
தற்போதைய சாதாரண உறுப்பினர் (# 550/13),
முன்னாள் அமைப்புக் குழு உறுப்பினர்,
காயிதே மில்லத் பேரவை, குவைத்
அலைபேசி / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம்: (+965) 66 64 14 34 / 97 87 24 82
முகநூல் (Facebook): http://www.facebook.com/khaleelbaaqavee
இணையதளங்கள்: www.k-tic.com / www.mypno.com / www.ulamaa-pno.blogspot.com /www.muslimleaguetn.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
நேரலை (Ustream): http://www.ustream.tv/channel/ktic-live
கருத்துரையிடுக