பாலகுமாரன் ஐயா அவர்கள் முதுபெரும் எழுத்தாளர், பலரை தனது எழுத்துக்களால் ஆட்டுவித்தவர், பலர் தனது குரு என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன். எனக்கும் அவர் மீது விருப்பம் உண்டு. ஆனால் நமது முதிர்வின் விசாலமா அல்லது அவரின் சிந்தனைகளின் போக்கா என்று தெரியவில்லை சமீப காலமாக அவரின் எழுத்துக்கள், சிந்தனைகள் பெரியதோர் மையலை கொடுக்கவில்லை, அவைகள் எல்லைகளுக்குட்பட்டதாகவே தோன்றியது. ஆயினும் சரி பரவாயில்லை, பெரிய எழுத்தாளர், சாதனைகள் பல எழுத்தில் செய்தவர் என்ற அடிப்படையில் எனது மரியாதை தொடர்ந்தது.
ஆனால் பெரியாரின் பிறந்த நாளான இன்று பெரியாரை, பெரியாரியத்தை தனது ஏகபோக எதிரியாய், அழிக்கும் சக்தியாய் எண்ணி அவரது பதிவுகள் சிறுபிள்ளைத்தனமாய் இருந்தது கண்டு அதிர்ந்தேன். எனக்குள் சிரித்தேன். அவர் விளங்கிய பெரியார் அவ்வளவு தான்.
தூரமாய் புத்தகம் மட்டும் எழுதிய போது அவர்களது பலகீனங்கள் தெரிய வாய்ப்பில்லை, இப்போதெல்லாம் முகநூல் நிலைத்தகவல்கள் பலநேரம் அவர்களை அப்பட்டமாக காட்டிவிடுகிறது. இப்போது கூட நேரம் கடக்கவில்லை, உங்கள் மேதைமையை விட்டும் கொஞ்சம் கீழிறங்கி பெரியாரையும் அவர் அந்த காலத்தின் சூழலில் செய்த பெருஞ்சேவையையும் படித்துவிட்டு வாருங்கள் பாலகுமாரன் ஐயா; உங்கள் வெண்தாடி அர்த்தம் பெறும்.
பாலகுமாரன் சார், நீங்கள் எழுதுகிறீர்கள்
ஜாதி, மதம் கடந்து தானே நாங்கள் உங்களை வாசிக்கிறோம், உங்களை நேசிக்கிறோம். அது போல நாங்கள் ஜாதி, மதம் கடந்து தான் பெரியாரையும் நேசிக்கிறோம். ஒரு புறத்தில் அவர் கருத்தை சொல்லிவிட்டுத்தான் போகட்டுமே ஏன் இப்படி அடி வயிறு கலங்குகிறது.

நாத்தீகம் பேசுபவர்கள் மட்டுமல்ல..
இஸ்லாமியர்கள் பெரியாரை கொண்டாடுகிறோம், பெரும்பான்மை இந்துக்கள் பெரியாரை கொண்டாடுகின்றனர், கிருத்துவர்களும் கொண்டாடுகின்றனர். ஆனால் பெரியார் என்று சொன்னாலே சிலருக்கு மட்டும் ஏன் டரியலாகிறது.
இஸ்லாமியர்கள் பெரியாரை கொண்டாடுகிறோம், பெரும்பான்மை இந்துக்கள் பெரியாரை கொண்டாடுகின்றனர், கிருத்துவர்களும் கொண்டாடுகின்றனர். ஆனால் பெரியார் என்று சொன்னாலே சிலருக்கு மட்டும் ஏன் டரியலாகிறது.
2 கருத்துகள்:
இதுக்குத்தான் சொல்றது ...தாடி வைத்தவன் எல்லாம் பெரியார் ஆக முடியாது என்று :)
will you please give the link?
karthik amma
கருத்துரையிடுக