முகநூல் நண்பர் Bala Cartoonist Bala அவர்கள் நேற்றுமுன் தினம் ஈராக்கில் பாதிக்கப்பட்ட ஒரு யஜீதி இனப்பெண் அங்குள்ள பாராளுமன்றத்தில் அவ்வினத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி அழுது முறையிடும் கொடுமையான ஒரு யூடியூப் லின்க் கொடுத்திருந்தார். (மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் அக்குழுவின் மிக மோசமான கொடுஞ்செயல்கள் கண்டனத்திற்கு உரியது) இது போன்ற சென்சிடிவான வியங்களை அவர் எப்போதெல்லாம் பகிர்கிறாரோ அப்போதெல்லாம் பாசிச சிந்தனையாளர்களும், விசமிகள்லும், விளங்காதவர்களும் இது தான் தங்களுக்குள்ள மேடையெனக் கருதி.. ஒரு குஜராத் கலவரத்தை.. ஒரு முசாபர்பூர் கலவரத்தை நடத்தி..ப்போயிருப்பார்கள் அதாவது அந்த அளவிற்கு ஒரு புரியாமல் ரண கலமாக போயிருக்கும். அதில் பரிவாரங்களின் பிரதிநிதிகள் வேறு வந்து இஸ்லாத்தினை அவர்கள் எப்படி காண்பிக்க வேண்டுமோ அப்படி மிக மோசமாக காண்பித்து போயிருப்பார்கள். இது போன்ற பதிவுகளின் பின்னூட்டங்களை நான் பார்பது இல்லை, பார்த்தால் மனம் நோகும்.. தேவையில்லாத சிந்தனைகள் வரும்..என போய்விடுவேன்.. ஏனோ நான் பார்த்து அதில் இரண்டு மூன்று கருத்துகள் பதித்தேன் அது உங்கள் பார்வைக்கு....
*************
உலகத்தில் எத்தனையோ ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.. எத்தனையோ போராளி குழுக்கள் இருக்கிறது அதுவெல்லாம் அவர்கள் சார்ந்திருக்கிற மதம் சொல்கிற வகையில் தான் இருக்கிறார்கள் என்று நாம் எண்ண முடியுமா.. யாரோ ஒரு குழு செய்கிறது என்பதனால் அதை இஸ்லாம் அப்படித்தான் கூறியுள்ளது என்பதாக சொல்வதெல்லாம் அபத்தமும், அறிவீனமும். அப்படியானால் இந்தியாவில் பரிவாரங்கள் நடத்திய கலவரஙக்ளை இந்து சமயம் இப்படித்தான் செய்யச்சொன்னது என்றும், இலங்கையில் நடந்ததை பவுத்தம் சொன்னபிரகாரம் தான் செய்தார்கள் என்றும் சொல்லல் தகுமா.. சிந்திப்பீர்.
விரிவாக சிந்தித்து மனிதம் வளர்ப்போம்.
****************
திருக்குரானின் வசனத்தை போட்டு இதை தான் இஸ்லாம் சொல்கிறது என்று காட்டுவதில் எத்தனை மகிழ்ச்சி உங்களுக்கு, திருக்குர் ஆனின் வசனங்களை அதன் முன்.. பின்.. ஏதும் தெரியாமல் ஒரு பகுதியை போட்டு நீங்கள் போட பலரும் அதை பார்த்து பாருங்கள் எப்படி எல்லாம் இருக்கிறது என சொல்லிவிட்டு வெறுப்பை உமிழலாம் ஆனால் திருக்குர் ஆன் என்பது 23 வருடங்கள் நபிகள் நாயகத்தின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து அது சார்ந்து வெளியானது.. விமர்சிக்கும் உங்களில் யாரேனும் நல்ல சரித்திர ஆசிரியர்கள் எழுதிய நபிகள் நாயகத்தின் வரலாற்றை படித்தவர்கள் உண்டா.. இல்லை அறிஞர்கள் சொல்ல அதை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரிந்தவர்கள் உண்டா..பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், அண்ணா போன்றவர்கள் எல்லாம் இவற்றை கற்காமல் ஆராயாமல் தான் இஸ்லாத்தை ஏற்றி போற்றீனார்களா.. சிந்தியுங்கள்.. மக்களை ஒருங்கிணைப்பதில்.. எல்லா சமூகத்தையும் அரவணைப்பதில்.. ஒரு மனிதன் நெறி தவறி இருக்கிறான் என்றால் அவனை நெறிபடுத்துவதில் முனைப்பு காட்டுங்கள்.
இதில் என்ன வேடிக்கை என்றால் பெரும்பாலான இஸ்லாமியர்களே திருக்குர் ஆனை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரியாமல் பலரும் பலபிரிவாக இருந்து பேதங்கள் கொண்டலைகிறார்கள்.. (ஏனெனில் அவர்கள் தற்போது உருவாகி இருக்கும் நவீன இயக்கங்கள்.. குறுகிய சிந்தனையாளர்களீன் சிந்தனைக்கு தங்களை சிறைபடுத்திக்கொண்டிருக்கிறார்க ள் என்பதால்) அப்படி இருக்க நீங்கள் எப்படி புரிகிறீர்கள். திருக்குர் ஆனை புரிவதற்கு அதன் பின்புலம் தெரிய வேண்டும், எந்த சம்பவத்திற்காக இது வெளியானது என்ற விளக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.. இதெற்கெல்லாம் உலகம் முழுவதும் உள்ள நிறைய அறிஞர்கள் தப்ஸீர் என்ற விளக்க உரைகளை எழுதி இருக்கிறார்கள் இத்தனையும் இருக்கிறது.
நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள் அன்பால் இணைந்து உல்கம் ஆள்வோம். வாழ்வது கொஞ்சநாள் அன்பை விதைத்து செல்வோம்.
எப்போதும் Bala Cartoonist Bala இது போன்ற பதிவு போடும் போது இப்படியே வன்மம் கக்குவது வாடிக்கையாகிவிட்டது. நாம் மனிதர்கள்..
தீயவர்கள் தீயவர்களின் செயலை உதாரணமாக ஏற்கவேண்டாம்.. அதை அவர்களை அம்மதத்தின் பிரதிநிதிகளாக்க வேண்டாம். அவர்கள் கழிசடைகள்.
****************
மனித இனத்திற்கு எதிரான செயல்களை எந்த மதத்தவன் செய்தாலும் எதன் பெயரில் செய்தாலும் தவறு தவறு தான்.. அவர்களை மனிதத் தன்மை கொண்ட எவரும் ஆதரிக்க மாட்டார்கள். அந்த இதயமில்லாதவர்களை எந்த மதத்தின் பிரதிநிதிகள் என்றும் சொல்லாதீர்கள். அவர்கள் வேண்டுமானால் அவ்வாறு தம்பட்டம் அடிக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல. நல்ல இதயம் உள்ளோர் சிந்திப்பீர்.
*********************
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
*************
உலகத்தில் எத்தனையோ ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.. எத்தனையோ போராளி குழுக்கள் இருக்கிறது அதுவெல்லாம் அவர்கள் சார்ந்திருக்கிற மதம் சொல்கிற வகையில் தான் இருக்கிறார்கள் என்று நாம் எண்ண முடியுமா.. யாரோ ஒரு குழு செய்கிறது என்பதனால் அதை இஸ்லாம் அப்படித்தான் கூறியுள்ளது என்பதாக சொல்வதெல்லாம் அபத்தமும், அறிவீனமும். அப்படியானால் இந்தியாவில் பரிவாரங்கள் நடத்திய கலவரஙக்ளை இந்து சமயம் இப்படித்தான் செய்யச்சொன்னது என்றும், இலங்கையில் நடந்ததை பவுத்தம் சொன்னபிரகாரம் தான் செய்தார்கள் என்றும் சொல்லல் தகுமா.. சிந்திப்பீர்.
விரிவாக சிந்தித்து மனிதம் வளர்ப்போம்.
****************
திருக்குரானின் வசனத்தை போட்டு இதை தான் இஸ்லாம் சொல்கிறது என்று காட்டுவதில் எத்தனை மகிழ்ச்சி உங்களுக்கு, திருக்குர் ஆனின் வசனங்களை அதன் முன்.. பின்.. ஏதும் தெரியாமல் ஒரு பகுதியை போட்டு நீங்கள் போட பலரும் அதை பார்த்து பாருங்கள் எப்படி எல்லாம் இருக்கிறது என சொல்லிவிட்டு வெறுப்பை உமிழலாம் ஆனால் திருக்குர் ஆன் என்பது 23 வருடங்கள் நபிகள் நாயகத்தின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து அது சார்ந்து வெளியானது.. விமர்சிக்கும் உங்களில் யாரேனும் நல்ல சரித்திர ஆசிரியர்கள் எழுதிய நபிகள் நாயகத்தின் வரலாற்றை படித்தவர்கள் உண்டா.. இல்லை அறிஞர்கள் சொல்ல அதை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரிந்தவர்கள் உண்டா..பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், அண்ணா போன்றவர்கள் எல்லாம் இவற்றை கற்காமல் ஆராயாமல் தான் இஸ்லாத்தை ஏற்றி போற்றீனார்களா.. சிந்தியுங்கள்.. மக்களை ஒருங்கிணைப்பதில்.. எல்லா சமூகத்தையும் அரவணைப்பதில்.. ஒரு மனிதன் நெறி தவறி இருக்கிறான் என்றால் அவனை நெறிபடுத்துவதில் முனைப்பு காட்டுங்கள்.
இதில் என்ன வேடிக்கை என்றால் பெரும்பாலான இஸ்லாமியர்களே திருக்குர் ஆனை எப்படி புரிய வேண்டுமோ அப்படி புரியாமல் பலரும் பலபிரிவாக இருந்து பேதங்கள் கொண்டலைகிறார்கள்.. (ஏனெனில் அவர்கள் தற்போது உருவாகி இருக்கும் நவீன இயக்கங்கள்.. குறுகிய சிந்தனையாளர்களீன் சிந்தனைக்கு தங்களை சிறைபடுத்திக்கொண்டிருக்கிறார்க
நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள் அன்பால் இணைந்து உல்கம் ஆள்வோம். வாழ்வது கொஞ்சநாள் அன்பை விதைத்து செல்வோம்.
எப்போதும் Bala Cartoonist Bala இது போன்ற பதிவு போடும் போது இப்படியே வன்மம் கக்குவது வாடிக்கையாகிவிட்டது. நாம் மனிதர்கள்..
தீயவர்கள் தீயவர்களின் செயலை உதாரணமாக ஏற்கவேண்டாம்.. அதை அவர்களை அம்மதத்தின் பிரதிநிதிகளாக்க வேண்டாம். அவர்கள் கழிசடைகள்.
****************
மனித இனத்திற்கு எதிரான செயல்களை எந்த மதத்தவன் செய்தாலும் எதன் பெயரில் செய்தாலும் தவறு தவறு தான்.. அவர்களை மனிதத் தன்மை கொண்ட எவரும் ஆதரிக்க மாட்டார்கள். அந்த இதயமில்லாதவர்களை எந்த மதத்தின் பிரதிநிதிகள் என்றும் சொல்லாதீர்கள். அவர்கள் வேண்டுமானால் அவ்வாறு தம்பட்டம் அடிக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல. நல்ல இதயம் உள்ளோர் சிந்திப்பீர்.
*********************
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக