01 செப்டம்பர் 2013

ஏசுவின் முதல் புதுமை!



பல்லவி:
ஏசுவின் முதல் புதுமையே
பேசுவோம் அவர் பெருமையே

சரணங்கள்:
இருமனம் சேரும் திருமண நேரம்
பறிமாறும் விருந்தில் பானங்கள் தீர‌
வானத்தில் மேகங்கள் வருசிக்கும் மழைபோல்
கானத்தில் முடியாத கருணை செய்யவே
வந்தீர் வந்தீர் தருணம் வந்தீர்   ஏசுவின்...           

பயந்தவர் முகத்தில் பரவசம் பொங்க
வெறும்நீர் தனையே அரும் ரசமாகவே
நறும் பாசமுடனே  பெரும் அதிசயம் செய்தே
காணா ஊர் கல்யாணம் காணவே செய்தீர்
தேனாய் தித்தித் திடும் பானமதை
தந்தீர் தந்தீர் ஆனந்தம் தந்தீர்   ஏசுவின்...



குறிப்பு: நான் கல்லூரி படிக்கும் போது (1995-98) மறைந்த நண்பர் ராபின்சன் ரொசாரியோ மற்றும் அந்தோன் புஷ்பராஜ் அவர்களின் வேண்டுகோளின் படி ஊர் காணா உன்னத திருமணம் என் தலைப்பில் நான் எழுதிக்கொடுத்த பாடல் இது 96-97களில் இப்பாடல் கும்பகோணம் பெரிய கிருத்துவ தேவாலத்தில் தொடர்ந்து இசையோடு பாடப்பட்டது என்பதாக எனக்கு ராபின்சன்னால் தெரிவிக்கப்பட்டது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா