25 பிப்ரவரி 2011

மனமெல்லாம் மன்னர் மீரா

வரவேண்டும் வரவேண்டுமெனவே

வரம் பெற்று வந்தேனே

மனமெல்லாம் மன்னர் மீராவெனவே

மகிழ்ந்தோடி வந்தேனே


அணையாத ஆவல் கொண்டே

அண்ணலே நான் வந்தேன்

குறை யாவும் இல்லாமல்

இனிநாதா காத்து அருள்வீர்


ஆன்மீக அருள் சுரக்கும்

மேன்மை திருப் பதிக்கு

தேடித் தேடி வந்தேனே

தேனின்பம் தந்து அருள்வீர்


என்னை மறந்தே நானும்

எஜமான் தர்பாரிலே வேணும்

கண்ணே மணியே காதிரே

கல்பாலே அருள்தர வேணும்


பெரிய ஞானங்கள் எதுவும்

பேதை ஒன்றும் அறியேன்

பெரியோர் போதை ஒன்றே

எளியோன் நெஞ்சில் உண்டு


அறியாத ஏழைக் கிங்கு

அறியவை யாவும் அருள்வீர்

தெரியாத நாளை தன்னை

திறமாக்கி திறந் தருள்வீர்


நூற் றாண்டு பலகண்டு

நூரி லங்கும் நூதனமே

நும் நூரின் ஒளியினிலே

சேர்த் தெம்மை அருள்வீரே


எந்தை தாயையும் மற்ற

எல்லா என்குடி மக்களையும்

விந்தையே ஆன்மீகத் தந்தையே

பொல்லாங் கணுகாது காப்பீரே


அர்த்தமுள்ள வாழ்க்கை தன்னை

ஆயுள் தன்னில் வாழ்வதற்கு

அற்பு தங்கள் நிகழ்த்திவரும்

அண்ணலே அருள் புரிவீரே


பொற் பதத்தை போற்றுகின்ற

பொன் னாளாய் என்வாழ்வின்

என் னாளும் ஆவதற்கே

நன்னாகூர் பேரரசே யருள்வீரே

22-02-2011

17 பிப்ரவரி 2011

வழுத்தூரில் மீலாது ஹந்தூரி விழா கொண்டாட்டம்

நபி பிறந்த நன்னாள் கொண்டாட்டம் நமது பாரம்பரிய சிறப்புக்கள் கொண்ட தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் 16-02-2011 அன்று ரபிய்யுல் அவ்வல் 12ஆம் நாளான அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபிகள் நாயகம் (ஸல்..) அவர்களின் பி றந்த நாள் கொண்டாட்டம் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது,

அதிகாலை சுப்ஹுக்கு பிறகே எப்போதும் போலஒலிப் பெருக்கி மூலமாக நமது ஊர் பெரிய பள்ளிவாசலான முஹ்யித்தீன் ஆண்டகை பள்ளிவாசலில் இருந்து இறை வசனங்களும், இறைவனே சதா நேரமும் ஸலவாத்தும் சலாமும் சொல்லும் நபிகள் கோமானை போற்றியும் ஏற்றியும் நன்றிபெருக்கோடும், பரவச உள்ளாத்தோடும் புனிதப் புகழ் பாக்களும் ஓதப்பட்டது.



எல்லா ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் இந்நளில் எல்லோரும் ஏழை பணக்காரர், இருப்பவர் இல்லாதவர் என்றில்லாமல் ஓரு உணவாக சிறப்பான நெய்சோறாக பாகுபாடின்றி ப்கிர்ந்துண்டு வயிரும் நிறைந்து மனமும் குளிர்ந்து கொண்டாடிட மிகச்சிறப்பான ஹந்தூரி உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

எல்லா சமூக மக்களும் ஹந்தூரி உணவை பெற்றுக்கொண்டு உள்ளம் மகிழச் சென்றார்கள். எல்லோரும் கொண்டாடிடும் வல்லோனின் தூதரை அனைவரும் மன,மொழி,மெய்யால் வாழ்த்தினர்.





தினமும் நமது வழுத்தூரில் புனித மவ்லிது மஜ்லிஸ்கள் முறையே
பெரிய பள்ளிவாசலில் ஹந்தூரி தினமுறைதாரர்களுக்காக அசருக்கு பிறகும், பள்ளி வழக்கப்படி இஷாவுக்கு பிறகும்,
தர்ஹா பள்ளியில் தர்ஹா வளாகத்தில் இஷாவிற்கு பிறகும்,
நமது மதரசா பள்ளியில் இமாமும் மற்றும் சின்னஞ்சிறு சிறார்களுமாக மிக ரம்மியமாக மஃரிபிற்கு பிறகும் எனவும் மற்ற பள்ளிகள், திண்ணைப்புறங்கள், வீடுகள் என எல்லா வ்கையிலும் ஓதி மகிழ்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்..) அவர்களின் பிறந்த மாதத்தை கண்ணியம் செய்தனர்.

08 பிப்ரவரி 2011

தங்கை சஃபீக்கா ஸனோஃபர் - நெளஷாத் அலீ திருமண விழா

சீரும் சிறப்புமாக நடந்தேறிய தங்கை சஃபீக்கா ஷஃபீக்கா ஸனோஃபர் - நெளஷாத் அலீ திருமண மணமேடை காட்சி (06-02-2011)