15 நவம்பர் 2012

வழுத்தூரில் இரட்டைப் பெருவிழா

உற்றுப்பார்க்க தெரிவது... புனித ஹிஜ்ரி 1434 முஹரம் பிறை 1  


தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இன்று (15-11-2012) வரலாற்று சிறப்பு மிக்க இஸ்லாமிய புத்தாண்டின் துவக்கம் முஹரம் பிறை-1 தினமும், மெய்ஞானப்பேரரசர் வழுத்தூர் ஹஜ்ரத் மீருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் நினைவு தினமும்  வழுத்தூர் தர்ஹா சரீபில் மஃரிபிற்கு பிறது சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. நிகழ்வின் முக்கிய அம்சமாக மகான் அவர்களின் நினைவிடத்தில் திரளான அன்பர்கள் ஒன்று கூடி மலர்ப்போர்வை போர்த்தத்தி கண்ணியம் செய்தனர் மனம் லயித்து சலவாத்துக்கள் முழங்க பின் மக்களின் ஆத்ம மற்றும் உலகியல் தேவைகளூக்காக மகான் அவர்களின் வஸிலாவை வைத்து துஆ (பிரார்த்தனை) ஓதப்பட்டது.பின்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருகை தந்து உரையாற்றிய அய்யம்பேட்டை பி.எம்.ஜியாவுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் மக்கள் இன்று வாழக்கூடிய வாழ்வில் எத்தனையோ சுக போகங்கள் இருந்தும் அமைதியும் அபீவிருத்தியும் இல்லாமல் தவிக்கிறார்கள் இதற்கு காரணம் ஞான மகான் மீருத்தீன் வலியுல்லாஹ் போன்ற நன்மக்கள் வாழ்ந்த வாழ்வைப்போன்று இறையச்சம் கொண்ட வாழ்வாக வாழாதது தான்,  அவ்வாறு நன்மக்களை உதாரணமாக கொண்டு இறைவன் அருளிய அழகு மார்க்கமாம், அண்ணல் நபிகளின் சன்மார்க்கமாம் இஸ்லாத்தினை ஒட்டிய சிறப்பான வாழ்வாக  பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வு திருப்தி சூழ்ந்த சிறப்பான அருளான வாழ்வாக இருக்கும் என்று திருக்குர்ஆன், ஹதீஸ் எடுத்துக்கட்டுகளுடன் பலவகையான இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளையும் சொல்லிக்காட்டியவர் முக்கியமாக இது போன்ற நல்லவர்களின் புனித இடங்களில் அமர்வதற்கும் நல்லவர்களை நேசிப்பவர்களோடு சங்கமிப்பதற்கும் இறைவன் அருளியதே பெரும் பேறு என்றும் அற்புதமாக எடுத்தியம்பினார்.அடுத்து பேசிய புலவர் தேங்கை சர்புத்தீன்அவர்கள் முஹரம் பிறை 1 ஐ வரவேற்க எல்லா முஹல்லாக்களிலும் பெரும்பாலும் விழா நடத்துவார்கள் ஆனால் நமக்கு புனித ஹிஜ்ரி ஆண்டின் துவக்கமாம் முஹரம் பிறை ஒன்றே ஞானப்பரிதி ஹஜ்ரத் மீருத்தீன் வலியுல்லாஹ்-வின் நினைவு நாளாக வந்து அவர்களின் நினைவு நாளையும் நாம் இத்தருணத்தில் நாம் கொண்டாடி கொண்டிருப்பதால் இதன் பரக்கத்தின் பொருட்டால் ஆண்டு முழுவது ஞான மகான்களின் சிந்தனையில் நம் வாழ்வு அமைய அல்லாஹ் போதுமானவன் என்றும், ஹிஜ்ரி துவங்கிய வரலாற்றினையும், இந்திய அரசு ஏன் முஹரம் விடுமுறையை பிறை 10ற்கு (நபிப்பேரர் தியாகச்சீமான் இமாம் ஹுஸைன் அவர்களின் ஷஹீது தினத்தில்) வைத்தது என்பதனையும் சிறப்புற விளக்கி அழகுரையாற்றினார்.  பின்பு இனிப்புகள் வழங்கப்பட்டு சலவாத்துடன் சபை இனிதே நிறைவுற்றது.-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா