08 மே 2014

இராபர்ட் கால்டு வெல் இருநூறாவது பிறந்த தினம்

அறிஞர் இராபர்ட் கால்டு வெல்

அந்நிய தேசத்தில் பிறந்தாலும் அன்னைத்தமிழுக்கு தொண்டாற்றியவர் அறிஞர் இராபர்ட் கால்டு வெல், மிகச்சிறந்த மொழியியல் வல்லுரான இவர் திராவிட மொழிகளை குறித்து ஆய்வு செய்து பல நூற்களை இயற்றியவர். தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவையாவும் ஒரு குடும்பத்தை சேர்ந்த திராவிட மொழிகள் என நிரூபனம் செய்தவர். தமிழின் தொன்மையை உலகறிய செய்தவர்.

இவரை குறித்து மறைமலை அடிகளார், உ.வே.சுவாமிநாத அய்யர் போன்றவர்கள் எழுதி உலகம் அறிந்தாலும் எனக்கு இவரைப்பற்றி அறிவித்தவர் மறைமலை அடிகளாரின் புத்தகம் தமிழ் மொழிகுறித்தவைகளை எனக்கு படிக்க தூண்டியவர் மதுக்கூர் காலித் ஷா என்பதையும் இந்த தருணத்தில் நினைவுகூர்வது அவசியம்.

கால்டு வெல் பிரிட்டானியாவில் பிறந்த ஆங்கிலயேர் தமிழ் பற்றி ஆய்ந்து தமிழின் தொண்மையை கண்டு வியந்து அதன் பெருமையை நிலை நாட்டினார். தமிழ் மண்ணில் பிறந்து தமிழராக இருக்கும் நாம் நம் அன்னை தமிழை எப்படி அறிந்திருக்கிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேள்வி கேட்டுக்கொள்வோம்.

அறிஞர் கால்டு வெல் அவர்களின் தூய தமிழ்த் தொண்டு என்றும் தமிழுலகம் போற்றி சிறப்பித்து நன்றி பாராட்ட தக்கது. கால்டு வெல் அவர்களை தமிழகமும், உலக மொழியியல் அறிஞர்களும் கொண்டாடிடும் அவரின் இருநூறாவது (1814-1891) பிறந்த நாளில் நாமும் அவரை கொண்டாடி நன்றியை தெரிவிப்போம் தமிழனாக.

கால்டு வெல் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழ் மொழியும், தமிழனும் இருக்கும் வரை நினைவு கூறப்படுவார்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா