21 ஜூன் 2016

முகநூல் நிலைத்தகவல் ஜூன் 21

மனிதர்கள் எல்லோரையும் தெளிவுடைய அறிவாளிகளாக எத்தனை தெளிவான உயர் அறிவாளிகள் முயற்சித்தாலும் முடியாது அதனாலேயே தொன்றுதொட்டு அறிவாளிகள், பொதுமனிதர்கள் குறித்து தெளிவான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

எல்லா உண்மைகளையும் எல்லோரும் உண்மையாக உண்மையென நம்பமாட்டார்கள்... பொய்யை நம்புவதற்கென்றே பாரம்பரியமாக பெருங்கூட்டம் பாரினில் இருந்து கொண்டே தான் இருக்கும்.

பிஞ்சு விரல்கள் கிறுக்கிடும் கிறுக்கல்களில் சறுக்கி விழுந்தது என் மனம்.

குழந்தைத் தனம் மாறும் போதே மனிதத் தன்மையும் மாறுகிறது..‍!

வினாடிகள் தோறும் வினோத மாற்றம் காணுகிறது அண்டம்.
ஒரே மாதிரி என்பது என்றும் நிலைக்காதது.
ஒரே மாதிரிகளில் கூட எண்ணற்ற வேறுபாடு என்பது தான் பேருண்மை.
வேறுபாடுகளையும் சூழ்நிலை மாற்றங்களையும் எல்லா உயிர்களும் எதிர்கொண்டே ஆகவேண்டும் இன்றைய பாஜக அரசை இந்தியர்கள் ஏற்றிருப்பதைப்போல!
காலங்கள் தந்த எத்தனையோ மாற்றங்களை தாங்கியப்பின்னும் எஞ்சி நிற்பது தான் இன்றைய பூமி!
வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பது தான் இந்தியாவின் தனிப்பெருமை!
ஒரே நாடு! ஒரே மொழி! ஒரே சட்டம்! ஒரே மோ....டி என்பதெல்லாம் செல்லாதவைகள் என காலம் தீர்ப்பு வழங்கும்!
அதுவரை ஆர் எஸ் எஸ் ஆனதெல்லாம் செய்யட்டும்.
நாளைக்காக இதயம் உள்ளவர்களும் நடுநிலையாளர்களும் அமைதியோடு புதிய வழி வகுக்கட்டும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

20 ஜூன் 2016

இறந்த காலம்

எல்லா நிகழ்காலங்களும்
இறந்த காலமாகிறவை தான்!
வேண்டுமென்றால் நம் நினைவுகளில் சிலதை
கொஞ்சமாக தேக்கிவைத்து அசைப்போடலாம்
வேண்டுமென்றால் நிழலாக பிடித்துவைத்து
கொஞ்சம் ரசித்துக்கொண்டிருக்கலாம்
ஆனாலும் அவைகள் இருந்த காலங்கள்
அவைகள் இறந்த காலங்கள் தான்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கலவரக்காரர்களின் மதம் - முகநூல் - 20-6-2014

கலவரக்காரர்களின் மதம்:
கலவரக்காரர்களுக்கு என்றுமே மதமும் இருந்ததில்லை, மனிதமும் இருந்ததில்லை... அவர்களின் நினைவு வேண்டுமானால் தாங்கள் தாங்களின் மதத்திற்காக போராடுவதாக என இருந்திருக்கலாமேயொழிய எதார்த்தத்தில் அவர்களின் மதத்திற்கு அவரவர்கள் உண்மையாளர்களாய் இருந்தால், அல்லது எல்லா தத்துவத்திற்கும், மதபோதனைகளுக்கும் அப்பாற்பட்டு ஒரு கடைநிலையில் மனிதப்பிறவியாக ஒரு ஓரத்தில் இவர்கள் உணர்ந்திருந்தால் இந்த இரத்த வெறியோடு மனிதர்களை வேட்டையாடிக்கொண்டிருக்க மாட்டார்கள்.
கலவரம் என்றாலே கலவரக்காரர்களில் மனிதம் என்பதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் உலகில் இருக்கும் எல்லா மிருகத்தை விடவும் மோசமான கேவலமான அசுர வெறியின் உச்சத்தில் ஏறி ஆடுவர்களாகிவிடுவர், அப்போது அவர்களுக்கு சக மனிதனின் அருமை பெருமைகள், ஈவு இரக்கங்கள் எல்லாம் அவர்களின் கண்ணுக்கோ, நெஞ்சுக்கோ தெரியாது..
இது தான் ஈராக்கிலும், இலங்கையிலும் இப்போது நடக்கிறது, இது நாள் வரை இது தான் சிறியாவிலும், எகிப்திலும் நடந்தது, இது தான் அன்று குஜராத்திலும் நடந்தது.. இது தான் எங்கு கலவரம் நடந்தாலும் நடப்பது. அங்கு மனிதர்கள் இருக்க மாட்டார்கள் அதனால் மனிதர்களை அந்த மனிதம் இல்லாத மாபேய்கள் சூறையாடுவது அவர்களுக்கு தவறாயிறாது.

ஒருவரைப்பற்றி நெருங்காது.. பழகாது.. ஆராயாது நிறைய பேர் தன் மனதின் தோராய மதிப்பீட்டிலேயே சான்றிதழ் வழங்கி விடுகிறார்கள்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

18 ஜூன் 2016

சமுதாய சங்கநாதம் அண்ணன் அப்துல் ரஹ்மனோடு இனிய சந்திப்பு

முஸ்லிம் லீக் முதன்மைத் துணைத்தலைவவர் அப்துல் ரஹ்மானோடு  வழுத்தூர் முஹையத்தீன் பாட்ஷா
நேற்றைய தினம் 17-6-2016 துபாய் வந்திருக்கும் நமது தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மை துணைத்தலைவர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்பாசத்திற்குரிய அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வந்தேன்.
அண்ணன் அவர்களுக்கு சென்ற மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததில் கவலை இருந்தது, அவர்கள் உடல்நலம் தேறி வர எல்லோரையும் போல நானும் துஆ செய்த வண்ணம் இருந்தேன். உடல்நலம் தேறிமீண்டும் பொது நிகழ்ச்சியில் அண்ணன் அவர்களை பார்த்தபோது தான் மனம் ஆறுதல் அடைந்தது, மகிழ்ச்சி கொண்டது. நேற்று முன்தினம் அண்ணன் துபாய் வந்திருப்பது எனக்கு தெரியாது ஆனால் அன்றைய விடிகாலை மிக நீண்ட கனவில் சந்தித்து உடல் நலம் விசாரிப்பது போலவும், சிரித்து பேசி அளவளாவுவது போல கண்டேன், அதற்கேற்ப முகநூலை திருப்புகிறேன் வந்திருக்கும் செய்தி. மாலை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தேன், பார்க்க வேண்டும் என்ற அவாவையும் சொல்ல, டி-ப்ளாக்கில் தான் தராவிஹ் தொழுது கொண்டிருப்பேன் வாருங்கள் சந்திப்போம் என பாசமுடன் அழைத்தார்கள். துபாய் தேராவில் ஈ.டி.ஏ டி-பிளாக் கட்டிடத்தில் எப்போதும் போல ரமலானின் தராவிஹ் மற்றும் சிறப்பு அமல்கள் நடந்தேறிக்கொண்டிருந்தது, தொழுகையை கண்ணியப் பெருந்தகை சுலைமான் ஹஜ்ரத் அவர்கள் சிறப்பாக நடத்திக்கொண்டிருந்தார்கள், முடிவில் அருமையான திக்ரும், துஆவும் ரமலானின் வசந்தங்களை வீசிக்கொண்டிருந்த மஜ்லிஸ் அகமகிழ்வை அள்ளித் தந்தது. அப்துல் ரஹ்மான் அண்ணன் முதல் சஃப்பின் இறுதில் மெய்மறந்து தொழுது முடித்திருந்தார். முகமும் அகமும் மலர என்னை கண்டதும் வரவேற்று அருகே இருத்திக்கொண்டார், பிறகு யாருடன் வந்திருக்கிறீர்கள் என கேட்டு தம்பியுடன் எனச்சொல்ல தம்பி காலித்தையும் அவர் தம் பக்கத்தில் அமர்த்தி பாசம் பறிமாறினார்.முதலில் உடல் நலம் குறித்து விசாரித்தேன் பிறகு சமூக, அரசியல் விடயங்களை பகிர்ந்து கொண்டோம், பிறகு வெளியே சிறுநடை போட்டு உலாவினோம் மனநிறைவாக ஒரு மணி நேரத்திற்கு மேலான சந்திப்பு நிறைவடைய விடைபெற்றோம்.
முஸ்லிம் லீக் முதன்மைத் துணைத்தலைவவர் அப்துல் ரஹ்மானோடு  வழுத்தூர் தாவுத் காலித்
மற்ற இயக்கங்களின் தலைவர்களுக்கும், முஸ்லிம் லீக்கின் தலைவருகளுக்கும் இந்த பெருந்தன்மையும், எளிமையும் தான் வித்தியாசம். இது எங்கள் தொன்று தொட்டு வந்த கண்ணியத் தலைவர்கள் தந்த பரிசு.
பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனையை தொய்வின்றி எடுத்துரைத்தவர், சமுதாய நலனுக்காக பாஸிச வாட்களோடு கருத்து யுத்தம் நடத்தியவர் அவரை சில சூழ்ச்சிகள் சமுதாய ஒற்றுமையின்மைகள் பாராளுமன்றம் செல்லவிடாமல் செய்து அவரால் விழையும் நன்மைகளை தடுக்க நினைத்தது, சாதித்ததாகவும் நினைத்தது ஆனால் உண்மை சமுதாய தலைவர்கள் எங்கிருந்தாலும் அதற்காக உழைத்துக்கொண்டே தான் இருப்பார்கள் என்பதை அவர் நிரூபித்து வருகிறார். இன்ஷா அல்லாஹ் அவர் மீண்டும் அங்கே செல்ல வேண்டும். இன்னும் இன்னும் தாய்ச்சபையை வளர்த்து சமூகத்தின் குரலாய் ஓங்கி ஒலிக்க வேண்டும்என்பதே எல்லோரையும் போல எனது எண்ணம்.
முஸ்லிம் லீக் முதன்மைத் துணைத்தலைவவர் அப்துல் ரஹ்மானோடு  வழுத்தூர் முஹையத்தீன் பாட்ஷா

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

04 ஜூன் 2016

முகநூல் பதிவு 4-6-20112

அழுகையைப் போன்று ஓர் அற்புத நிவாரணி உண்டா..?

வழக்கொழிந்த தழிழ் சொற்கள் போலவே ஆகி வருகிறது நமது பண்பாடும்.


அற்புதங்களையும், அதிசயங்களையும் வேறெங்கும் தேட தேவையில்லை, உடலை விட பேரற்புதமும், பெரும் அதிசயமும் வேறெது!

அதிமேதாவித்தனம் (Over Smartness) ஆபத்தானது, ஒருவரின் சில வார்த்தைகள், ஒரு சில உடல் மொழிகள் போதும் அதை கண்டு கொள்ள. இப்படியானவர்களை அவர்களின் முதுகு பின்னால் உலகம் உற்சாக மடையன் என்று தான் அழைக்கிறது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

01 ஜூன் 2016

ரெண்டு கவித

J Mohaideen Batcha
51 mins
நிதானமாய் ருசித்திருக்க
கிடைத்திடும் கடைசிகள் எல்லாமே
அலாதி சுகம் தான்

J Mohaideen Batcha
இதமான மென்சூடுக்கேங்கிடும்
குளிர்பபனிக்காலையை ரசமாக்கிட
சுள்ளிகள் பொறுக்கி கொண்டுவந்தேன்
குளிர்காயும் நோக்கில்,
அழைக்காமலேயே வந்து
அதன் ஜுவாலையை பெரிதாக்குகிறீர்கள்
காட்டினையே அழிக்கும் அளவு்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

இனிப்பின் கூடை

ஏன் இனிப்பின் கூடையை
யாருக்கோ சுமந்து செல்கிறாய்?
நீ கடக்கும் வழியினில்
நான் தான் யாசகனாய்!
உயர்த்திய தட்டுடோடு
ஏக்கத்தின் குரலை எழுப்பியவனாய்
நான் தான்!
நீ தான் கண்டும் காணததுமாய்
அந்த இனிப்பின் கூடையை
யாருக்கோ சுமந்து செல்கிறாய்..
ஆனாலும் உன் செவியில்
என் குரல் கேட்காமல் இல்லை
இருப்பினும் கேட்காதது போல கடக்கிறாய்
உன் பார்வை என் மீது படாமலும் இல்லை
ஆனாலும் உன் கவனம் என்மீது படவே இல்லை
உன் உள்ளுணர்வு அறியும்
உன் ஆழ்மனம் கேட்கும்
எதிர்பட்ட யாசகனை
ஏன் மறுதளித்தாய் என..?
யோசிக்கின்ற சனத்தில்
நீ சுமந்து சென்ற
இனிப்பின் கூடையை
அந்த யாரோ.. அப்போது..
பெற்றுக்கொண்டும்
பொருட்படுத்தியிருக்கவே இல்லை.
-முஹையத்தீன் பாட்ஷா

9.26am