31 மே 2022

பேராசிரியர் ஜவாஹிருல்லா சந்திப்பு

இன்றைய துபாய் இஃப்தார் நிகழ்வில் எங்கள் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ பேராசிரியர் ஜவாஹிருல்லா Jawahirullah MH அவர்களையும் பிரபல ஊடகவியலாளர் Senthil Vel அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சந்திப்பில் பேராசிரியர் அவர்களுக்கு அன்பு Abu Haashima அண்ணன் எழுதிய "ரபிய்யுல் அவ்வல் வசந்தம்" புத்தகத்தையும் ஊடகவியலாளர் செந்தில் அவர்களுக்கு என் நெஞ்சமெல்லாம் நிறைந்த பன்னூலாசிரியர் மறைந்த Yembal Thajammul Mohammad அண்ணன் எழுதிய பல விருதுகள் வென்ற "வீரம் செறிந்த இஸ்லாம்" எனும் அற்புத நூலையும் பரிசளித்தேன்.
விழாவில் இருவரின் உரையும் மிக நன்று.
அதில் சகோ.செந்தில் வேல் பேசும்போது, பாசிச சக்திகளை இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ள எப்படி தன்னை தயார் செய்துகொள்ள தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். இஸ்லாமியர்கள் படித்துவிட்டு அரசின் முக்கிய துறைகளுக்கு ஏன் வர தயக்கம் காட்டும் சமூகமாக உள்ளீர்கள்? பல இஸ்லாமிய இளைஞர்கள் தகப்பனார் வெளிநாட்டில் இருப்பதால் தானும் அங்கு போனால் போதுமென்ற மனநிலையிலேயே உள்ளனர் தன்னை சுற்றி நடக்கும் அரசியல் குறித்த விழிப்புணர்வு இல்லை ஏன்? ஊடகத்திற்கு வாருங்கள் அதில் ஏன் உங்கள் ஆர்வம் இல்லை என கேள்வி கேட்டு விடைபெற..,
பேராசிரியர் அதே பொருளில் தங்களின்பேச்சை தொடர்ந்தார். நபிகளார் காலத்தில் எப்படி அரசியல் விழிப்புணர்வு இருந்தது, கல்வியறிவிற்கு நபிகளார் கொடுத்த முக்கியத்துவம், பிறசமூக இணக்கம் குறித்து பேராசிரியர் பேசினார். பேச்சில் எங்கள் வழுத்தூரை இருமுறை குறிப்பிட்டும் நாங்கள் வந்திருப்பதையும் உரையில் சொன்னதும் மகிழ்வாக இருந்தது.
நிகழ்வில் அன்பு அண்ணன் அமீரக திமுகவின் Meeran Syed Siddiq மற்றும் அன்பு அண்ணன் முனைவர் @A Md Mohideen சந்தித்ததும் பெரும்மகிழ்வு.
என்னுடன் தம்பி Dawood Kalith மற்றும் Sabeer Ahamed கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடு செய்த லால்பேட்டை குழுவினருக்கு வாழ்த்துகள். நிகழ்ந்தவை சிறப்பு.
- ஜா.மு.



மெய்யே மேவ!

சற்று முன் திண்ற ஆப்பிளில் தான்
எத்தனை தித்திப்பு...
இயற்கைக்கு..
இறைசக்திக்கு நன்றிகள் நவின்றேன்
சற்றுமுன் தொலைபேசியில் ஒலித்த
அறிஞர் குரலில் தான் எத்தனை கனிவு...
பெருந்தன்மை.. பக்குவப்பண்பு
இவைகளை கண்டு வியந்து நின்றேன்
சற்று முன் அழைத்த
எதார்த்த நண்பரின்
இயல்பான கரிசனத்தில் தான்
எத்தனை உண்மை..
நலவிரும்பிகள் எங்கிருந்தும் ஆதரவு கொடுப்பர்..
முலாம் பூசிய பேச்சுகள் இருக்காது...

பொய் பொய்த்திருக்க
மெய்யே மேவ கண்டுகொண்டேன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பிள்ளைத்தானியம்



சென்ற 23 ஆம் திகதி (23-04-2022) எழுத்தாளர் Latha லதா அவர்கள் எழுதிய "கழிவறை இருக்கை" என்ற நூலின் விமர்சனக்கூட்டம் துபாயில் தோழமை ஜஸீலா Jazeela Banu அவர்களின் "Proactive Exel Safety Consultancy" அலுவலகத்தில் அமீரக எழுத்தாளர்கள் & வாசகர்கள் குழுமம் சார்பில் சிறப்பாக நடந்தேறியது.
நிகழ்வின் முடிவில், சமகாலத்தில் தனக்கென ஒரு பாணியை அமைத்து தனித்துவமான கவிதைகளை தந்துகொண்டிருக்கும் கவிஞர் கோவை ஜியாபுதீன் Jeyabudheen அவர்களின் பிள்ளைத்தானியம் என்ற நூல் பிரதி எழுத்தாளர் லதா அவர்களுக்கும் பிறிதொரு பிரதி அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர்கள் குழுமத்திற்கென அன்பு அண்ணாச்சி Asif Meeran அவர்களிடமும் மகிழ்வுடன் வழங்கப்பட்ட தருணம்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

பனியாக்களின் பனியன்கள் கூட மிஞ்சாது.

முன்பு ஜெயிக்க பாபரி மஸ்ஜித் இடிப்பு
பின்பு ஜெயிக்க
56" ன் போலி பிம்பம்
குஜராத் வளர்ச்சி
ராமர் கோவில் கட்டுவோம்!
அடுத்து ஜெயிக்க கிடைத்ததோ
நாற்பத்து ஐந்து ராணுவ வீரர்கள்
உயிர் மற்றும் தேசபக்தி தூண்டும் புல்வாமா!
இடையிடையே
மாநில தேர்தல்களுக்கு
மாட்டுக்கறி அரசியல்
முஸ்லிமை கட்டிவைத்து அடி
ஸ்ரீராமஜெயம் சொல்லச்சொல்
தேசபக்தி இல்லையென்று
பாக்கிஸ்தான் போகச்சொல்
சி.ஏ.ஏ கொண்டு வருவோம்
நாட்டை விட்டே துரத்துவோம்
.
.
ஹலால் அரசியல்
முஸ்லிம் வர்த்தகம் தீ'க்கிரை
வாழ் இட இடிப்பு செய்
பாங்கு சொல்லத் தடை..
.
.
மீண்டும் (2024ல்) வெற்றியா?
ஐயோ!!
தேசபிளவினால் தான் சாத்தியம்.
இப்போதும் நம்மை நம்பும்
நம் வடக்கர்கள் துணையோடு
ஜெயிப்போம்!
நாம் துண்டாட
துணை செய்யும்
மொகலாய மன்னருக்கா பஞ்சம்
கருணையோடு கை கொடுப்பார்
ஷாஜஹான்.
புதிதாய் உயிர்குடிக்க
இழுத்துவிடு தாஜ்மஹாலை!!!.
ஆயினும்..
பொய்க்கொற்றம் வீழும் நாள்
தூரத்தில் இல்லை
என்பது மட்டும் திண்ணம்.
அப்போது பிணந்தின்னிகளை
கழுகுகள் வந்து தின்னும்
உண்மை ஓரளவிற்கு மேல் துஞ்சாது
அப்போது
பனியாக்களின்
பனியன்கள் கூட மிஞ்சாது.
- ஜா.மு

ரிஸா


நேற்றைய தினம் 22-05-2022 துபாயில் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் சார்பில் கானல் / Kaanal நடந்த அண்ணன் Sasikumar Ssk அவர்களின் "மெல்லச் சிறகசைத்து" நூல் விமர்சனக் கூட்டத்தில் எல்லார் உள்ளம் கவர்ந்த மழலைக் கண்மணி ரிஸா, பலரும் கூட்டத்தில் உரையாற்றுவதைப் பார்த்து "நானும் ஒரு கதை சொல்லப்போறேன்" என மெல்லிய குரலில் தன் அப்பா ரியாஸ் Riyas Mohamed Ali அவர்களிடம் கொஞ்சமும் தயங்காமல் கேட்டு முன்னே வந்தாள்.
எல்லோர் முன்னே வந்தும்.. "மொதல்ல போட்டோ எடுத்துக்கங்க" என பேசும் முன் சில வினாடிகள் தாமதித்து போட்டோ எடுத்தவுடன் கதையை ஆரம்பித்தாள். கதை சொன்ன விதமும் அவ்வளவு அழகு.
பேசிய உடன் ஒரு டீயை எடுத்துக்கொண்டு நான் போயி வெளியில நின்னு குடிச்சிட்டு வர்ரேன்
என்று டீ'யை கையில் வாங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டே சென்று பிறகு அப்பாவிடம் குடிச்சிட்டேன் என வந்து சொன்னது எல்லாம் கவிதை.
வருங்காலத்தில் நல்ல ஆளுமை மிக்கவளாக புகழோங்கும் வாழ்வை, தாய் தந்தையருக்கு கண் குளிர்ச்சியான பெருவாழ்வை ரியாஸ் அவர்களின் செல்ல மகள் ரிஸாவிற்கு இறைவன் அருளட்டும். ஆமீன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

18 மே 2022

பேரறிவாளன் விடுதலை



அற்புதம் அம்மாளை நினைத்தால்..
மனம் கனக்கும்.
கண்ணீர் பெருகும்.
அற்புதம் அம்மாளை நினைத்தால்..
நம்பிக்கையற்ற கேள்விகளே
விடையாய் விரியும்.
அற்புதம் அம்மாளை நினைத்தால்..
வாழ்வை வெறுத்த..
சோர்ந்த மனதின்
அவநம்பிக்கை மலைகள் தான்
மலைப்பாய் தெரியும்.
அற்புதம் அம்மாளை நினைத்தால்..
நேர்மையற்ற அரசியல்வாதிகளின்
மீதான கோபம் ஊற்றெடுக்கும்
அற்புதம் அம்மாளை நினைத்தால்..
குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி
ஒரு காலமும்
தன்னை நிரூபிக்க
இந்தியாவில் இடம் இல்லையே
என ரணமாகும்
அற்புதம் அம்மாளை நினைத்தால்..
ஆயிரம் உடல் கோளாறு உள்ள
கைதியாய் இருந்தும்
"அவன் வெளிவந்தால்..."
என அச்சுறுத்தும்
செய்திக்காக வாய் கூசாது
பொய் பேசிப்பேசியே
விடுதலையைத் தடுத்த கேடுகெட்ட
வடபுலத்து ஊடகங்களின்
ஊளை ஞாபம் வரும்
அற்புதம் அம்மாளை நினைத்தால்..
புரிந்துகொண்டும்
புரிந்துகொள்ளாது கொல்லும்
நீதித்துறையின் மீதிருந்த
நம்பிக்கை கரைந்துருகும்
அற்புதம் அம்மாளை நினைத்தால்..
அலைந்து தேய்ந்த கால்கள்,
அழுதழுது உப்புக்கறைத் துடைத்து
உப்பிய முகம்
நயவஞ்சர்களையே கண்டு
அலுத்த மனம்
இதெல்லாம் தான்
நினைவில் வரும் எனினும்
இவர் சரிவதற்குள்
ஏதாவது சரியாக
நடந்திடுமா என்ற
ஏக்கமும் கூட வரும்.
அம்மா!
இந்தியாவில் நம்ப முடியாத
அதிசயம் நடந்தே விட்டது
இன்று உங்கள் சட்டப் போராட்டம்
வெற்றியாகி நிற்கிறது
தமிழ்நாட்டின் வீதியெங்கும்
அவ்வளவு மகிழ்ச்சி வெள்ளம்
உங்கள் அன்பு மகன்
பேரறிவாளன் விடுதலையாகிவிட்டார்.
-ஜா.மு
18-05-22

09 மே 2022

சிங்கத்தின் கம்பீரம் ஹனீபா!




பல்லவி:

சிங்கத்தின் கம்பீரம் வெல்லும்

பாடகர் பெருந்திலகம் - குரல்

வங்கக்கடல் முழக்கம் - போலே

என்றும் காற்றினில் எதிரொலிக்கும் நெஞ்சம்

நொடியினில் தனை இழக்கும்


அனுபல்லவி:


சிம்மக்குரலோனே..

சீர்மிகு இசைமுரசே..

தமிழர் தம் தவக்குரலே..

தீனிசைத் தேம்பாகே..


சிம்மக்குரலோனே..

சீர்மிகு இசைமுரசே..

ஈ எம் ஹனீபாவே..

எங்களின் இதயத்தில் நிறைந்தவரே..


சரணங்கள்:

1.

மொழியையும் மண்ணையும்

விழியென நேசித்த மாபெரும் போராளி

வழியினை வாழ்வினில்

சுயமரியாதைச் சுடர்விட வாழ்ந்திருந்தார்

தந்தைப் பெரியார் அறிஞர் அண்ணா

கொள்கையை தினம்  வளர்த்தார்

நண்பர் கலைஞர் அரசியல் வாழ்வில்

குரலாய் ஒலித்திருந்தார் - கழகத்தின் குரலாய் ஜொலித்திருந்தார்


திராவிடச்சிந்தனை நாடாள நாட்டில்

குரலாய் ஒலித்திருந்தார்

இசையென்னும் கலையால் 

மதபேதம் கடந்து 

விசைமிகு புரட்சி செய்தார் - ஹனீபா

திசை எல்லாம் புரட்சி செய்தார்

2.

ஆருயிர் நபிகள் அழகிய சரிதத்தை

பாங்குடன் அவர் பாடி

இன்னலை இறையருள்

இனிதே வென்றதை  இசையினில் நிதம்பாடி

பாமரர் மனதிலும் பயகம்பர் பேரன்பை 

ஏற்றியத் திருமகனே

இறைநேசச் செல்வர்கள் முறையான திருவாழ்வைப்

போற்றிய பெருமகனே - பாடலில் 

ஏற்றிய பெருமகனே

3.

தீனிசைப் பாடகர் தினம் நூறு வந்தாலும்

இவர் தான் முன்னோடி

எவர் முயன்றுச் சிறந்து பாடுவோரானாலும்

இவருக்கே பின்னாடி

உச்சஸ்தாயில் இப்போதும் பாட

இவர்போல் ஒருவரில்லை

லட்சோப லட்சம் மக்களின் மனதில்

விருட்சமாய் நிலைப்பெற்றார்

நூற்றாண்டின் 

கலை விளக்காய் நிலைப்பெற்றார்.



-ஜா.முஹையத்தீன் பாட்ஷா

26-11-2021