04 மே 2017

எச்சங்கள் தொடமுடியாத உச்சம்

தலைவர் பேராசிரியர் 
 “முனீருல் மில்லத்” என்றுமே
எச்சங்கள் தொடமுடியாத
உயர்வின் உச்சம் தான்!!
***
அவர் வீழ்ந்துவிட மாட்டாரா என்று
வெட்டி மனிதர்கள் பலர் சேர்ந்து
வெட்டி வைத்த குழிகள் தான்
எத்தனை.. எத்தனை..! - அதில்
கொட்டிவைத்த விஷ முற்கள் தான்
எத்தனை.. எத்தனை..!
***
அவர் அத்தனையையையும்
மெளனப் புன்னகையோடு
தாண்டியதால் தானே
அற்புத கிரீடத்தை
அருளாளன் சூட்டினான்.
***
சிங்க வேடமேற்று
நாட்டை ஏய்த்த நரிகளுக்கெல்லாம்
கர்ஜனை செய்வதில் தானே பிரச்சனை!
***
தங்கமுலாம் பூசிய
தகரங்களுக்கெல்லாம்
கடைசியில் தள்ளிவைக்கப்படுகிறோமே
என்பது தான் பிரச்சனை!!
***
இரவு நேரத்து வவ்வால்களுக்கு
தெரிந்த தெல்லாம்
ஊர் உறங்க வெளிவருவதும்
தலைகீழாய்த் தொங்கி
மலஜலம் கழிப்பதும் தான்.
***
எம் தலைவர் கண்ட ஏற்றங்களை
தாங்களெல்லாம் பெற முடியாமையால்
தாங்கொணா பொறாமைப் பூண்டு
வீங்கி பழுத்து அழுகிய - உங்கள்
விபரீத நெஞ்சகத்துச் சீழில்
துர்நாற்றப் புழுக்கள்
சொல்லிலும் எழுத்திலும்
கொடூரமாய் நெளிவதில் தான்
நீங்கள் இருக்கும் நிலையை
புரிய நேர்கிறது. அந்தோ..பாவம்!
***
விறகை நெருப்பு தின்பதைப் போல்
பொறாமை ஈமானை தின்று விடுமாம்!
இந்த நபிமொழி உரைப்பது போலவே - உங்கள்
பொறாமைத் தீ தின்று செரித்த
கரிகட்டைகள் தான்
எம் தலைவர் பேராசிரியர்
நடந்துவந்த பாதை நெடுகிலும்.
***
எத்தனை புனைவு பிரச்சாரங்கள்
எத்தனை இட்டுக்கட்டு இதிகாசங்கள்
காதிலும் வாங்காமல்
நெஞ்சிலும் வைக்காமல்
சட்டையில் ஒட்டியிருக்கும்
துச்சத் தூசென தட்டிவிடும்
பேராசிரியர் நன்றே தொடர்கிறார்
அவர் தம் சமூக முன்னேற்றப்பயணத்தினை.
***
பேராசிரியர் அவர்களை புரிந்தவர்கள்
பார்த்துப் பார்த்து பிரமிக்கின்றனர்.
பேராசிரியரை வசைபாடும் மூர்க்கர்கள்
நூல்பிரிந்த கயிறாய் பலமிழக்கின்றனர்.
***
தலைவர் பேராசிரியர் என்றுமே
எச்சங்கள் தொடமுடியாத
உயர்வின் உச்சம் தான்.
***
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
04-05-2017
6 : 17 pm