14 ஜூலை 2016

முலைப்பால் கவிதையும், அலுவலக நினைவும்..



கவிஞர் ஈரோடு கதிர் அவர்கள் இந்த கவிதையை பகிர்ந்திருந்தார், அதை படித்ததும் எனக்கு என் அலுவலகத்தில் நடந்தது நினைவுக்கு வந்தது...
நான் பணிபுரியும் பணிமனை பல பன்னாட்டு கம்பெணிகள் ஒருங்கே இருக்கும் ஒரிடம், இங்கே ஆடுத்த ஹாலில் எனது நிறுவனம் அல்லாத வேரொன்றில் வேலை செய்யும் ஃபிலிப்பினோ பெண் சென்ற மாதம் குழந்தை பெற்றுக்கொண்டார் அதனால் நமக்கொன்றும் பிரச்சனை இல்லை நன்றாக இருக்கட்டும் மப்ரூக் சொல்வோம், பிறகு 3வது நாளே வேலைக்கு வந்துவிட்டார். அவர் மூன்று நாள் கழித்து வந்ததையே மிக ஆச்சர்யமாக மூன்று நாள் தானே ஆகிறது எப்படி அதற்குள் ஆபிஸ் வேலைக்கு வந்துவிட்டாய் என்றோம் பிள்ளையை பேபி கேரில் விட்டுவிட்டேன் என்றாள் அதுவே கோபமாக இருந்தது. பிறகு வந்தது முதல் இரண்டு மணிக்கொரு முறை வாஸ்ரூமிற்கு பையில் ஒரு சிறு பம்ப் மிசின் போல ஒன்றை எடுத்துச்சென்று.. சென்று.. வந்துகொண்டிருந்தார், என்னவென்று கேட்க பால் சுரந்து முலைக்கட்டிவிடுமல்லவா அதை தவிர்க்க அடிக்கடி இந்த பால் கரக்கும் மிசின் மூலம் எடுத்து வெளியே ஊற்றிவிட்டு வருகிறேன் என்றாள். மிக உறைந்து போனேன்.. உள்ளம் உடைந்து போனேன்.. ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்த பரிதாபம் தான் இன்றைக்கு பிறக்கும் பல்லாயிரக்கணக்கான புதிய பிள்ளைகளின் நிலைமை.
தாயின் அரவணைப்பு இன்றி பிறந்த உடனேயே இப்படி பேபிகேரில் சித்ரவதைக்கு ஆளாகும் பிள்ளைகளை நினைத்தால் வார்த்தைகள் வற்றிவிடுகிறது, இந்த நூற்றாண்டில் இது பொன்ற பொற்றோருக்கு பிள்ளைகளாய் பிறந்ததற்காய் பாவம் அந்த பிள்ளைகளை துர்ரதிஷ்டசாலிகள் என்று தான் சொல்லவேண்டும்.
கொடும் கார்பரேட் உலகம் இன்றைய மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி இயற்கைக்கு முரணாக ஆக்கி அடிமைபடுத்தி வைத்திருப்பதற்கு இதைவிட ஒரு சான்று பிரிதில்லை. இது ஏதோ அந்த பிலிப்பினோ போன்ற வெளிநாட்டவர் மட்டும் செய்வதாய் எண்ண வேண்டாம் நிறைய நம்மவர்களும் அந்த நடைமுறைக்கு மாறிவிட்டனர் என்பதே நிஜம்.
- முஹையத்தீன் பாட்ஷா

2 கருத்துகள்:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

கவிதை நன்றாகவே உள்ளது ஆனால் கொஞ்சம்போல் சுருக்கலாம்.
அப்படிச் சுருக்கி, பத்தாண்டுகளுக்கு முன்பே இந்த உள்ளடக்கத்தை கவிஞர் வெண்ணிலா எழுதியிருக்கிறார் -
“அலுவலகக் கழிப்பறையில்
பீச்சி விடப்படும் பாலில்
தெறித்து அடங்குகிறது
பிள்ளைகளின் அழுகுரல்” - அ.வெண்ணிலா.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

மிக அருமை, நாலு வரிகளில் நவீனகால தாய்மார்களின் வலியைச் சொல்லும் உயிரறுக்கும் கவிதை.