21 ஜனவரி 2015

மதம் கடந்து தொடரும் ஈமானின் தொண்டுகள்கத்தாரிலிருந்து ஊர் செல்லும் வழியில் துபை விமான நிலையத்தில் இறந்த கிருத்துவரின் உடலை ஊருக்கு எடுத்துச்சென்று உரியவர்களிடம் ஒப்படைத்தது துபை ஈமான் அமைப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டு ஊரைச்சார்ந்தவர் சகாய சிங்கம் லிபோன்ஸி. இவர் கத்தாரிலிருந்து துபைவழியே கடந்த டிசம்பர் 3ஆம் தேதி டிரான்சிட்டில் ஊர் செல்ல இருந்தவருக்கு துபாய் விமானநிலையத்தில் திடீரெனமாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார், இறந்து போன சகாய சிங்கத்தின் உடலை எதிர்பார்த்து அவரது உறவினர்கள் மிகக்கவலையுடன் பரிதவித்து காத்திருக்க அவரின் உடலோ பிரேதக்கிடங்கில் கிடத்திவைக்கப்பட்ட நிலையிலேயேஇருந்தது, செய்தியறிந்தஅறிந்த துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளான செயலாளர் குத்தாலம் லியாகத் அலி மற்றும் துணைச்செயலாளர் முஹம்மது தாஹா உடலை உறவினர்களுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கினர்.
இதனிடையே இறந்த சகாயசிங்கத்தினைப் பற்றிய தகவலை துபாய் காவல் துறை இந்திய தூதரகத்திற்கு முறைப்படி தெரிவிக்க இறந்த உடலின் பிரேதப்பரிசோதனைத் தகவலைப் பெற்றுக்கொண்டு துபாய் மற்றும் இந்திய தூதரகத்தின் முழு ஒத்துழைப்புடன் ஈமான் அமைப்ப்பினர் அதற்குரிய ஆவண நடவடிக்கைகளை முடித்து ஈமானின் துணைச் செயலாளர் தாஹா அவர்கள் மூலம் இறந்த சகாயசிங்கத்தின் இறந்த உடலும், அவர் கத்தாரிலிருந்து கொண்டு வந்திருந்த பேக்கேஜ் உடைமைகளும் கேரள கோழிக்கோடு விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வந்த அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிறகு இறுதிச் சடங்கினை முடித்துவிட்டு வந்த உறவினர்கள் உடலைக் கொண்டுச்சென்ற ஈமான் துணைச் செயலாளரிடம் “இன்று இந்த இறுதிச் சடங்கினைச் செய்ய எங்கள் கிராமத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேலுள்ளகுடும்பங்கள் வேலைக்கு கூட செல்லாமல் உடலை எதிர்பார்த்திருந்தோம்.எங்கள் உறவினரின் பிரேதத்தை உரிய நேரத்தில் கொண்டுவந்து எங்களுக்கு உதவிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை
எனக் கண்ணீர் மல்க தங்களது நன்றியினை நெகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் துபை அரசாங்கம், துபாய் காவல்துறை மற்றும் இந்திய தூதரகம் என அனைத்து தரப்பினரின் வலுவான ஆதரவே எங்களின் இந்த ஏழைகளுக்கான மதம் கடந்த மனிதநேய உதவிக்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தது. அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் என இந்நிகழ்வு குறித்து பேசிய ஈமான் அமைப்பின் செயலாளர் குத்தாலம் லியாகத் அலி அவர்கள் பெருமிதம் தெரிவித்தார்.
துபாய் ஈமான் அமைப்பின் இது போன்ற தொடர்படியான தொண்டுகள் நிறைய பதிவதற்கும் பகிர்வதற்கும் இருந்தாலும் இதற்கு முந்தைய நிகழ்வாக துபாய் மருத்துவமனையில் ஐந்து மாதத்திற்கும் மேல் சுயநினைவிழந்து இருந்து பின் சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலைத்தேறிய ஆதரவற்ற ஏழை நோயாளி பெரம்பலூர் துரைவீராசாமி என்பவரை அவரின் குடும்பத்துடன் சேர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

16 ஜனவரி 2015

மனசெல்லாம் மாட்டுப் பொங்கல்


மனசெல்லாம் மாட்டுப் பொங்கல்:

சின்னஞ்சி
று வயதினிலே
பொங்கல் திருநாள் வந்தாலே
குதூகளித்து நிற்போம்;
மறுநாள் மாட்டுப்பொங்கல்
மட்டில்லா மகிழ்ச்சியில்
கட்டில்லாது ஆடிடும் மனம்!

****
எங்கள் வீட்டில்
மாடுகள் இருந்தது
காலையிலேயே  உற்ச்சாகம் ஊஞ்சலாடும்,
வண்டிக்காரர்கள் வருவார்கள்
காளைகளை குளத்திற்கு ஓட்டிச்சென்று
நீரில் முங்கி ஊறவிட்டு 
வைக்கோலால் தேய்த்துக்குளிப்பாட்டி
சாலையோரம் ஓட்டிவர…..
மாடுகளில் மனமிழந்து
என்னையே  நான் மறந்து -கூடவே
பின்னால்  நானும் நடப்பேன்.

****
குளிப்பாட்டிய மாட்டிற்கு
களிப்பூட்டிடும் மகிழ்ச்சியுடன்
புதுக்கயிறு மாற்றி
வண்ணவண்ணமாய்
வாங்கிவந்த காகிதமாலையை
அய்யாசாமி மூப்பனாரும், ராஜேந்திரனும்
கலியபெருமாளும் காளிமுத்துமாக
நேர்த்தியாக கட்டுவார்கள்.
உடலெங்கும் வண்ணப்பொட்டிட்டு
கொம்பிற்கும் கம்பீர அலங்காரங்கள் செய்ய
பக்கத்திலிருந்து மெய்மறந்து 
பார்க்கும் எனக்கு பரவசம் கூடிடும் 
பறவையாய் மனம் மாறிடும்.
அடடா.. அத்தனை  செலவையும்
முத்தென ஒரு புன்னகையோடு
அத்தாவெனும் என் பாட்டன்
அழகுறவே செய்வார்!

****
எங்கள் வீட்டுக்
கன்றுக்குட்டிக்கு மட்டும்
நானே  அதைக் குளிப்பாட்டி
நயனுற அத்தனையையும் செய்து
அத்தைத் திருநாள்தனிலே
கையில் கயிறுபிடித்து
தெருவழியாய் வீட்டிற்கு ஓட்டிவருவேன்
கன்றுக்குட்டியென துள்ளிடும் மனதெனது.

****
குடியாவனவர் வீதிகளுக்கு சென்றாலோ
விடிகாலையிலேயே அத்தனை மாடுகளுக்கும் 
அமர்க்கள  அலங்காரம்
கழுத்துகளில் சலங்கைச்சாரம்
கொம்புகளுக்கு எண்ணைத்தடவி
பளபளக்கும் சில மாடு
வண்ணங்கள் பல தீட்ட
பலக்கொம்பில் அழகொளிரும்.

****
வண்ணச்சாயம் 
வகைவகையாய் தோரணம்
தொகைத் தொகையாய் எழிற்கூட்டும்
மாட்டுவண்டி ஏர்கலப்பை
எல்லாவற்றுக்கும் கூட.

****
பிறகு,
காலையிலேயே அன்றைக்கு
காளைகளுக்கு சிறப்பு உணவு
வாழைப்பழம்
பருத்திக்கொட்டை 
புண்ணாக்கில் பலவகைகள்
என எல்லாமும் கொடுப்போம்!
மாடுகளும் மகிழும்
மனமெல்லாமும் மகிழும்

****
இன்றோ..!மாடும் இல்லை
மாட்டு வண்டியும் இல்லை
பசுவும் இல்லை கன்றும் இல்லை
நிலமும் இல்லை விவசாயமும் இல்லை
அப்படியே இருந்தாலும்
உழுவதற்க்குக் கூட வாகனங்கள் தான்
பிறகு ஏன் மாட்டுப்பொங்கல்?
பெயரில் மட்டும்!

****
அந்தோ!
அந்தநாளின் அழகிய நினைவுகளை
எங்கனம் கடப்பதாம்!
மனசெல்லாம் இருந்து
மனசினை இறுக்கும் கனவுகளை
எவ்விடம் துறப்பதாம்!


 -வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

03 ஜனவரி 2015

மீலாது குறித்து அபத்தம், "சமரசம்" சிராஜுல் ஹசனுக்கு பதில்.


மார்க்க அடிப்படையில்
 
நபிகளாரின் பிறந்த நாள் விழா 
(மீலாது விழா)கொண்டாடுவது பித்அத்-
அதாவது நூதன வழிகேடு என்றும்
அதை அறவே தவிர்க்க வேண்டும் என்றும்
அஹ்லே ஹதீஸ் இயக்கக்ததைச் சேர்ந்த
ஆலிம்கள் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்கள்.
நபிகளாரின் பிறந்த நாள் விழா என்றில்லாமல்
அண்ணல் நபிகளாரை
அறிமுகப்படுத்தும் விழா என்று
நிகழ்ச்சிகளை நடத்தலாமே?
மீலாது விழா என்னும் பெயரில்
பாட்டுக் கச்சேரி, மவ்லூது ஓதுவது,
அன்னதானம் என்றெல்லாம் நடத்துவதால்தான்
சிலர் மீலாதை எதிர்க்கிறார்கள்.
இந்த அநாச்சாரங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு
நபிகளாரை அறிமுகப்படுத்தும் வகையில்
நிகழ்ச்சிகளை நடத்துவதில்
தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
-சிராஜுல்ஹஸன்
 • 16 hrs · Like
 • J Mohaideen Batcha இப்போது தான் பார்த்தேன் சிராஜுல் ஹசனின் மீது வைத்திருந்த அபிப்ராயமே போய்விட்டது, என்னய்யா... மீலாதை எதிர்ப்பவர்களின் மனநிலை, உணர்வு, அவர்களின் அரசியல் மற்றும் பின்புலம் இவைகளெல்லாம் தெரியாதவரா இவர்,மேலும் அவர்களின் தவறான வழிநடத்துதலால் இன்று அறிவிழந்த மிக மோசமான இளைஞர் பட்டளத்தை உருவாக்கி இருப்பது சமூகத்திற்கு மிகக் கேடு இல்லையா.. 

  சிராஜுல் ஹசன் மிக முற்போக்கு கருத்தை எடுத்து வைக்கிறார்.. இஸ்லாமியர்கள் படம் எடுத்தால் என்ன.. இசையை இவர்கள் எப்படி ஹராம் என்று சொல்கிறார்கள், முஸ்லிம்கள் ஏன் பிற்போக்காக ஆகிக்கொண்டிருக்கிறார்கள் , இவர்கள் ஏன் தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்றெல்லாம் தொடர்பதிவு போடுகிறார். உங்கள் பதிவெல்லாம் சரி.. ஆனால் இந்த மாதிரியான் பின்னடைவுக்கு, பிற்போக்கு சிந்தனைக்கு என்ன காரணம்.. யார் காரணம் இவர்கள் தானே.. அப்படி இருக்கையில் இவர்கள் மீலாதை எப்படி ஏற்பார்கள் என்று கூடவா இவருக்கு தெரியவில்லை.
  இவர்கள் எதை.. எதை இன்றளவும் விவாதித்து ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்... 

  அறிவாளிகளாக காட்டிக்கொள்ளும் எல்லோரும் கடைசியில் கலனிப்பானையில் தான் கை வைக்கிறார்கள்.
  13 hrs · Edited · Like · 1
 • J Mohaideen Batcha மார்க்கத்தை எல்லாம் விட்டுவிட்டு ஒரு தனி மனிதருக்கே நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் எவ்வாறு உதவும், அவனை சீர்படுத்தும் என எண்ணினாலே அவனை அறியாமல் நபிகள் நாயகத்தின் மீது ஒரு கனிவும், நன்றியும் வரும்.
  13 hrs · Like · 2
 • J Mohaideen Batcha மார்க்க அறிஞர்கள் எதை தான் கண்டிக்காமல் இருந்தார்கள்.. நீங்கள் யாரை மார்க்க அறிஞர்கள் என எடுக்கிறீர் என்பதை முதலில் தெளிவு படுத்த வேண்டும்... மார்க்க அறிஞர்களிடமிருந்து தான் பெரும்பாலான பிரச்சனைகள் வருகிறது, இன்றைய சமூக பிளவுக்கு காரணமும் மார்க்க அறிஞர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் தான். மெய்யான மார்க்க அறிஞர்கள் மிக சொற்ப்பமாகிவிட்ட நிலையில் எவராவது தாடியும் தலைப்பாகையும் வைத்துக்கொண்டு குர் ஆனை, ஹதீஸை பேசினால் மார்க்க அறிஞர் என சொல்லும் காலம் இது.
  13 hrs · Like · 1
 • J Mohaideen Batcha நபிகள் நாயகத்தின் பிறந்த் நாளை கொண்டாட விவாதம் புரியும் சமூகம் நபியின் சமூகமா... ஐயோ... நாசம்.
  13 hrs · Like · 1

  • 4 hrs · Like
  • J Mohaideen Batcha எது எதுக்கோ கூட்டம் போடுவான்.. எது எதுக்கோ நாளை பொழுதை செலவிட்டு மொத்த உழைப்பையும் கொட்டுவான்.. ஆனால் உன்னை மனிதனாக்கிய... உனக்கு நல்ல கொள்கை கோட்பாடுகளை வழங்கிய ஒரு மனிதப்புனிதரை நன்றி உணர்வோடு ஒரு கனம் கொண்டாடு என்றால் .. அப்போது தான் பித்அத், கூடும், கூடாது என சட்டம் பேச வருவான்... கேவலம் தன்னை மிக உயர்வாக்கிய எனைய சமூகத்தைவிட சிறப்பாக வாழ வைத்த தன் தலைவரை மறந்த, மறைக்க அல்லது காழ்ப்புணர்வு கொண்ட கேடுகெட்ட சமுதாயம் என்றால் அது இஸ்லாமிய பெயர் தாங்கிய சமுதாயம் தான். சில நேரங்களில் இப்படி பட்ட அறிவுக்குருடர்களின் சமுதாயத்தில் பிறந்ததிற்காக நான் வெட்கப்படுகிறேன்.
   3 hrs · Edited · Like · 1

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

துபாய் ஈமான் அமைப்பின் மீலாதுவிழா - 2015

துபாய்: துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் நபிகள் நாயகம் பிறந்த மீலாது பெருவிழா நிகழ்வு துபாயின் லூத்தா மஸ்ஜித் (குவைத் பள்ளி) -அமைப்பின் துணைபொது செயலாளர் முஹம்மது தாஹா தலைமையில் மற்றும் ஈமானின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஏர்வாடியை சேர்ந்த முஹம்மது இப்ராஹிம் பாகவி பேசியதாவது,
நபிகள் நாயகத்தின் வாழ்வில் முறை, அவர்களின் சகிப்புத்தன்மை, நபிகள்நாயகம் வாழ்வில் கடைபிடித்த பொறுமை, எல்லா சமூகத்தோடும் மிகுந்த நேசத்தோடும் நட்புறவோம் நடந்த வரலாற்று சம்பவங்கள், பெற்றோர்களுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அளித்த சிறப்பான இடம், குடும்பங்களில் நபிகள் நாயகம் எவ்வாறு மனைவி, மக்களுடன் நடந்தார்கள்.. மேலும் எவ்வாறு சமுதாயத்திற்கும் நடக்க அறிவுறுத்தினார்கள் என்பன போன்ற பல விடயங்களையும் மிக முக்கியமாக நபிகள் கோமான் என்றை அறிவுச்சுடரை எப்படி போற்ற வேண்டும்.. அந்த அறிவின் மூலம் நம் அறியாமை இருள் எங்ஙனம் விலகும், நபிகள் நாயகத்தைப் பற்றி இறைவன், அவரது தோழர்கள், அறிஞர்கள் மற்றும் கவிஞர்கள் என எல்லா தரப்பினரின் கூற்று எப்படி இருந்தது, அவர்களை அன்பு வைப்பதனினால் மனிதன் பெரும் சிறப்புக்கள் என்ன என்பன போன்ற அருமையான உரையாக நிகழ்த்தினார்.
பிறகு அமீரக மற்றும் இந்திய தேசநலன் வேண்டியும் உலக அமைதி வேண்டியும் எல்லோரின் மன, உடல் நலப்பேறு மற்றும் தேவைகளுக்காகவும் துஆ (பிரார்த்தனை) செய்யப்பட்டு பிறகு வந்தவர்கள் எல்லாம் நெகிழ்வாக சலாம் பைத்து என்னும் சோபனப்பா ஓதி விழா நிறைவாகியது.
விழா சரியாக மாலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பத்துமணிக்கெல்லாம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுசெயலாளர் குற்றாலம் லியாக்கத் அலி வழிகாட்டுதலில் ஈமான் கல்ச்சுரல் சென்டர் அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், விழாக்குழு செயலாளர் ஹமீது, ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், நிகழ்ச்சிகளின் செயலாளர் சாதிக், ஊடகத்துறை ஒருங்கினைப்பாளர் சேக் ஹிதாயத்துல்லா, அட்மின் செயலாளர் அப்துல் ரசாக், உள்ளிட்ட ஈமான் நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் அமீரக‌ காயிதேமில்லத் பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான், நிர்வாகி வழுத்தூர் முஹைதீன் பாட்ஷா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

எழுத்தாக்கம் -வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

01 ஜனவரி 2015

2015 புத்தாண்டு வாழ்த்து


புத்தாண்டை வரவேற்போம்:
என்ன தான் நமக்கென இனத்தின் காலங்காட்டியாக சித்திரை,வைகாசி இருந்தாலும், சமயம் சார்ந்த ஹிஜ்ரி காலங்காட்டி இருந்தாலும் நாம் நமது வாழ்வியல் நிக்ழ்வுகள் எல்லாவற்றுக்கும் கிபி எனும் ஆங்கில காலங்காட்டியைத்தான் பயன்படுத்தி வாழ்கிறோம்.. அது சார்ந்தது தான் பிறந்த தேதி முதல் யாரின் இறப்புத்தேதி வரை,
சம்பளத் தேதி முதல்...சமயல்வாயு வந்த தேதி வரையுங்கூட இந்த காலங்காட்டித் தான்.
ஆக பிறக்க இருக்கும் புத்தாண்டை .. பலர் மிதமிஞ்சிய வியாக்யானங்கள் கொடுத்து நானொரு மேதை என்பதாக சொல்லிக்கொண்டு வாழ்த்த மாட்டேன் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.இதிலும் பலர் நாளை பழையதாகிப்போகும் ஆண்டுக்கு என்ன வாழ்த்து வேண்டிக்கிடக்கு என்கின்றனர், அந்த மேதைகள் அப்படியே இருந்து கொள்ளட்டும்.
என்னைப் பொருத்தவரை எல்லாமும் பழையதாகும் தான் ஆனாலும் புதிது என்றாலே அந்தப் புதிதின் புத்துணர்வு, மகிழ்ச்சி எல்லாம் நம் மனதையும், உடலையும் மகிழ வைக்கும் ஆற்றல் பெற்றவை இல்லையா, ஒரு புதிதாய் மலர்ந்த ரோஜாவைப் பார்க்கும் போது ஏற்படும் மனக்கிளர்வைப் போல.. புதிய மணவாட்டியைப் பார்க்கும் போது மயங்கிடும் மணாளன் போல, நம்மோடு உடன்பட்டிருக்கும் ஆங்கில காலங்காட்டியின் புதியதொரு ஆண்டை வரவேற்போம்.

*******              *******          *******             *******

2015 -ஆம் புத்தாண்டுக் கவிதை : 

பிறந்திருக்கும் இந்த 2015 -ஆம் புத்தாண்டு

சிறப்புக்கள் பல கொணரட்டும்..
சீரிய ஆண்டாய் திகழட்டும்.
*
பிறக்கும் ஆண்டு சிறக்கட்டும்
தட்டிடும் கதவுகள் திறக்கட்டும்
*
தொடுபவை எல்லாம் துலங்கட்டும்
தூயோன் அருளால் இலங்கட்டும்
*
வளங்கள் எல்லாம் சேரட்டும்
பலங்கள் எல்லாம் கூடட்டும்
*
செல்வங்கள் எல்லாம் சூழட்டும்
செவ்வனே எல்லாம் நீளட்டும்
*
உடல்நலம் நன்றே ஓங்கட்டும்
உறவுகள் எல்லாம் வாழட்டும்
*
மக்கள் மகிழ்ந்தே ஆடட்டும்
துக்கம் துயரம் ஓடட்டும்
*
அறிவின் ஞாயிறு மலரட்டும்
அறியாமை மக்கள் தெளியட்டும்
*
தேசம் ஒன்றாய் இருக்கட்டும்
துவேச மாயை இருளட்டும்
*
பிறர் நலம் காக்கவும்
பிறர் மகிழ்ச்சிக் காக்கவும்
நம் உடல் நலம்
நம் மனநலம் இரண்டினையும்
நாமே காப்போம்!
நலமே வாழ்வோம்..!!
*
இனியும் பல.............
புத்தாண்டுகள் காண்போம்.
எல்லோரும் வாழ்க!
*-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா