
அறிவுதரும் ஆசான் பெருமக்களே..!
எங்களின் வாழ்வெனும்
வண்டிக்கு அச்சாணி போல..
எங்களின் வாழ்வெனும்
எங்களின் வாழ்வெனும்
கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல
அறிவு நிறைந்த படிப்பினைகளையும்
அனுபவம் வாய்ந்த அரியவைகளையும்
அனுபவம் வாய்ந்த அரியவைகளையும்
மன்னன் புலவனுக்கு தரும் பொற்குவியல் போலத்தந்து
சுண்ணாம்புக் கட்டியால் கரும்பலகையில்
உன்னதப்புரட்சி செய்பவர்கள் நீங்கள்!
நீங்கள் கற்றவைகளை எல்லாம்
எங்களையும் கசடறக் கற்கச் செய்து
சேற்றுநீரைச் சிறந்த நீராக்கி..
ஒழுக்க உண்மைகளை ஓயாதுரைத்து
மனதில் பதியவைப்பது
உங்களின் திருச்சமூகமன்றோ!
உங்களின் திருச்சமூகமன்றோ!
எங்கள் வாழ்க்கை பயணத்தில்
வசந்த காலத்தை உருவாக்க எண்ணி
தங்கள் நிகழ்காலத்தையே
தியாகம் செய்யும் வள்ளல்களே
பாரி..ஓரி.. என்ன அவர்களை விட
நீங்கள் தான் பன்மடங்கு உயர்ந்தவர்கள்!
சாதனையாளர்கள் பலரின்
வெற்றிக்கு பின்னால் சப்தமிடாமல்
பின்னால் மறைந்திருந்து
பின்னால் மறைந்திருந்து
சரித்திரம் படைத்துக்கொண்டிருப்பவர்கள்
நீங்களன்றோ!
நீங்களன்றோ!
எங்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கவே..
இருள் விளக்கத் தீக்குளித்து
தீபஒளி இயற்றிடும் தீக்குச்சிகள் வேறுயாரோ!
அற்றங்காக்கும் கருவியாம் அறிவு
அறிவுசார் சமூகத்திற்கு ஊட்டியவர்களே
நீங்கள் தானே!
ஆசிரியர்களுக்கு
குடும்பக்கட்டுப்பாடெல்லாம்
இல்லை என்பேன்;
நீங்கள் தானே!
அருமை ஆசான்களே..!
உங்கள் ஆத்திரம் கூட
எங்கள் கோத்திரத்திற்கு
நல்ல சூத்திரமாக அமைந்து
நேர்த்தியாய் செய்திடுமே வாழ்வை!!ஆசிரியர்களுக்கு
குடும்பக்கட்டுப்பாடெல்லாம்
இல்லை என்பேன்;
நாங்கள் அனைவரும்
உங்களின் பிள்ளைகள் என்றான பின்!
உங்களின் பிள்ளைகள் என்றான பின்!
கட்டுக்கடங்காமல் சுற்றிச்த்திரிந்தவனை,
கிணற்றுத் தவளையாய் கத்திக்கிடந்தவனை ,
குறைக்குடமாய் கூத்தாடியவனை ,
நன்னெறி புகட்டி
மலர்ந்த மல்லிகையாய்
மணங்கமழ வைத்த எம் ஆசான்களை
என்னென்றும் போற்றி..!
மனமேடையெனும் ஆசனத்தில்
எப்போதும் அவர்கள்தானென்றே ஏற்றி..!
என்றென்றும் என் நெஞ்சில் நிறைந்த ஆசான்களுக்கு வந்தனங்களும்.. வணக்கங்களும் உரித்தாகுக!.
மனமேடையெனும் ஆசனத்தில்
எப்போதும் அவர்கள்தானென்றே ஏற்றி..!
என்றென்றும் என் நெஞ்சில் நிறைந்த ஆசான்களுக்கு வந்தனங்களும்.. வணக்கங்களும் உரித்தாகுக!.
-ஜே.எம்.பாட்ஷா
வழுத்தூர், செளக்கத்துல் இஸ்லாம் பாலிய முஸ்லிம் சங்கம் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் போது நடந்த கவிதைப்போட்டிக்காக 1994-ஆம் ஆண்டு எழுதிய கவிதையின் சில பாகங்களை சற்றே சரி செய்து பதித்திருக்கிறேன், அதில் ஆருதல் பரிசு தான் கிடைத்தது என்றாலும் எனக்கு அது ஆன்ற பரிசாக தோன்றியது, (முதல் மூன்று பரிசுபெற்ற கவிதைகள் மிக அருமையா என்ற கேள்விக்கு நான் போகவில்லை) 'இதனால் சகலமானவர்களுக்கும்' என்ற வைரமுத்துவின் கவிதை புத்தகம் தந்தார்கள். பரிசு வழங்கும் விழாவின் போது எனது ஆருயிர் பாட்டனார் (தாய் வழி ) சி.தா. சுல்தான் முஹைதீன் அத்தா அவரகள் வருகை தந்து உவகை அடைந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்த ஒன்று. நான் என் கவிதைக்காக வாங்கிய முதல் பரிசு அது தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக