29 ஜூன் 2014

ரமலான் முபாரக்!


அடியெடுத்து வைக்கிறோம்
அருள் ரமலான் மாதத்தில்,

முடிவெடுத்திடுவோம்
அதனால் நாம் சிறப்பாக

துடிதுடிப்புடனே சோர்விலாமல்
தூயபல செயலாற்றி

படிப்படியாக பயனுளதாய்
படைத்தவனுருள் பெற்றிடுவோம்.

இடிமுழக்க திருக்குர் ஆன்
இனியமொழி தினம் இசைத்தும்

ஈடில்லா நபிமணிமேல்
இதய சோபனம் நிதம் துதித்தும்

ஓடி ஓடி தானம் செய்தும்
நாடி வருபவரை ஆதரித்தும்

விடிவெள்ளி தோன்றுவரை
விழித்திருந்து அறம்புரிந்தும்

அடிப்படையில் ஐந்தினையும்
ஆண்டவனுக்காய் தினம் காத்தும்

பிடிவாதமாய் பிறர்நலன்காத்து
பேணிடுவோம் உறவின் உயிர்காற்று

நொடிநேரமுமே சைத்தானின்
சூழ்ச்சிக் கிறையாகது இறைவா நீ காப்பாற்று!!!

என்றும் எப்போதும் நபிகள் நாயகம் திருமீதில்
இறைசாந்தி நிலவட்டுமாக. ஆமீன்.

ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

27 ஜூன் 2014

முகநூல்!

எத்தனை சிந்தனை
எத்தனை கோணம்

எத்தனை நிந்தனை
எத்தனை கோணல்

எத்தனை போதனை
எத்தனை காணல்

எத்தனை உந்துதல்
எத்தனை சிந்துகள்

எத்தனை முத்துக்கள்
எத்தனை சிப்பிகள்

எத்தனை குப்பைகள்
எத்தனை கோபுரம்

எத்தனை அறிவுகள்
எத்தனை புரிதல்கள்

எத்தனை செய்திகள்
எத்தனை நெய்தல்கள்

எத்தனை நட்புகள்
எத்தனை வியப்புக்கள்

முகநூல் ஒரு போதி!! - அதன்
குருகுலத்தில் உலகின் பாதி!!!

முகநூல் ஒரு வியாதி!!! -
அது இல்லை எனில் பலருக்கு ஆகிவிடும் பேதி!!! பேதி!!! பேதி!!!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

21 ஜூன் 2014

வேற்றுமையில் ஒற்றுமை!

வினாடிகள் தோறும் வினோத மாற்றம் காணுகிறது அண்டம்.

ஒரே மாதிரி என்பது என்றும் நிலைக்காதது.

ஒரே மாதிரிகளில் கூட எண்ணற்ற வேறுபாடு என்பது தான் பேருண்மை.

வேறுபாடுகளையும் சூழ்நிலை மாற்றங்களையும் எல்லா உயிர்களும் எதிர்கொண்டே ஆகவேண்டும் இன்றைய பாஜக அரசை இந்தியர்கள் ஏற்றிருப்பதைப்போல!

காலங்கள் தந்த எத்தனையோ மாற்றங்களை தாங்கியப்பின்னும் எஞ்சி நிற்பது தான் இன்றைய பூமி! 

வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பது தான் இந்தியாவின் தனிப்பெருமை!

ஒரே நாடு! ஒரே மொழி! ஒரே சட்டம்! ஒரே மோ....டி என்பதெல்லாம் செல்லாதவைகள் என காலம் தீர்ப்பு வழங்கும்!

அதுவரை ஆர் எஸ் எஸ் ஆனதெல்லாம் செய்யட்டும்.

நாளைக்காக இதயம் உள்ளவர்களும் நடுநிலையாளர்களும் அமைதியோடு புதிய வழி வகுக்கட்டும்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

லல்லுவின் ரயில்வே மீண்டும் வருமா !?


படிக்காத ஆள், கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் லாயக்கு, மாட்டுத்தீவண ஊழலில் திளைத்தவர் என்றெல்லாம் எள்ளி நகையாடப்பட்டவர் தான் இந்திய வரலாற்றிலே எப்போதும் நஷ்டத்தில் ஓடி.. ஓடியே அதிலிருந்து மீள முடியாது என இருந்த ரயில்வே துறையை அதிலிருந்து மீட்ட
ெடுத்தார் மட்டுமல்லாமல் யாரும் நம்ப முடியாத அளவிற்கு ரயில் கட்டண உயர்வில்லாமல் அதிலிருந்து பன்மடங்கு லாபமீட்டி இந்திய அரசையும், உலகையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தவர். அந்த படிப்பறிவில்லா பாமரரின் நிர்வாகம் ரயில்வேயின் பொற்காலம் என்றால் மிகையில்லை. அவரின் நிர்வாகத்தில் பல புதுமைகளை ரயில்வே கண்டது, அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து நிர்வாகத்தை சீர்படுத்தினார். மண்ணாலான டீ கப்புகளை ரயில்வேயில் கொண்டுவந்து அவர்களது வாழ்விலும் பூ பூக்க செய்தார் லல்லு.

ஆனால் இன்றோ பொற்கால அரசை நடத்துவோம் என அட்சிக்கு வந்து கற்காலத்தை நோக்கி இந்தியாவை கொண்டு செல்லும் இவர்கள் இந்திய ரயில்வேயை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லத்தான் இந்த விலையுயர்வு என எப்போதும் போல் ஒரு புதிய விளக்கம் சொல்கிறார் ஜெட்லி. ஒரு இட்லிக்கு கூட வழியில்லாமல் இருக்கும் நம் இந்தியர்களை இவர்கள் நினைக்கவில்லை என்பதும், ஒரு மாபெரும் புரட்சி வரப்போகிறது என எண்ணி இவர்களுக்கு ஓட்டுப்போட்டவர்களுக்கு இவர்கள் பொருளாதார வரட்சியை தான் பரிசளித்திருக்கிறார்கள். இதிலே இன்னும் கசப்பு மருந்தினை வேறு கொடுக்கப்போகிறாராம் மோடி... என்ன விசமென்று தெரியவில்லை.
ஆளக்கூடியவர்களே கொஞ்சமாவது வாழும் நாடாக இந்தியாவை விட்டுச்செல்லுங்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா