21 ஜூன் 2014

லல்லுவின் ரயில்வே மீண்டும் வருமா !?


படிக்காத ஆள், கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் லாயக்கு, மாட்டுத்தீவண ஊழலில் திளைத்தவர் என்றெல்லாம் எள்ளி நகையாடப்பட்டவர் தான் இந்திய வரலாற்றிலே எப்போதும் நஷ்டத்தில் ஓடி.. ஓடியே அதிலிருந்து மீள முடியாது என இருந்த ரயில்வே துறையை அதிலிருந்து மீட்ட
ெடுத்தார் மட்டுமல்லாமல் யாரும் நம்ப முடியாத அளவிற்கு ரயில் கட்டண உயர்வில்லாமல் அதிலிருந்து பன்மடங்கு லாபமீட்டி இந்திய அரசையும், உலகையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தவர். அந்த படிப்பறிவில்லா பாமரரின் நிர்வாகம் ரயில்வேயின் பொற்காலம் என்றால் மிகையில்லை. அவரின் நிர்வாகத்தில் பல புதுமைகளை ரயில்வே கண்டது, அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து நிர்வாகத்தை சீர்படுத்தினார். மண்ணாலான டீ கப்புகளை ரயில்வேயில் கொண்டுவந்து அவர்களது வாழ்விலும் பூ பூக்க செய்தார் லல்லு.

ஆனால் இன்றோ பொற்கால அரசை நடத்துவோம் என அட்சிக்கு வந்து கற்காலத்தை நோக்கி இந்தியாவை கொண்டு செல்லும் இவர்கள் இந்திய ரயில்வேயை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லத்தான் இந்த விலையுயர்வு என எப்போதும் போல் ஒரு புதிய விளக்கம் சொல்கிறார் ஜெட்லி. ஒரு இட்லிக்கு கூட வழியில்லாமல் இருக்கும் நம் இந்தியர்களை இவர்கள் நினைக்கவில்லை என்பதும், ஒரு மாபெரும் புரட்சி வரப்போகிறது என எண்ணி இவர்களுக்கு ஓட்டுப்போட்டவர்களுக்கு இவர்கள் பொருளாதார வரட்சியை தான் பரிசளித்திருக்கிறார்கள். இதிலே இன்னும் கசப்பு மருந்தினை வேறு கொடுக்கப்போகிறாராம் மோடி... என்ன விசமென்று தெரியவில்லை.
ஆளக்கூடியவர்களே கொஞ்சமாவது வாழும் நாடாக இந்தியாவை விட்டுச்செல்லுங்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

என்னமோ போங்க....
உங்க காழ்ப்புணர்ச்சி மட்டும் தான் தெரியுது
இப்ப ரயில் கட்டணம் ஏத்திலணா கூட நீங்க இந்த அரசை பாராட்டப்போறதில்ல

அன்பு துரை சொன்னது…

/* லல்லுவின் ரயில்வே மீண்டும் வருமா !? */

நிச்சயம் வராது.. 2004-2009 - தமிழகத்தை சேர்ந்த R.வேலு மற்றும் A.K.மூர்த்தி ஆகியோர் இணை அமைச்சர்களாக இருந்தார்கள்.
இப்போது யார் இருக்கிறார்கள்..!?