03 ஜனவரி 2015

துபாய் ஈமான் அமைப்பின் மீலாதுவிழா - 2015

துபாய்: துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் நபிகள் நாயகம் பிறந்த மீலாது பெருவிழா நிகழ்வு துபாயின் லூத்தா மஸ்ஜித் (குவைத் பள்ளி) -அமைப்பின் துணைபொது செயலாளர் முஹம்மது தாஹா தலைமையில் மற்றும் ஈமானின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஏர்வாடியை சேர்ந்த முஹம்மது இப்ராஹிம் பாகவி பேசியதாவது,
நபிகள் நாயகத்தின் வாழ்வில் முறை, அவர்களின் சகிப்புத்தன்மை, நபிகள்நாயகம் வாழ்வில் கடைபிடித்த பொறுமை, எல்லா சமூகத்தோடும் மிகுந்த நேசத்தோடும் நட்புறவோம் நடந்த வரலாற்று சம்பவங்கள், பெற்றோர்களுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அளித்த சிறப்பான இடம், குடும்பங்களில் நபிகள் நாயகம் எவ்வாறு மனைவி, மக்களுடன் நடந்தார்கள்.. மேலும் எவ்வாறு சமுதாயத்திற்கும் நடக்க அறிவுறுத்தினார்கள் என்பன போன்ற பல விடயங்களையும் மிக முக்கியமாக நபிகள் கோமான் என்றை அறிவுச்சுடரை எப்படி போற்ற வேண்டும்.. அந்த அறிவின் மூலம் நம் அறியாமை இருள் எங்ஙனம் விலகும், நபிகள் நாயகத்தைப் பற்றி இறைவன், அவரது தோழர்கள், அறிஞர்கள் மற்றும் கவிஞர்கள் என எல்லா தரப்பினரின் கூற்று எப்படி இருந்தது, அவர்களை அன்பு வைப்பதனினால் மனிதன் பெரும் சிறப்புக்கள் என்ன என்பன போன்ற அருமையான உரையாக நிகழ்த்தினார்.
பிறகு அமீரக மற்றும் இந்திய தேசநலன் வேண்டியும் உலக அமைதி வேண்டியும் எல்லோரின் மன, உடல் நலப்பேறு மற்றும் தேவைகளுக்காகவும் துஆ (பிரார்த்தனை) செய்யப்பட்டு பிறகு வந்தவர்கள் எல்லாம் நெகிழ்வாக சலாம் பைத்து என்னும் சோபனப்பா ஓதி விழா நிறைவாகியது.
விழா சரியாக மாலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பத்துமணிக்கெல்லாம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுசெயலாளர் குற்றாலம் லியாக்கத் அலி வழிகாட்டுதலில் ஈமான் கல்ச்சுரல் சென்டர் அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், விழாக்குழு செயலாளர் ஹமீது, ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், நிகழ்ச்சிகளின் செயலாளர் சாதிக், ஊடகத்துறை ஒருங்கினைப்பாளர் சேக் ஹிதாயத்துல்லா, அட்மின் செயலாளர் அப்துல் ரசாக், உள்ளிட்ட ஈமான் நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் அமீரக‌ காயிதேமில்லத் பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான், நிர்வாகி வழுத்தூர் முஹைதீன் பாட்ஷா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

எழுத்தாக்கம் -வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: