31 மே 2022

பேராசிரியர் ஜவாஹிருல்லா சந்திப்பு

இன்றைய துபாய் இஃப்தார் நிகழ்வில் எங்கள் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ பேராசிரியர் ஜவாஹிருல்லா Jawahirullah MH அவர்களையும் பிரபல ஊடகவியலாளர் Senthil Vel அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சந்திப்பில் பேராசிரியர் அவர்களுக்கு அன்பு Abu Haashima அண்ணன் எழுதிய "ரபிய்யுல் அவ்வல் வசந்தம்" புத்தகத்தையும் ஊடகவியலாளர் செந்தில் அவர்களுக்கு என் நெஞ்சமெல்லாம் நிறைந்த பன்னூலாசிரியர் மறைந்த Yembal Thajammul Mohammad அண்ணன் எழுதிய பல விருதுகள் வென்ற "வீரம் செறிந்த இஸ்லாம்" எனும் அற்புத நூலையும் பரிசளித்தேன்.
விழாவில் இருவரின் உரையும் மிக நன்று.
அதில் சகோ.செந்தில் வேல் பேசும்போது, பாசிச சக்திகளை இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ள எப்படி தன்னை தயார் செய்துகொள்ள தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். இஸ்லாமியர்கள் படித்துவிட்டு அரசின் முக்கிய துறைகளுக்கு ஏன் வர தயக்கம் காட்டும் சமூகமாக உள்ளீர்கள்? பல இஸ்லாமிய இளைஞர்கள் தகப்பனார் வெளிநாட்டில் இருப்பதால் தானும் அங்கு போனால் போதுமென்ற மனநிலையிலேயே உள்ளனர் தன்னை சுற்றி நடக்கும் அரசியல் குறித்த விழிப்புணர்வு இல்லை ஏன்? ஊடகத்திற்கு வாருங்கள் அதில் ஏன் உங்கள் ஆர்வம் இல்லை என கேள்வி கேட்டு விடைபெற..,
பேராசிரியர் அதே பொருளில் தங்களின்பேச்சை தொடர்ந்தார். நபிகளார் காலத்தில் எப்படி அரசியல் விழிப்புணர்வு இருந்தது, கல்வியறிவிற்கு நபிகளார் கொடுத்த முக்கியத்துவம், பிறசமூக இணக்கம் குறித்து பேராசிரியர் பேசினார். பேச்சில் எங்கள் வழுத்தூரை இருமுறை குறிப்பிட்டும் நாங்கள் வந்திருப்பதையும் உரையில் சொன்னதும் மகிழ்வாக இருந்தது.
நிகழ்வில் அன்பு அண்ணன் அமீரக திமுகவின் Meeran Syed Siddiq மற்றும் அன்பு அண்ணன் முனைவர் @A Md Mohideen சந்தித்ததும் பெரும்மகிழ்வு.
என்னுடன் தம்பி Dawood Kalith மற்றும் Sabeer Ahamed கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடு செய்த லால்பேட்டை குழுவினருக்கு வாழ்த்துகள். நிகழ்ந்தவை சிறப்பு.
- ஜா.மு.



கருத்துகள் இல்லை: