
குயில்களின் கூவுதல்கள் எல்லாம்
குதூகலத்துடன் கூடியது தானென
நாமாக முடிவெடுத்தால்
அதெப்படி உண்மை..?
கூவுதல் மட்டுமே நாம் அறிவது – அதில்
கூறிடும் கூறுகள் குறித்து அறிந்தது யார்..?
நமக்கு வேண்டுமானால்
அதன் இதய ஓலம் கூட
இனிய இசையாக இருக்கலாம்!
அதற்கு மட்டுமே வெளிச்சம்
சில தருணங்களில் நம்முடைய நிலையும் இது தான், யார் அறிவார் நம் இதய வாசலை, நம்மைத் தவிர -ஜே.எம் பாட்ஷா
1 கருத்து:
\\அருமையான கவிதை. இசைக்கிறது இதயம். வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக