
நேர்மையின் சின்னம் காயிதே மில்லத்
வாய்மையெனும் வாளேந்தியவர் காயிதேமில்லத்
கட்டுப்பாட்டில் கத்திமுனை காயிதே மில்லத்
மதரஸத்துல் முஹம்மதியா
மலரும் நாளில் – எங்கள்
மன்னவருக்கு நூற்றாண்டு விழாவென்றால்
மகிழ்ச்சியில் துள்ளாதோ – எங்கள்
மானின மனங்கள்
நெல்லை மண் தந்தவர் தான்
நெஞ்சுரத்தில் வேங்கை தான்
புள்ளைக் குட்டிக் காகவும்
புறக்க வில்லை நேர்மைதனை,
எண்ணப்படி நினைத்திருந்தால்
எப்படியோ வாழ்ந்திருப்பார்.
அண்ணலாரை ஒன்றியதால்
அன்றொரு நாள் ஓரிரவு
அன்னையரின் வேண்டுகோளின்படி
அன்றிரவு முழுவதுமே
அழுத்தி விட்டார் காலதனை,
அன்னையரோ கண்ணயர்ந்தார் –எம்
மன்னவரோ அயரவில்லை
சுப்ஹூ வேலை எழுந்த அன்னை – எம்
சூஃபியாரின் செயலைக் கண்டு வியந்தார்
சுவன மதற்காக அவனிடத்தில்
கண்மணி காயிதே மில்லத்திற்காக
கரமேந்தி கண்ணீரோடு – ஆனந்தத்தில்
அப்பொழுதே துஆ செய்தார்.
சின்னவயதினிலேயே
சிறப்பதனை பெற்றவரின்
சிறப்பினை உணர்ந்த்தவே
வண்ணக்கோலம் கொண்டுள்ள – எம்
வழுத்தூரிலே வரலாற்றுப் பெருவிழாவென்றால்
வல்லவனின் வரமன்றோ!
ஜனநாயக நாட்டில்
ஜனங்களுக்காக உழைத்தவரென்றால் – எல்லார்
மனங்கவர்ந்த மன்னரேயன்றி – இம்
மாநிலத்தில் யார் இருப்பார்
காலத்தை வென்றக் காயிதே மில்லத்தைத் தவிர!
அரசியலில் வித்தகர் – முஸ்லிம்களுக்கு
அநீதி இழைக்கப்பட்டால் – எங்கள்
மகாநீதியரை யன்றி யார் இருப்பார்
ஆண்சிங்கமாய் சிரசு சிலிர்ப்பவர்
ஆன்மீகத் தந்தை நம் அமீரைத் தவிர
நேர்மையின் ஊற்று
நேசத்தின் அதிபதி
கண்ணியத்தின் காவலர்
புண்ணியம் சேர்த்த புதுமகனார்
நூற்றாண்டு விழாகாணும்
நூரே முஹம்மதின் பிரதிபலிப்பின்
புகழ் என்றும் மறையாது – இனியெம்
புன் முறுவல் நிலைத்திடுமே
உலகமெல்லாம் பரப்பிடுவோம்
உத்தமரின் புகழதனை.
அகவை 17. எங்கள் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் 17-06-1995 அன்று அல் மதரஸத்துல் முஹம்மதியா (ஹிப்ளு) புதிய கட்டிடத்திறப்பு விழா மலரில் நான் எழுதியக்கவிதை.
என்றும் உங்கள்,
1 கருத்து:
பெருந்தலைவரின் பண்புகளை படம் போட்டு தந்துள்ளீர்..இதை பேரவையின் வளைதளத்திலும் பதித்துள்ளோம் பாரீர்..!
கருத்துரையிடுக