கூட்டத்தோடு சேர்ந்து
ஆடி அசைந்து
நெளிந்து மகிழ்ந்திடும்
மரத்திற்கு தெரியாது,
தனி மரத்தின்
வெறுமை..,
ஏக்கம்..,
துக்கம்..,
ஆவல்...,
பெருமூச்சின் சூடு,
விழியோர கண்ணீர்..,
கனவுகளின் மீதுள்ள பிரார்தனை..
இவற்றின் வலி!
ஒற்றை மரத்தினது
மனதின் அதீத கனத்தினை
கூட்டத்தொகுப்பாய்
கூடிக்களிக்கும் மரங்கள்
காற்றின் ராகத்திற்கேற்ப
தூரத்திலிருந்து பார்த்து
உணராது நகைத்தவாறே கூட
ஆடிக்கொண்டிருக்கலாம்..
அவைகள்,
தனிமரத்தின் மிக தடித்து..
காலத் துக்கத்தில்
சிதிலமடைந்த
நினைவு பட்டைகளை
உரித்தா பார்க்க போகிறது..???
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
2 கருத்துகள்:
ஒற்றை மரத்தினது
மனதின் அதீத கனத்தினை
கூட்டத்தொகுப்பாய்
கூடிக்களிக்கும் மரங்கள்
காற்றின் ராகத்திற்கேற்ப
தூரத்திலிருந்து பார்த்து
உணராது நகைத்தவாறே கூட
ஆடிக்கொண்டிருக்கலாம்..//
வித்தியாசமான பார்வை ரசனை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பர் ரமணி அவர்களுக்கு,
கருத்துரையிடுக