27 ஆகஸ்ட் 2012

அண்ணன் தாஹாவின் மகனுக்கு வாகாய் ஓர் வாழ்த்து!


இன்று மணவிழா கண்ட மணமக்கள் எங்கள் 

அமீரக‌ காயிதே மில்லத் பேரவை-யின் 

செயலாளர் பாசமிகு அண்ணன் 

முஹம்மது தாஹா 

அவர்களின் புதல்வர் 


மணமகன் 
"முபாரக் அலி" 
அவர்கள் 

மணமகள் 
"நூரியா பானு" 
அவர்களுடன் 

பதினாறு செல்வங்களான

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

இவைகளை பெற்று  முன்னோர்கள் அறுதியிட்டு கூறியபடி பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல நாயனை பிரார்தித்து அவனது திருத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைகிவசல்லம், அவர்களது திருக்குடும்பத்தினர், சஹாபாக்கள் மற்றும் நல்லோர்கள் ஆசிகள் சூழ வாழ்கவென வாழ்த்துகிறேன்.

அன்புடன்

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


கருத்துகள் இல்லை: