26 ஜனவரி 2013
மறந்தது, மறுப்பது...!
24 ஜனவரி 2013
சத்தியத்தின் ஜனனம்
பல்லவி:
சத்தியத்தின் ஜனனம்-பொய்
சித்திரங்கள் மரணம்-இருள்
பக்தியெங்கும் தகனம்-மருள்
மிக்கவர்கள் சலனம்-அருள்
பொங்கிவந்த தருணம்-திரள்
மகிழ்ச்சியிலே நடனம்-மன
மகிழ்ச்சியிலே நடனம்.. நடனம்.. நடனம்.. - சத்தியத்தின்...
சரணம்:
பிறப்பில்லாத பேருண்மை
பிறவி எடுத்ததே
இளமை மூப்பு இவைகளெலாம்
வழமை ஆனதே
புலன் கடந்த பூர்வீகம்
உடல் எடுத்ததே
பார்வைப்பட உடலெடுத்து
பாதம் தந்ததே... பாதம் தந்ததே... - சத்தியத்தின்...
பாதம் தந்த சாதகமே
போதம் தந்ததே
போதமான ரகசியங்கள்
தூது வானதே
தூதுவான அரும்பொருளே
வேத மானதே
வேதமதின் விளக்கமிங்கு
பேதமற்றதே...பேதமற்றதே... - சத்தியத்தின்...
பேதமில்லா மாதவமே
கீத மானதே
கீதமான அழகுக்குரல்
மோகம் கொடுத்ததே
மோகமான மணித்துளிகள்
தாகம் தீர்த்ததே
தாகம் தீர்த்த முக்திநிலை
பேரின்பமானதே..பேரின்பமானதே.. - சத்தியத்தின்...
சித்தியான முக்திநிலை
சொர்க்கம் ஆனதே
சொர்க்கமதைத் தந்தவரும்
தாங்க ளல்லவா
தாங்கள் எங்கள் அன்புமிகு
நாத ரல்லவா
நாநிலங்கள் போற்றுகின்ற
நதரல்லவா.. நபிநதரல்லவா..! நபிநதரல்லவா..!! - சத்தியத்தின்...
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
பி.கு :
2000 லிருந்து 2002க்குள் எழுதி இருப்பேன். சரியாக நினைவில்லை
22 ஜனவரி 2013
சீரழியும் சமுதாயம்
முகநூலில் சில தினங்களுக்கு முன் நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹிவசல்லம்) நேசர்கள் வட்டத்தில் பதிவு செய்தது...
தமிழ் சமுதாய இஸ்லாமியர்களை இன்றைய நவீன இயக்கங்கள் சீரழித்துவிட்டது… அவர்களின் அறிவை மழுங்க செய்து முந்தைய அறிஞர்களை, ஞானத்திற் சிறந்த மேதைகளை எல்லாம் எள்ளி நகையாடக்கூடிய வகையில் இவர்களின் அறிவை அழித்துவிட்டனர்.. அறிஞர்களை மதிக்காத சமுதாயம் அறிவை ஏற்காத சமுதாயம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை, ஞானிகளை, மேதைகளை வெறுப்போடு இழிந்துரைக்கின்றனர் எனறால் இவர்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தான் பொருள்.
அறிஞர்களை ஏற்காதவர்கள் அறியாமை இருளில் இருப்பதாக தான் அர்த்தம், அறிவெனும் ஒளியை ஏற்காது அறியாமை இருளில் சமுதாயம் இருந்தால் ஒருகாலும் உருப்படாது என்பது திண்ணம். அந்த செயற்கரிய காரியத்தை தான் திறம்பட செய்து இளைஞர்களை, பெண்களை, குழந்தைகளை என சமூதாயத்தையே பாழுங்கிணற்றில் தள்ளி ஒரு நூற்றாண்டினையே மிக தீவிரமாக கரித்துவிட்டனர் இவர்களின் தலைவர்கள்!? இவர்களை பின்பற்றும் சமூகம் எப்படி வாழும் இனி வீழும் தான்!
அத்தகையவர்களின் அறிவீன சிந்தனைகளை நம் போன்ற நாயகநேசர்கள் மட்டுமே முறியடிக்க முடியும். வாருங்கள் ஆன்ற அறிவினை வளர்ப்போம்.. அல்லாஹ், ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) -ன் அவர்களின் தூய்மை சமுதாயம் படைப்போம். வளங்களும் நலங்களும் அப்போது மட்டுமே சூழும்.

12 ஜனவரி 2013
முகநூல் நிலைத்தகவல்கள் 2011 - 1
தங்கை சஃபிக்கா திருமணம் பிப். 06 - 2011
"இறையருளால் எனது அருமை சகோதரி அல்ஹாஜ் MJ பஷீர் அஹமது & ராபியத்துல் பஷீர், அவர்களின் செல்வ மகள் ஸஃபீக்கா ஷனோஃபர் MBA.,-நாச்சியார் கோயில் அல்ஹாஜ் அமீர்தீன் செல்வமகன் நெளஷாத் அலி MBA இவர்களின் திருமணம் 06-02-2011 நேற்று பாபநாசம் தாமரை மஹாலில் கோலாகளமாக நடந்தேறியதை மிக்க மகிவோடு பகிர்ந்துகொள்கிறேன். சீரும் சிறப்புமாக நடந்தேறிய எங்கள் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்து தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கிய நமது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ஒப்பற்ற தமிழ் மாநில தலைவர் 'முனீருல் மில்லத்' கே. எம்.காதர் மொகிதீன் M.A., Ex.M.P அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்பிக்கிறேன்.மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு மகிழ்வுடன் வாழ எல்லோரும் வாழ்த்தி துஆ செய்யுங்கள்
படத்தில்...
படத்தில்...
முனீருல் மில்லத்' கே. எம்.காதர் மொகிதீன் M.A., Ex.M.P அவர்களுடன் நானும் எனது தந்தை அரச்சலை ஜனாப்.ஜாஃபர் சாதிக்(வலது கடைசி) மற்றும் எனது பெரிய தந்தை அரச்சலை ஜனாப். குலாம் முஹைதீன் (வலதிலிருந்து இடதாக என் தந்தைக்கு அடுத்து)
இவண்,ஜே. முஹையத்தீன் பாட்ஷா
07-FEB 2011
ரபிய்யுல் அவ்வல்
"கடைத்தெருவில் ஒரு டீ வாங்கி கொடுத்தவரு நேரில் வந்துவிட்டால் நம்மை அறியாமலே உதடுகள் புன்னகை பூத்து, சலாம் சொல்லி நன்றி தெரிவிக்கும். இவ்வளவு உயர்வான சமூகமுறையை சொல்லித்தந்து சிறப்பான மார்க்கத்தில் நிலைபெறச் செய்த இறைவனே போற்றும், இறைவனே புகழை பிரஸ்தாபித்து உயர்த்திய அகிலங்கள் போற்றும் முஹம்மதரை.. அவர்களின் பிறந்த மாதமாம் ரபிய்யுல் அவ்வல் வந்து விட்டால் எங்கள் வாழ்வில் இறை ஒளியை ஏற்றிய மாநபியே என நன்றி உள்ள நெஞ்சங்கள் அவர்களின் புகழை பாடும்..பாடி உருகும்.. நன்றி கொன்ற நெஞ்சங்கள் எப்படி இதையெல்லாம் செய்யும்.. அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாவோடு இல்லாத ஏதோ வொரு அல்லாஹ் என்ற வார்த்தையை வம்பாக மட்டும் (தத்துவமோ யதார்த்தமோ அறியாமல் ) வைத்துக்கொண்டு ஈமான் இழந்து திண்டாடுபவர்கள், இவர்கள் குறித்து ஏராளமான நபி மொழி முன் அறிவிப்புகள் உண்டு." 13-FEB 2011
முஸ்லிம் லீக்
"இன்றைய அரசியலில் இஸ்லாமியரின் பாரம்பரியமிக்க பெரும் சக்தி, பல வியூகங்களால் தன் சாதுர்யத்தால் இது நாள் வரை படோடோபமில்லாது பலவற்றை சாதித்துள்ள சக்தி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்." 24-FEB 2011
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
06 ஜனவரி 2013
அன்பை மட்டுமே தேர்ந்தெடுத்த ஏ.ஆர் ரஹ்மான்!
இசைத்தமிழ் கண்ட தமிழ்கத்தில்
இசையை ரசிக்கும் தமிழர்களுக்கு பஞ்சமில்லை!
மெல்லிசையையும்
தேவராகத்தையும் ரசித்து
சொக்கிக்கிடந்த தமிழ் மண்ணில்
அதிரடி புயலொன்று வீசிற்று!
ஆம்!
அது பூவில் புறப்பட்ட புயல்
ரோஜாப் பூவில் புறப்பட்ட புயல்!
முதன் முதலாக புயலொன்று
ரோஜா கொடுத்தது அப்போதுதான்!
ரோஜாவின் தாக்கம்
மக்கள் இப்படியொரு புயலா
அதுவும் இசையில் இப்படி ஒருப்புயலா வென
அதிர்ந்து அதிசயித்து ஸ்தம்பிக்க வைத்ததனால்
புயலின் பெயரிலேயே
இசையை அழைத்தனர் தமிழர்
அவ்விசைக்கு "இசைப்புயலெ"ன்றனர்!
வந்த நாள் முதல் மையம் கொண்டது தான்
இன்னும் அதன் மையல் தீரவில்லை,
பொதுவாக புயல் கடல்விட்டு கரை தாண்டும்
தாண்டினால் வலுவிழக்கும்
இசைப்புயலோ...,
மிக்க வலுவுடன்
தமிழக எல்லை மட்டுமின்றி
தாரணி எல்லைகளை வளைத்துப்போட்டது
தொடர் வெற்றி குவித்தது.
இருபது ஆண்டுகளாய் இசைப்புயல்
தருகிறது எங்களுக்கு ஆன்மாவின் இசையை!
வருகிறது.. வருகிறது இனியும்
இன்னும் பல அற்புத பேரிசை!
செவி திறந்து கண்களை மூடி
நெஞ்சத்தின் வழியே இசைஉலகில்
சஞ்சரிக்க மட்டும் நாம் தயாராவோம்.
புயல் பல இசைப்பூக்கள் சொறியும்.
வாழ்த்துவோம் இன்று பிறந்த நாள் காணும்
மனிதர்களில் அன்பை மட்டுமே தேர்ந்தெடுத்த
"இசைப்புயல்" ஏ.ஆர் ரஹ்மானை!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)