28 மே 2015

எப்போது தான் இருப்பாயோ வெறுமனே ?



ஓய்வில்லாமல்
எதையாவது செய்துகொண்டிருப்பதே
உனக்கு வேலையாய் போய்விட்டது!
ஏ மனமே!
எப்போது நீ
ஏதும் ஓதாமல்
ஏதும் மோதாமல்
ஏதும் எண்ணாமல்
ஏதும் உண்ணாமல்
ஏதும் பாராமல்
ஏதும் சாராமல்
ஏதும் சோராமல்
ஏதும் சொல்லாமல்
ஏதும் கேளாமல்
ஏதும் கொல்லாமல்
ஏதும் துள்ளாமல்
ஏதும் துவளாமல்
ஏதும் விம்மாமல்
ஏதும் விலக்காமல்
ஏதும் நினைக்காமல்
ஏதும் பணிக்காமல்
ஏதும் விதைக்காமல்
ஏதும் ரசிக்காமல்
ஏதும் புசிக்காமல்
ஏதும் நசுக்காமல்

 இருப்பாயோ வெறுமனே ?

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

ஓய்வின்றி இயங்குவது
உள்ளம் - அதில்
உணர்வு உள்ளம் ஓய்வுக்கு வந்தாலும்
உணர்வற்ற உள்ளம்
ஓய்வுக்கு வருவதில்லைத் தான்!