27 ஜூன் 2011

இரங்கல்..!



என் தேனீரில் இறந்து மிதக்கும்

எறும்பிற்கே என்னால்

இரங்கல் செலுத்த முடியவில்லையே

ஐய்யகோ! வெள்ளத்தாலும்.. தீயாலும்..மழையாலும்

இன்னபிற இயற்கை சீற்றங்களாலும்

இன்னுயிர் நீர்த்த என் மனித சொந்தங்களுக்காய்

அழும் அளவு பலம் வாய்ந்தவன் நான் இல்லை!


நிலைமை இப்படி இருக்க,

அரசாள்வோரே!

உங்கள் நாற்காலிக்காக நாலாபுறம்

மனித உயிரின் மதிப்பு தெரியாமல்

கொன்று குவித்து இனம் துடைக்கும்

உங்கள் முயற்சி குறித்து நான் என் செய்வேனோ!



ஜே.எம்.பாட்ஷா

13-12-1996 : என் 18 ஆம் அகவையில் எழுதிய கவிதை


இன்னும் புரியும்


2 கருத்துகள்:

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

உண்மையில் இலங்கையிலும் மற்றும் உலகெங்கிலும் இன்று நடக்கும் மிக மோசமான மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்பாடுகள் இன்றும் என்னை மிக கவலைக்குள்ளாக்குகிறது.. என் இளவயது கவியானாலும் இதை இலங்கை தமிழர்களுக்காய் மெரினாவில் மெழுகு ஏநதி அஞ்சலி செலுத்திய இவ்வேளையில் அவர்களுக்காய் என் ஒரு சிறிய கவி மெழுகு..

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

சுற்றிலும் நடக்கும் சூடுகள் என்னை சுட்டெறித்த பொழுது என் இதயம் அழுதது..